கோழிமலை
கோழிமலை
கோவில்மலை | |
---|---|
பழங்குடி கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°43′15″N 77°02′54″E / 9.72083°N 77.04833°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | இடுக்கி |
பெயர்ச்சூட்டு | Mannan tribal community |
அரசு | |
• வகை | கிராம ஊராட்சி |
• நிர்வாகம் | காஞ்சியார் கிராம ஊராட்சி |
ஏற்றம் | 830 m (2,720 ft) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 685511 |
இடக் குறியீடு | 04868 |
வாகனப் பதிவு | KL-37, KL-69 |
கோவில்மலை, உள்ளுரில் கோழிமலை (Kovilmala, locally known as Kozhimala) என்று அழைக்கப்படுவது, இந்தியாவின் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பனைக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமும் பழங்குடி குடியிருப்பும் ஆகும். இடுக்கி வட்டத்தின் (முன்பு உடும்பன்சோலை வட்டம்) காஞ்சியார் கிராம ஊராட்சியின் கீழ் வரும் தென்னிந்தியாவில் இருக்கும் ஒரே பழங்குடி இராச்சியம் இதுவாகும்.[1][2] இந்த இராஜ்ஜியம் 'தேக்கோட்டு காட்டு இராச்சியம்', 'நடுக்குட கட்டு இராச்சியம்', 'ஆதல் ஒருபுரம்', 'செங்கநாட்டு மாலை' என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி இவர்களின் குலதெய்வம் ஆகும்.[3]
கோவில்மலை மன்னன் சமூகம்
[தொகு]கோவில்மலை மன்னன் சமூகத்தின் தலைமையகம் ஆகும். அவர்கள் தங்களின் சில பழக்கவழக்கங்கள், மரபுகள், ஆட்சி முறை போன்றவற்றைப் பாதுகாத்து, தங்களை ஒரு தனித்துவமான பழங்குடி பிரிவினராக விளங்குகின்றனர்.[4] இங்குள்ள ஆட்சி முறை மக்களாட்சி - முடியாட்சி ஆகும். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னன் ஆட்சி செய்கிறார்.[5] வம்ச வாரிசுரிமை என்பது தாய்வழி மரபுரிமையின் மூலம் வருகிறது. இதனால் சொத்துக்கள் மருமகனுக்கே செல்லும். இங்கு வசிக்கும் மன்னன் சமூகத்தின் நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவால் நடத்தப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள மற்ற 42 குடிகளை (குடியேற்றங்களை) கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவருக்கு உள்ளது.[6][7] இன்று இந்தக் குடிகள் குமுளி, அடிமாலி, வத்திக்குடி, மணியாரங்குடி, மச்சிப்ளாவு, கோரங்கட்டி, கட்டப்பனை, முறிக்காசேரி, தோப்பிரம்குடி, நெடுங்கண்டம், மாங்குளம், இரும்புபாலம் போன்ற இடங்களில் அமைந்துள்ளன.[8] அரசருக்கு திருமணம், மணமுறிவு, உள், வெளி விவகாரங்கள் தொடர்பான தகராறுகளைத் தீர்க்க உதவ காணிகள் (சமூகத் தலைவர்கள்) என்ற 9 அமைச்சர்கள் கொண்ட குழு உண்டு.[9] பல்வேறு குடிகளின் பேராளர்களான (பிரதிநிதிகள்) தலைவர்களுக்கான கூட்டங்கள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.[10][11] மன்னரின் மரணத்திற்குப் பிறகு புதிய மன்னரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் இந்தக் காணிகளுக்கு உண்டு. இந்த சமூகத்தின் தற்போதைய மன்னர் எரணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பொருளாதாரம் படித்த பட்டதாரியான 'ராமன் ராஜா மன்னன்' ஆவார். இவர் இந்த பழங்குடி வம்சத்தின் 16 வது மன்னரான தனது மாமா 'ஆரியன் ராஜா மன்னன்' மறைவுக்குப் பிறகு அரியணை ஏறினார்.[12] பண்டைய தமிழகத்தில் சேரர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே நீடித்த போரின் போது, இடுக்கி வனப்பகுதிக்குள் தப்பி வந்த பாண்டிய வம்சாவளியைச் சேர்ந்த போர்வீரர்களே இந்த மன்னன் பழங்குடியினர் என்று நம்பப்படுகிறது. போதுமான விளைச்சலை வழங்கிய இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில் 'களவூட்டு' என்ற பெயரில் விழாவை இவர்கள் ஆண்டுதோறும் நடத்துகிறனர். புகழ்பெற்ற தமிழ் இலக்கியமான ' சிலப்பதிகாரத்தில் ' குறிப்பிடப்பட்டுள்ள கோவலன் - கண்ணகி கதையுடன் முதன்மையாக தொடர்புடைய களவூட்டு விழாவுடன் ஆதிவாசி கூத்து நடத்தப்படுகிறது. அரசரின் இறப்புச் சடங்குகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆண்டுக் கூட்டங்களின் சமயத்திலும் இது ஏற்பாடு நடத்தப்படுகிறது.[13]
கோவில்மலையின் குறிப்பிடப்பட்ட மன்னர்கள்
[தொகு]- தேவன் ராஜா மன்னன் : 1948 இல் பிறந்த இவர், 1996 இல் தாய்வழி மரபு முறைப்படி ராஜாவானார். அவர் 2007 இல் 54 வயதில் மாரடைப்பால் இறந்தார் [14]
- ஆரியன் ராஜா மன்னன் : இவரின் இயற்பெயர் 'ரமேசன்'. இவர் தேவன் ராஜா மன்னனுக்குப் பின்னர் 2012 இல் அரியணை ஏறினார். ஆனால் இவர் 2011 ஆம் ஆண்டு தனது 29 வது வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்தார். இவரது இறுதிச் சடங்கின் போது கேரள மாநில அரசு இவருக்கு அனைத்து மரியாதைகளைகளைம் வழங்கியது. ஆரியன் ராஜா மன்னர் மன்னன் சமூகத்தில் இளம் வயது ராஜா என்று பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டவர்.
