கோவாக்சின்
மருத்துவத் தரவு | |
---|---|
வணிகப் பெயர்கள் | கோவாக்சின் |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | EUA : IND, IRN, ZWE, MU, NP, PY, MX, PH, MM, GT, NI, GY, VE, BW |
வழிகள் | தசைவழி ஊசி |
அடையாளக் குறிப்புகள் | |
ATC குறியீடு | None |
DrugBank | DB15847 |
UNII | 76JZE5DSN6 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | ? |
கோவாக்சின் என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் என்ற நிறுவனத்தால், செயலற்ற வைரசைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கொரோனா நோயிற்கான தடுப்பு மருந்து. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா வைரசு தடுப்பு மருந்தாகும்.
தொழில்நுட்பம்
[தொகு]போலியோ, மூளைக்காய்ச்சல், வெறிநாய்க்கடி நோய், பருவகால சளிக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையிலேயே கோவாக்சினும் தயாரிக்கப்படுகிறது. இத்தொழில்நுட்ப முறையில், செயலற்ற வைரசு செல்களைப் பயன்படுத்தி தடுப்பு மருந்து உருவாக்கப்படும்.
செயலிழக்க வைக்கும் முறை
[தொகு]கோவிட்-19 எனப்படும் கொரோனா நோயை உருவாக்கும் கொரோனா வைரசு (SARS-CoV-2) தனியே பிரித்தெடுக்கப்பட்டு, வீரோ எனப்படும் செல்களைக் கொண்டு அதிகளவில் வளர்க்கப்படுகிறது. பின்னர், பீட்டா புரோபியோலாக்டோன் என்ற கரிமத் திரவத்தில் ஊற வைக்கப்படும்போது அவை செயலிழந்து உயிர்ப்பற்ற வைரசுகளாக மாறுகின்றன. இந்நிலையில் அவை அலுமினியம் சார்ந்த துணையூக்கிகளுடன் கலக்கப்படுகின்றன.
தொழில்நுட்பத்தின் சிறப்பியல்பு
[தொகு]இத் தொழில்நுட்பமுறை தடுப்பு மருந்துத் தொழில்நுட்ப உலகில் நன்கு நிலைநிறுத்தப்பட்ட, காலத்தினால் சோதிக்கப்பட்ட ஒன்றாகும். இதன் மூலமாக உருவாக்கப்படும் தடுப்பு மருந்திலுள்ள உயிர்ப்பற்ற, செயல் முடக்கப்பட்ட வைரசு மீண்டும் உயிர்ப்படைந்து பெருகவோ நோய்களை உருவாக்கவோ இயலாது. இருப்பினும், இம்மருந்து நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டச் செய்து நோயை எதிர்ப்பதற்கான தற்காப்பு எதிர்வினைகளை மேற்கொள்ள வைக்கும்[1].
உலக ச்காதார நிறுவனம் ஒப்புதல்
[தொகு]நீண்ட நாட்கள் ஆய்வுக்குப்பின், கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க உலக சுகாதார அமைப்பு 3 நவம்பர் 2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது..[2][3]முன்னதாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களை ஆஸ்திரேலியாவில் நுழைய அனுமதி வழங்கியிருந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "COVAXIN - India's First Indigenous COVID-19 Vaccine". பாரத் பயோடெக். பார்க்கப்பட்ட நாள் 17 மே 2021.
- ↑ கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி: இனி இந்தியர்களுக்கு வெளிநாட்டுப் பயணம் பிரச்சினையில்லை
- ↑ "கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் ஒப்புதல்". Archived from the original on 2021-11-03. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.