கோவா சூப்
கோவா சூப் (Goan soup) என்பது இந்தியாவில் உள்ள கோவா, டாமன் மற்றும் டையூவின் இந்தோ-போர்த்துகீசிய உணவு வகைகளின் ஒரு சூப் ஆகும். இப்பகுதிகள் ஒரு காலத்தில் போர்த்துகீசிய இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது வந்தன. மேலும் இது போர்த்துகீசிய சூப்பின் தாக்கத்தால் உருவானது ஆகும்.[1]
இது கோழிக்கறி, சோரிஸ் சாசேஜ், வெங்காயம், பூண்டு, அரிசி, தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அனைத்துப் பொருட்களும் ஒரு சாஸ்பேன் அல்லது பிரசர் குக்கரில் ஒன்றாகச் சமைக்கப்பட்டு, கோழிக்கறிச் சாறு சேர்க்கப்படுகின்றது.[1]
கோவா பாரம்பரியத்தின்படி, வீட்டில் பிரசவித்த பெண்களுக்காகத் தயாரிக்கப்பட்டது. முதல் பிரசவத்திற்குப் பிறகு, மாமியார்களுக்கு சூப் தயாரிப்பதற்காக ஒரு பாட்டில் போர்ட் ஒயினையும் ஆறு கோழிகளையும் அனுப்புவார்கள். ஏனெனில் இது தாய்மார்களுக்கும் நோயிலிருந்து மீண்டு வருபவர்களுக்கும் ஒரு நல்ல உணவாகக் கருதப்பட்டு வருகின்றது.[1]
இது காலை உணவாகவோ அல்லது தாமதமான காலை உணவாகவோ, முந்தைய நாள் சமைத்த கறி, இனிப்பு மாங்காய் சட்னி மற்றும் உப்புக்கண்ட மீனுடன் சேர்த்து உட்கொள்ளப்படுகிறது. சில சமயங்களில், குழந்தைகள் இதை ஒரு களிமண் பாத்திரத்தில் வயல்களுக்கு எடுத்துச் சென்று, அங்கு வேலை செய்யும் தங்கள் பெற்றோருக்கும் மூத்த உடன்பிறப்புகளுக்கும் கொடுப்பார்கள்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 Cherie Y. Hamilton, "Os sabores da lusofonia: encontros de culturas", Senac 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8573594071