கோல்கலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரளாவின் திருச்சூர் நகரத்தில் கோல்கலி கலைஞர்கள்.

கோல்கலி (Kolkali) இந்திய நாட்டின் கேரள மாநிலத்திலுள்ள மலபார் மாவட்டப் பகுதியில் நடத்தப்படும் நாட்டுப்புறக் கலையாகும்.[1] இந்நடனக் கலைஞர்கள் ஒரு வட்டத்தில் நகர்கிறார்கள். சிறிய குச்சிகளை அடித்து, சிறப்பு தப்படிகளுடன் தாளத்திற்கேற்ப இந்நடனம் நிகழ்கிறது.[2] நடனம் முன்னேறும்போது வட்டம் விரிவடைந்து சுருங்குகிறது. அதனுடன் இணைந்த இசை படிப்படியாக சுருதியில் எழுகிறது மற்றும் நடனம் அதன் உச்சத்தை அடைகிறது.[1]

ஆசியாவின் மிகப் பெரிய கலாச்சார நிகழ்வாகக் கருதப்படும் கேரளப் பள்ளி வருடாந்திர கலைநிகழ்ச்சியில் கோல்கலி இப்போது பிரபலமான ஒரு நிகழ்வாகும். கோல்கலியில் இரண்டு பாணிகள் உள்ளன: உண்மையான கொல்கலி மற்றும் தெக்கன் கோலடி என்பன அவ்விரண்டு வகைகளாகும். உண்மையான கோல்கலி தச்சோளிகளி, ராசசூயம் முதலியவற்றைக் கொண்டுள்ளது. ஆனால் இவ்வகை கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளது. தெக்கன் கோலடி மாநில வருடாந்திர கலைநிகழ்ச்சிகளில் சேர்க்கப்படுவதால் இன்னும் உயிருடன் உள்ளது.

கதகளி, வேலகளி, பூரக்களி, தச்சோளிகளி மற்றும் கோல்கலி போன்ற பல பாரம்பரிய கலை வடிவங்கள் பரிணாம வளர்ச்சியின் போது கேரளாவில் களரிப்பயிற்று போன்ற தற்காப்பு கலையில் இருந்து பல கூறுகளை ஈர்த்துள்ளன. கதகளி நடனத்தில் நடிகரின் அடிப்படை உடல் தயாரிப்பு பயிற்சியில் களரிப்பயிற்று தற்காப்பு கலையில் இருந்து நிறைய கூறுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. கொல்கலி கதாபாத்திரங்களின் பல உடல் தோரணைகள், நடனம் மற்றும் கால் வேலைகள் நேரடியாக களரிப்பயிற்று தற்காப்பு கலையில் இருந்து எடுக்கப்பட்டவை. கேரளாவின் தற்காப்புக் கலையான களரிப்பயிற்று நடைமுறையில் இருந்த பண்டைய நாட்களில் இந்த கலையின் தோற்றத்தை அறியலாம்.

கல்லூரி கலை விழாவில் கோல்கலி நிகழ்ச்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Kolkali - a folk art form | North Malabar region of Kerala". www.keralatourism.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-21.
  2. Jha, Makhan (1997) (in en). The Muslim Tribes of Lakshadweep Islands: An Anthropological Appraisal of Island Ecology and Cultural Perceptions. M.D. Publications Pvt. Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7533-032-0. https://www.google.co.in/books/edition/The_Muslim_Tribes_of_Lakshadweep_Islands/b_a4G_Tw2ycC?hl=en&gbpv=1&dq=kolkali&pg=PA58&printsec=frontcover. பார்த்த நாள்: 28 November 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்கலி&oldid=3640866" இலிருந்து மீள்விக்கப்பட்டது