கோவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவன்
பிறப்புவயது 52
இருப்பிடம்Oraiyur, திருச்சி
தேசியம்இந்தியன்
கல்விIndustrial Training Institute,நாகப்பட்டினம்
பணிநாட்டுப்புறப் பாடகர், செயற்பாட்டாளர்

கோவன் என்பவர் மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர், பாடகர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் இசையமைத்து பாடிய மூடு டாஸ்மாக்கை மூடு பாடலில் இவர் ஜெயலலிதா அரசை விமர்சித்து இருந்தார். இதனால் "இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்), 505 (1) பி, சி (வதந்திகளை பிரசுரித்து, பரப்பி மக்களை அரசுக்கு எதிராகச் செயல்படும்படி தூண்டுவது) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு"[1] இணையக் குற்றக் காவல் துறையால் (Cyber Crime Police ) கைது செய்யப்பட்டார்.[2]

ஒரு நாட்டுப்புறப் பாடகர் முதலைச்சரை விமர்சித்துப் பாடியதற்காக துரோக வழக்குத் தொடர்ப்பட்டு கைது செய்யப்பட்டதை கல்வியாளர்கள், செயற்பாட்டாளர், பல அரசியல் வாதிகள் கடுமையாக விமர்சித்து உள்ளார்கள்.[3] தமிழக பாஜக கோவன் கைது செய்யப்பட்டது சரியே என்று கூறியுள்ளது.[4]

கோவன் கைது செய்தது அபத்தமானது என்றும், கோவனின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டும் என்று இந்திய பன்னாட்டு மன்னிப்பு அவையின் செயற்பாட்டாளர் Abhirr V P தெரிவித்துள்ளார்.[5] எந்த ஒரு சட்டம் எழுத்தாளர்களை, ஓவியர்களை, பாடகர்களைச் சிறையில் வைக்க மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சட்டத்துக்கு மக்களாட்சியில் இடமில்லை. உடனடியாகத் திரும்பப்பெறவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்கு ஆசிய இயக்குநர் மீனாக்சி கங்குலி (Meenakshi Ganguly) அவர்கள் தெரிவித்துள்ளார்.[5]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

கோவன் தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் பெருமங்களம் என்ற ஊரில், விவசாயக் கூலித் தொழில் செய்யும் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். ஐ.டி.ஐ. படிப்பை முடித்த கோவன், 1996 இல் திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றினார். நாட்டுப் பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்' என்ற அமைப்பில் சேர்ந்து பாடல்களைப் பாடினார்.[6]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கோவன் பாடல்கள்... ஃபேஸ்புக், டுவிட்டரில் அரசுக்கு எதிரான குரல்கள்
  2. Tamil folk singer Kovan arrested for anti-Jayalalithaa song, slapped with sedition charge
  3. "Tamil folk singer Kovan arrested for anti-Jayalalithaa song, slapped with sedition charge". Archived from the original on 2015-11-02. பார்க்கப்பட்ட நாள் 2015-10-31.
  4. கோவன் கைது சரியே: தமிழிசை நிலைப்பாட்டில் மாற்றம்
  5. 5.0 5.1 Tamil Nadu singer arrest: Human rights groups demand Kovan’s release, call for scrapping sedition law
  6. "ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம் - ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயசில உல்லாசம்". உலக தமிழ்ச் செய்திகள். 31 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவன்&oldid=3738608" இலிருந்து மீள்விக்கப்பட்டது