கோவாவின் இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவா இசை என்பது கிழக்கு மற்றும் மேற்கு இணைந்த கலவையாகும்.

கோவாவின் இசை (Music of Goa) என்பது இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள கோவா மாநிலத்தின் இசையைக் குறிக்கிறது. கோவாவில் மேற்கத்திய கலை இசை முதல் இந்திய பாரம்பரிய இசை வரை பல்வேறு வகையான இசை வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. [1] கொங்கணி இசையும் இந்த சிறிய மாநிலம் முழுவதும் பிரபலமானது. போர்த்துக்கலின் முன்னாள் பிரதேசமாக இருந்ததால், வயலின், விபுணவி, கித்தார், ஊதுகொம்பு மற்றும் கின்னரப்பெட்டி போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கோவா ஒரு மேலாதிக்க மேற்கத்திய இசைக் காட்சியைக் கொண்டுள்ளது. இது இந்திய இசை உலகிற்கு பல முக்கிய இசைக்கலைஞர்களையும் பாடகர்களையும் உருவாக்கியுள்ளது. போர்த்துகேய பாடோ இசை கோவாவிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பிரபல பாடகர்கள்[தொகு]

பிரபலமான பாடகியான லோர்னா கார்டிரோ "கோவாவின் நைட்டிங்கேல்" என்று குறிப்பிடப்படுகிறார். அவர் ஆங்கிலம் மற்றும் கொங்கணி இரண்டிலும் பாடுகிறார். பிஸ்ஸோ, பெப்டோ, ரெட் ரோஸ், துஸோ மோக் மற்றும் நோக்ஸிபக் ரோட்டா ஆகியவை அவரது பிரபலமான பாடல்களாகும். ஆண்டனி கோன்சால்வ்ஸ் (வயலின் கலைஞர்), அன்டோனியோ போர்டுனாடோ டி ஃபிகியூரிடோ (நடத்துனர் மற்றும் வயலின் கலைஞர்), கிறிஸ் பெர்ரி (பெரும்பாலும் கோவா இசையின் மன்னன் என்று அழைக்கப்படுவார்கள்), ஹேமா சர்தேசாய் (பின்னணிப் பாடகர்), இயன் டி'சா, (முன்னாள் கிதார் கலைஞர் கனேடிய இசைக்குழு பில்லி டேலண்ட், கோவன் வம்சாவளியைச் சேர்ந்தவர்), ரெமோ பெர்னாண்டஸ் (இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர்), கிஷோரி அமோன்கர் (பாரம்பரிய பாடகர்), தீனநாத் மங்கேசுகர் (நாடக கலைஞர் மற்றும் பாரம்பரிய பாடகர்), மற்றும் ஆலிவர் சீன் (பாடகர்/பாடலாசிரியர்). பாடகர் கேசர்பாய் கெர்கர், லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே போன்ற பல இந்திய பாரம்பரிய இசை கலைஞர்களை கோவா உருவாக்கியுள்ளது .

கோவா உள்ளூர் இசைக்குழுக்கள் மேற்கத்திய இசை பாணிகளைப் பயன்படுத்துவதற்கும் அறியப்படுகின்றன, மேலும் அவை பொது மற்றும் தனியார் கொண்டாட்டங்களில் பிரபலமாக உள்ளன. கோவா மின்னணு இசை, டிரான்ஸ் இசையின் தாயகமாக மாறியுள்ளது. கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மின்னணு இசை விழாக்களில் இது பிரபலமானது, இது 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மக்களை ஈர்க்கிறது. இருப்பினும், நத்தார்-புத்தாண்டு காலத்தில் சுற்றுலாவின் உச்சம் காரணமாக, திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது மற்ற தேதிகளில் மாற்றப்பட்டுள்ளன. [2]

உள்நாட்டு பாரம்பரிய இசை[தொகு]

ஒரு இந்து திருமண விழாவில் இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள், கோடிஸ் காசனாடென்ஸ் என்ற கலாச்சாரத்திலிருந்து சித்தரிக்கப்பட்டுள்ளது. (கி. 1540)

சான்றுகள்[தொகு]

  1. The Garland Encyclopedia of World Music: South Asia. 
  2. Rubinstein, Peter (2016-08-31). "Two Of The Biggest EDM Festivals In The World Might Be Getting Banned". Youredm.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவாவின்_இசை&oldid=3656050" இலிருந்து மீள்விக்கப்பட்டது