உள்ளடக்கத்துக்குச் செல்

கோவாய் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவாய் ஆறு
Khowai River
தெலியாமுராவில் கோவாய் ஆறு
அமைவு
நாடுகள்இந்தியா மற்றும் வங்காளதேசம்
மாநிலம்திரிபுரா
மாவட்டம்அபிகஞ்சு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுசிவாலிக் மலை மலைகள்

கோவாய் ஆறு (Khowai River) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்திலுள்ள அதரமுரா மலைகளின் கிழக்குப் பகுதியில் உற்பத்தியாகும் ஓர் எல்லை தாண்டிப் பாயும் ஆறாகும்.

புவியியல்

[தொகு]

வடக்கு-வடமேற்காகப் பாயும் கோவாய் ஆறு, இந்தியாவை கோவாய் என்ற இடத்தில் விட்டுவிட்டு, அபிகஞ்சு மாவட்டத்தில் உள்ள பல்லாவில் வடகிழக்கு வங்காளதேசத்திற்குள் நுழைகிறது. அங்கு அபிகஞ்சு நகரத்தின் கிழக்கே பாய்கிறது. ஆனால் கோவாய் நதிக்கரையில் உள்ள பகுதிகளில் விவசாயம் மற்றும் கற்காரை வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட பெருகிவரும் மாசுபாடும் ஆக்கிரமிப்புகளும் இந்த ஆற்றுக்கான அபாயத்தை அதிகரித்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. நகரத்தின் வடக்கே கோவாய் ஆறு மேற்கு நோக்கித் திரும்பி, அபிகஞ்சு மாவட்டத்தின் இலக்காய் துணை மாவட்டத்தில் உள்ள ஆதம்பூர் அருகே குசியாராவில் இணைகிறது. இங்கு ஆறு 166 கி.மீ நீளம் கொண்டதாக உள்ளது. கோவாய் ஆறு திரிபுராவின் இரண்டாவது மிக நீளமான நதியாகும்.[1][2][3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Murshed, Md Mahbub (2012). "Khowai River". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. "Tripura Geography for the preparation of TPSC examinations..." tripuraexam.in. Retrieved 2020-10-29.
  3. "Save Khowai River from land grabbers" (in en). The Daily Star. 2014-04-08. https://www.thedailystar.net/save-khowai-river-from-land-grabbers-19188. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவாய்_ஆறு&oldid=4420892" இலிருந்து மீள்விக்கப்பட்டது