கோல் கும்பாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோல் கும்பாசு

கோல் கும்பாசு (கன்னடம்: ಗೋಲ ಗುಮ್ಮಟ) என்பது கிபி 1490 முதல் 1686 வரை பீசப்பூர் சுல்தானகத்தை ஆண்ட, ஆதில்சாகி மரபைச் சேர்ந்த முகம்மத் ஆதில் ஷா (1627-57) என்னும் சுல்தானின் சமாதிக் கட்டிடம் ஆகும். தென்னிந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் பீசப்பூர் நகரில் உள்ள இக் கட்டிடம் 1659 ஆம் ஆண்டில் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான தாபுலைச் சேர்ந்த யாக்குத் என்பவரால் வடிவமைத்துக் கட்டப்பட்டது.

இக் கட்டிடம், 50 மீட்டர் (160 அடி) பக்கங்களைக் கொண்ட சதுர வடிவான கூடம் ஒன்றைக் கொண்டுள்ளது. இதன் கூரை 37.9 மீட்டர் (124 அடி) விட்டம் கொண்ட குவிமாடமாக அமைந்துள்ளது. இக் குவிமாடம், நவீனகாலத்துக்கு முற்பட்ட குவிமாடங்களில் உலகிலேயே இரண்டாவது பெரியது ஆகும்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்_கும்பாசு&oldid=1177219" இருந்து மீள்விக்கப்பட்டது