கோவலன் (1934 திரைப்படம்)
தோற்றம்
| கோவலன் | |
|---|---|
| தயாரிப்பு | ராயல் டாக்கீஸ் |
| நடிப்பு | வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி. |
| வெளியீடு | 1934 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
கோவலன் 1934ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது ஒரு வரலாற்றுப் படமாகும். 14,861 அடி நீளம்கொண்ட இத்திரைப்படம் கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது. ராயல் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில், வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]
இது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்றாலும் அக்காலகட்ட பார்வையாளர்களின் சமய நம்பிக்கையால் படத்தின் திரைக்கதையில் புராண இடைச்செருகல்கள் செய்யப்பட்டன. இருந்தாலும் இப்படம் இரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை.[2]
பாடல்கள்
[தொகு]| பாடல் | பாடியவர்(கள்) | குறிப்பு |
|---|---|---|
| ஜீவசிந்தாமணியே எந்தன் தெய்வநாயகி.. | வி. ஏ. செல்லப்பா ஐயர் | கோவலன் மாதவியை வேண்டல் |
| வாராய் அழகுதுரை மாரா மலரணையில் | டி. பி. ராஜலட்சுமி | மாதவி கோவலனை அழைத்தல் |
| கலவையும் புனுகுசாந்து கமழ்தர மெய்யிற்பூசி | டி. பி. ராஜலட்சுமி | விருத்தம் |
| உய்வகை யறியேன் - எந்தன் உத்தமர் சென்ற இடம் | டி. பி. ராஜலட்சுமி | மாதவி கோவலனைப் பிரிந்து துயருறுதல் |
| போய்வருவேன் சபையோரே போய்வருவேன் நான் | வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி | கோவலன்-மாதவி தர்க்கம் |
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ "1934இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. Retrieved 2016-10-14.
- ↑ ஜுபிடருக்கு வாழ்வளித்த வசனம்! | கண் விழித்த சினிமா 28, கட்டுரை, ஆர். சி. ஜெயந்தன், இந்து தமிழ் திசை 29 ஆகத்து 2025
சான்று நூல்
[தொகு]- நூல்: சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு, ஆசிரியர்: கலைமாமணி பிலிம்நியூஸ் ஆனந்தன். பிரிவு 28: 1931 முதல் வெளியான 6000 படங்களின் விபரம்.