கோல் விலங்கியல் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோல் விலங்கியல் அருங்காட்சியகம்
Cole Museum of Zoology Elephant Skeleton.JPG
முதன்மைத் தளத்தில் உள்ள இந்திய வட்டரங்கு ஆண் யானையின் எலும்புக்கூடு
நிறுவப்பட்டது20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
அமைவிடம்ரீடிங், பெர்க்‌ஷையர், ஐக்கிய இராச்சியம்
வகைபல்கலைக்கழக அருங்காட்சியகம்
சேகரிப்பு அளவுவிலங்கியல்
மேற்பார்வையாளர்டாக்டர் அமன்தா கல்லகன் (Dr Amanda Callaghan) [1]
வலைத்தளம்reading.ac.uk/colemuseum/


கோல் விலங்கியல் அருங்காட்சியகம் (Cole Museum of Zoology) வாசிப்பு பல்கலைக்கழகத்தில் (University of Reading) உயிரியல் அறிவியல் துறையின் ஒரு பகுதியாகும். இது பெர்சயர், இங்கிலாந்தின் பெர்சயர் நகரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் வொயிட்நைட்சு பூங்கா வளாகத்தில் அமைந்துள்ளது.

அருங்காட்சியகம்[தொகு]

விலங்கியல் பேராசிரியர் சே. கோல் என்பாரால் 20 ஆம் நூற்றாட்டின் தொடக்கத்தில் இங்குள்ளவை சேகரிக்கப்பட்டன. கோல் ஓய்வுபெற்ற பின்னர் டாக்டர் நெல்லீ பி. ஏல்சு (சேகரிப்புகளை வகைப்படுதியவர்) மற்றும் ஸ்டோன்மேன் இருவரும் 1907 முதல் 1939 வரை பராமரித்தனர்.[2] On Cole's death in 1959 இல் கோலின் மரணத்துக்குப் பின்னர் பல்கலைக்கழகம அவரது நூலகப் புத்தகங்களை விலைக்கு வாங்கி பல்கலைக்கழக நூலகத்தின் சிறப்புக் பகுதியில் வைத்தனர்.

இந்த அருங்காட்சியகத்தின் மறுசீரமைப்பு, மார்ச் 17, 2004 அன்று நிறைவு செய்யப்பட்டது. இங்குள்ள 4,000 மாதிரிகளில் ஏறத்தாழ 400 மாதிரிகள் எந்த நேரத்திலும் காண்பிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 27 வரிசைகளில் மாதிரிகள் வரிசையாக்கம் செய்யப்பட்டன, இதனால் விலங்குகளின் பன்முகத்தன்மை பற்றிய முழுமையான தகவலை அளிக்கிறது. ஒரு ஆண் இந்திய வட்டரங்கு (சர்க்கசு) யானையின் எலும்புக்கூடு, 400 மீட்டர் முதுகெலும்பு கொண்டிருக்கும் மலைப்பாம்பின் எலும்புக்கூடு, மிகப்பெரிய சிலந்தியின் இறந்த உடல் மற்றும் ஒரு திமிங்கிலத்தின் எலும்புக்கூடு ஆகியவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]