கோவா அரசு சின்னம்
கோவா அரசு சின்னம் | |
---|---|
விவரங்கள் | |
பயன்படுத்துவோர் | கோவா அரசு |
முடி | இந்திய தேசிய இலச்சினை |
விருதுமுகம் | விருக்ஷ தீபம் |
ஆதரவு | திறந்த கைகள் |
குறிக்கோளுரை | सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिद् दुःखमाप्नुयात् |
கோவா அரசு சின்னம் (Emblem of Goa) என்பது இந்திய மாநிலமான கோவாவின் அதிகாரப்பூர்வ சின்னமாகும்.[1] இந்த சின்னத்தின் மையத்தில் "விருக்ஷ தீபம்" எனப்படும், ஒரு அகல் விளக்கு உள்ளது. விளக்கானது அறிவொளியை விளக்குவதாக உள்ளது. அதைச்சுற்றி தென்னை ஓலைகள் அழகான வடிவமைப்பில் உள்ளது. இந்த தென்னை ஓலைகள் கோவாவின் அருமையையும், அழகான அம்சங்களைக் காட்டுவதாக உள்ளது. இந்த அம்சங்களின் மேலே தேவநாகரியில்: सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिद् दुःखमाप्नुयात्; என்ற சொற்றொடர் உள்ளது இதன் பொருள் "அனைவருக்கும் நன்மை கிடைக்கட்டும், யாரும் வேதனையை அனுபவிக்கக்கூடாது" என்பதாகும். இந்த வரிகளுக்கு மேலே இந்திய தேசிய சின்னமான சாரணாத் தூண் சிங்கம் அமைந்துள்ளது. இவற்றுக்கு அடியில் இவற்றை பாதுகாப்பது போன்ற இரு கைகள் அமைந்துள்ளன.
காலனித்துவ கால சின்னங்கள்
[தொகு]கோவா போர்த்துக்கல்லின் பகுதியாக 1510 முதல் 1961 வரை இருந்தது. பின்னர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
-
Lesser coat of arms of Portuguese India
-
Coat of arms of Portuguese India (1935-1951).
-
Coat of arms of Portuguese India (1951-1961).
-
Coat of arms of Portuguese India (1600-1951).