கோல்மனைட்டு
கோல்மனைட்டு Colemanite | |
---|---|
![]() | |
பொதுவானாவை | |
வகை | இனோபோரேட்டு |
வேதி வாய்பாடு | Ca2B6O11·5H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது, வெண்மை, மஞ்சள், சாம்பல் |
படிக இயல்பு | பாரிய சிறுமணி முதல் கரடுமுரடான படிகம், பொதுவாக முடிச்சு போன்றது. |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவு |
பிளப்பு | [010] சரிபிளவு, [001] தனித்துவம் |
முறிவு | மிருதுவான சமச்சீரற்றது |
மோவின் அளவுகோல் வலிமை | 4.5 |
மிளிர்வு | பளபளக்கும் |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் முதல் ஒளி கசியும் வரை |
ஒப்படர்த்தி | 2.42 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα = 1.586 nβ = 1.592 nγ = 1.614 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.028 |
உருகுதன்மை | 1.5 |
ஆய்வு முறைகள் | சூடுபடுத்தினால் மேற்பரப்பு உரியும், பச்சை நிறச் சுடரை உருவாக்கும் |
பிற சிறப்பியல்புகள் | பிரகாசமான வெளிர் மஞ்சள் உடனொளிர்தல், ஒளிரும் தன்மையான வெளிர் பச்சை; குறைந்த வெப்பநிலையில் வெப்ப மின்விளைவும் அழுத்தமின் விளைவும் கொண்டிருக்கும். |
மேற்கோள்கள் | [1][2][3][4][5] |
கோல்மனைட்டு (Colemanite) என்பது (Ca2B6O11·5H2O)[5] அல்லது (CaB3O4(OH)3·H2O)[3] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். போரேட்டு வகை கனிமமாக வகைப்படுத்தப்படும் இக்கனிமம், காரத்தன்மையுடைய ஏரிகள் சார்ந்த சூழல்களின் ஆவியாதல் படிவுகளில் காணப்படுகிறது. கோல்மனைட்டு என்பது போராக்சு மற்றும் யூலெக்சைட்டு கனிமம் போன்றவற்றின் மாற்றத்தால் உருவாகும் இரண்டாம் நிலை கனிமமாகும்.[2] பன்னாட்டு கனிமவியல் சங்கம் Cole[6] என்ற குறியீட்டால் கோல்மனைட்டு கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.
கோல்மனைட்டு முதன்முதலில் 1884 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இன்யோ மாகாணத்தில் அமைந்துள்ள டெத் வேலியில் உள்ள பேர்னாசு கிறீக்கு பகுதியில் கண்டறியப்பட்டது. முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடமான ஆர்மனி போராக்சு ஒர்க்சு சுரங்கத்தின் உரிமையாளரான வில்லியம் டெல் கோல்மேன் (1824-1893) நினைவாக கனிமத்திற்கு கோல்மனைட்டு எனப் பெயரிடப்பட்டது.[3] அந்த நேரத்தில், கோல்மன் தனது வணிக கூட்டாளியான பிரான்சிசு மரியன் இசுமித்து நினைவாக இசுமித்தைட்டு என்ற பெயரை முன்மொழிந்தார்..[7]
பயன்கள்
[தொகு]கோல்மனைட்டு போரானின் முக்கியமான தாதுவாகும். 1926 ஆம் ஆண்டில் கெர்னைட்டு தாது கண்டுபிடிக்கும் வரை மிக முக்கியமான போரான் தாதுவாக இது இருந்தது. வெப்பத்தை எதிர்க்கும் கண்ணாடி உற்பத்தி போன்ற பல தொழில்துறை பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Schorn, Stefan; et al. (2021). "Colemanit (Colemanite)". Mineralienatlas.
- ↑ 2.0 2.1 Klein, Cornelis; Hurlbut, Cornelius S. Jr. (1993). Manual of mineralogy: (after James D. Dana) (21st ed.). New York: Wiley. p. 422. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-57452-X.
- ↑ 3.0 3.1 3.2 வார்ப்புரு:Mindat
- ↑ "Colemanite mineral data". Webmineral. பார்க்கப்பட்ட நாள் 30 December 2021.
- ↑ 5.0 5.1 Anthony, John W.; Bideaux, Richard A.; Bladh, Kenneth W.; Nichols, Monte C. (2005). "Colemanite" (PDF). Handbook of Mineralogy.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ Hildebrand, GH. (1982) Borax Pioneer: Francis Marion Smith. San Diego: Howell-North Books. p 31 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8310-7148-6
- ↑ "Nitrates". Simon & Schuster's Guide to Rocks and Minerals. Simon & Schuster. 1977. p. entry 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-671-24417-0.
வெளி இணைப்புகள்
[தொகு]Spencer, Leonard James (1911). "Colemanite". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. Cambridge University Press.
- "Death Valley - Historic Resource Study - A History of Mining".