- ராமன் ராஜா மன்னன் : குமளி மன்னங்குடியைச் சேர்ந்த இவரது இயற்பெயர் என்.பினு. இவர் ஆரியன் ராஜா மன்னனுக்குப் பிறகு 4 மார்ச் 2012 அன்று பதவியேற்றார். மன்னன் சமூகத்தில் எரணாகுளம் மகாராஜா கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற ஒரே எழுத்தறிவு கொண்ட மன்னர் இவராவார்.
கோவில்மலைக்கான பாதை
[தொகு]தரமான சாலைகள் இல்லாததால் கோழிமலைக்குச் செல்வது கடந்த காலங்களில் மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக கோழிமலை பெரும் புகழ் பெற்றதால் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கோழிமலைக்கு செல்ல எளிதான பாதை கட்டப்பனா - காஞ்சியார் - ஸ்வராஜ் - முறிக்காட்டுக்குடி வழி (14) கி.மீ.). கட்டப்பனாவில் இருந்து கோழிமலைக்கு தனியார் பேருந்துகள் சீரான கால இடைவெளியில் இயக்கப்படுகின்றன. ஸ்வராஜ்ஜின் பிரதான சந்திப்பிலிருந்து வாடகை மகிழுந்துகளும் கிடைக்கின்றன.
வானூர்தி நிலையங்கள்
[தொகு]கோழிமலைக்கு அருகிலுள்ள வானூர்தி நிலையம் கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் (118 கி.மீ.). திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் 205 கி.மீ. தொலைவில் உள்ளது.
தொடருந்து
[தொகு]அருகிலுள்ள ரயில் நிலையம் கடுதுருத்தி ஆகும். இது 92. கி.மீ. தொலைவில் உள்ளது. கோட்டயம் (103 கி.மீ.), சங்கனாச்சேரி (104 கி.மீ.), திருவல்லா (110 கி.மீ.) ஆகியவை அருகிலுள்ள பிற தொடருந்து நிலையங்களாகும்.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""Tribal king" Aryan Raja Manna passes away in Kerala | NetIndian". netindian.in. 2011-12-28. Retrieved 2016-11-30.
- ↑ "Dakshin Routes". www.dakshinroutes.com. Retrieved 2016-11-30.
- ↑ "Idukki District of Kerala - An official website". idukki.nic.in. Retrieved 2016-11-30.
- ↑ Correspondent, A. "Young tribal king dies of heart attack". The Hindu.
- ↑ "A Day with Mannans of Kovilamala Kingdom Kerala". www.alienadv.com.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "No kingdom, but kingship continues after 60 years of democracy - Deccan Herald". m.deccanherald.com. Retrieved 2016-11-30.
- ↑ "Burial of Ariyan Rajamannan: A traditional king of the Mannan tribe – Kerala | Tribal Cultural Heritage in India Foundation". www.indiantribalheritage.org. Retrieved 2016-12-01.
- ↑ "11_chapter 4.pdf - Shodhganga shodhganga.inflibnet.ac.in › bitstream" (PDF). Retrieved 2016-12-01.
- ↑ "The King Who Was Not | OPEN Magazine". OPEN Magazine. Retrieved 2016-12-01.
- ↑ "Focus on People". www.focusonpeople.org. Archived from the original on 3 March 2016. Retrieved 2016-12-01.
- ↑ Project, Joshua. "Mannan, caste in India".
- ↑ Surendranath, Nidhi. "The King takes up the cause of the commoner". The Hindu.
- ↑ "Oral Epics of Mannan Tribe, Kerala | Tata Fellowships in Folklore". indianfolklore.org. Archived from the original on 17 May 2022. Retrieved 2016-12-01.
- ↑ "Adivasi Raja passes away - GroundReport". www.groundreport.com. Retrieved 2016-12-01.