கொல்கத்தா மாவட்டம்

ஆள்கூறுகள்: 22°34′22″N 88°21′50″E / 22.5726723°N 88.3638815°E / 22.5726723; 88.3638815
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோல்கத்தா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கொல்கத்தா
কলকাতা (வங்காள மொழி)
கல்கத்தா
மாவட்டம்
மேலிருந்து கடிகார திசையில்: விக்டோரியா நினைவிடம், புனித பவுல் பேராலயம், மத்திய வணிக மாவட்டம், ஹௌரா பாலம், நகர அமிழ் தண்டூர்தி வழித்தடம், வித்யாசாகர் பாலம்
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தாவின் அமைவிடம்
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 22°34′22″N 88°21′50″E / 22.5726723°N 88.3638815°E / 22.5726723; 88.3638815
நாடு இந்தியா
பகுதிகிழக்கு இந்தியா
மாநிலம் மேற்கு வங்காளம்
கோட்டம்இராஜதானி
தலைமையகம்கொல்கத்தா
அரசு
 • மக்களவைத் தொகுதிகள்தெற்கு கொல்கத்தா, வடக்கு கொல்கத்தா
பரப்பளவு
 • மொத்தம்185 km2 (71 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்44,96,694
 • அடர்த்தி24,000/km2 (63,000/sq mi)
மக்கள்தொகையியல்
 • படிப்பறிவு98.67 விழுக்காடு
 • பாலின விகிதம்990 /
மொழிகள்
 • அலுவல்வங்காளம்[1][2]
 • கூடுதல் அலுவல்ஆங்கிலம்[1]
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+05:30)
வாகனப் பதிவுWB-01 முதல் WB-10 வரை
முக்கிய நெடுஞ்சாலைகள்தே.நெ.-12, மா.நெ.-1, மா.நெ.-3
சராசரி ஆண்டு மழைப்பொழிவு1850 மி.மீ.
இணையதளம்www.kmcgov.in

கொல்கத்தா மாவட்டம் (Kolkata district) (வங்காள மொழி: কলকাতা জেলা) கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம்மாநிலத்தின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இராஜதானி கோட்டத்தில் அமைந்த ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இது பரப்பளவில், மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்த, மிகச்சிறிய மாவட்டம் ஆகும்

இம்மாவட்டத்தின் மையத்தில் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரும், இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான கொல்கத்தா நகரம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பெரும் பகுதி கொல்கத்தா மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ளது.

இம்மாவட்டத்தில் ஹூக்லி ஆறு பாய்கிறது.

இம்மாவட்டத்தின் குடிநீர் மற்றும் வடிகால் நிர்வாகத்தை கொல்கத்தா மாநகராட்சியே மேற்கொள்கிறது.

மாவட்ட எல்லைகள்[தொகு]

185 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கொல்கத்தா மாவட்டத்தின் வடகிழக்கில் வடக்கு 24 பர்கனா மாவட்டம், தெற்கில் தெற்கு 24 பர்கனா மாவட்டம் மற்றும் வடமேற்கில் ஹவுரா மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

அரசியல்[தொகு]

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

கொல்கத்தா மாவட்டம் பதினொன்று சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.[3] அவைகள்; கொல்கத்தா துறைமுகம் சட்டமன்ற தொகுதி, பவானிபூர் சட்டமன்ற தொகுதி, இராஷ்பிகாரி சட்டமன்ற தொகுதி, சௌரங்கி சட்டமன்ற தொகுதி, எந்தாலி சட்டமன்ற தொகுதி, பெலகட்டா சட்டமன்ற தொகுதி, ஜோர்சங்கோ சட்டமன்ற தொகுதி, ஷியாம்புக்கூர் சட்டமன்ற தொகுதி, மணிக்தலா சட்டமன்ற தொகுதி மற்றும் காசிப்பூர்-பெல்கச்சியா சட்டமன்ற தொகுதி.

மக்களவை தொகுதிகள்[தொகு]

கொல்கத்தா வடக்கு மக்களவை தொகுதி, கொல்கத்தா தெற்கு மக்களவை தொகுதி என இரண்டு மக்களவை தொகுதிகளை இம்மாவட்டம் கொண்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 4,496,694 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2,356,766 மற்றும் பெண்கள் 2,139,928 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 908 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 24,306 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 86.31% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 88.34% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 84.06% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 339,323 ஆக உள்ளது.[4]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 3,440,290 (76.51 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 926,414 (20.60 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 39,758 (0.88 %) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள்தொகை 13,849 ஆகவும், சமண சமயத்தவரின் மக்கள்தொகை 21,178 ஆகவும், பௌத்த சமயத்தவரின் மக்கள்தொகை 4,771 ஆகவும், பிற சமயத்தவரின் மக்கள்தொகை 1,452 ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்கள் எண்ணிக்கை 48,982 (1.09 %) ஆகவும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Fact and Figures". Wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
  2. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). Nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 85. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
  3. Delimitation Commission (15 February 2006). "Notification: order no. 18" (PDF). New Delhi: Election Commission of India. pp. 12–25. Archived from the original (PDF) on 18 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 11 February 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. http://www.census2011.co.in/census/district/16-kolkata.html

வெளி இணைப்புகள்[தொகு]

மாவட்ட எல்லைகள்[தொகு]

185 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கொல்கத்தா மாவட்டத்தின் வடகிழக்கில் வடக்கு 24 பர்கனா மாவட்டம், தெற்கில் தெற்கு 24 பர்கனா மாவட்டம் மற்றும் வடமேற்கில் ஹவுரா மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்கத்தா_மாவட்டம்&oldid=3929300" இலிருந்து மீள்விக்கப்பட்டது