கோலா கங்சார் மலாய் கல்லூரி
கோலா கங்சார் மலாய் கல்லூரி The Malay College Kuala Kangsar Kolej Melayu Kuala Kangsar كوليج ملايو كوالا كڠسر | |
---|---|
![]() கோலா கங்சார் மலாய் கல்லூரி (2020) | |
முகவரி | |
துன் ரசாக் சாலை, கோலா கங்சார்![]() ![]() | |
தகவல் | |
வகை | அரசுப் பள்ளி; உறைவிடப் பள்ளி; சிறப்பு குழுமப் பள்ளி |
குறிக்கோள் | ஞானத்தின் மூலம் ஆண்மை Fiat Sapientia Virtus |
தொடக்கம் | 2 சனவரி 1905[1] |
நிறுவனர்கள் | பேராக் சுல்தான் இட்ரிஸ் சா சிலாங்கூர் சுல்தான் சுலைமான் பகாங் சுல்தான் அகமட் நெகிரி செம்பிலான் யாம் துவான் முகமட் சா[2] |
தலைமை | மலேசிய ஆட்சியாளர்களின் பேரவை பேராக் சுல்தான் நசுரின் சா |
தலைவர் | துன் அனிப் ஒமார் |
தலைமை ஆசிரியர் | முகமது சகாதான் அப்துல் ரகுமான் |
தரங்கள் | படிவம் 1 – படிவம் 5 |
பால் | ஆண்கள் |
மொத்த சேர்க்கை | 650 |
கற்பித்தல் மொழி | மலாய் மொழி, ஆங்கிலம், சப்பானிய மொழி, சீன மொழி, அரபு மொழி, பிரான்சிய மொழி |
நிறங்கள் | வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கருப்பு |
Accreditation | மலேசிய கல்வி அமைச்சு[3] |
ஆண்டு இதழ் | மலாய் கல்லூரி இதழ் |
இணையம் | www |
கோலா கங்சார் மலாய் கல்லூரி (மலாய்: Kolej Melayu Kuala Kangsar; ஆங்கிலம்: Malay College Kuala Kangsar) என்பது மலேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பள்ளி ஆகும். பேராக் மாநிலம், கோலா கங்சார் அரச நகரில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. ஆண்கள் மட்டும்[4] கற்கும் இந்தப் பள்ளியில், மலாய்க்காரர்கள் மட்டுமே படிப்பதற்குத் தகுதி பெறுகிறார்கள்.[5]
இந்த மலாய் கல்லூரிக்கு மலேசிய கல்வி அமைச்சு மலேசிய சிறப்பு குழுமப் பள்ளி தகுதிய வழங்கி உள்ளது. அத்துடன் 2010 முதல், இந்தப் பள்ளிக்கு உயர் செயல்திறன் பள்ளி (High Performance School) எனும் சிறப்புத் தகுதியும் வழங்கப்பட்டது. மலேசியாவின் சிறந்த பள்ளிகளுக்கு அந்தச் சிறப்புத் தகுதி வழங்கப்படுகிறது.[6]
பன்னாட்டு இளங்கலைப் பட்டம் அமைப்பின் (The International Baccalaureate Organization) பாடத்திட்ட தரநிலைகளைச் செயல்படுத்தும் அதே வேளையில், மலேசிய தேசிய பாடத்திட்டத்தின் சிஜில் பெலாஜாரான் மலேசியா (மலாய்: Sijil Pelajaran Malaysia ஆங்கிலம்: Malaysian School Certificate) (SPM) பாடங்களையும் கோலா கங்சார் மலாய் கல்லூரி கற்பிக்கிறது.
பொது
[தொகு]சிங்கப்பூர் இராபிள்ஸ் கல்வி நிலையத்தின் தலைமையிலான உலகளாவிய முன்னணி-எட்ஜ் பள்ளிகளின் கூட்டணி (Global Alliance of Leading-Edge Schools) என்று அழைக்கப்படும் உலகின் சிறந்த மேல்நிலைப் பள்ளிகளின் பன்னாட்டு அமைப்பிலும் கோலா கங்சார் மலாய் கல்லூரி உறுப்பினராக உள்ளது.
தற்போதைய மாணவர்களில் சுமார் 10% பேர் மலேசிய நடுவண் வங்கி, டெலிகோம் மலேசியா, யாயாசான் பெனராஜு பெண்டிடிக்கான் பூமிபுத்ரா (Yayasan Peneraju Pendidikan Bumiputera) போன்ற பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவித் தொகையைப் பெறுகிறார்கள்.
அரச ஆதரவு பள்ளி
[தொகு]மலேசியாவில் அரச ஆதரவின் கீழ் உள்ள இரண்டு உறைவிடப் பள்ளிகளில் இந்தப் பள்ளியும் ஒன்றாகும்.[7] மற்றொரு பள்ளி சிலாங்கூர் சுல்தானின் ஆதரவின் கீழ் உள்ள ஆலாம் சா பள்ளியாகும்.[8]
இந்தப் பள்ளியின் புரவலர் மலேசிய ஆட்சியாளர்களின் பேரவை ஆகும். மலேசிய ஆட்சியாளர்களின் பேரவை ஆதரவின் கீழ் உள்ள இந்தப் பள்ளிக்கு மலேசியாவின் மன்னர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும்; பள்ளியின் வாரியத் தலைவரான பேராக் சுல்தான் ஒவ்வோர் ஆண்டும் அரச வருகை தருகிறார்கள். அத்துடன் கோலா கங்சார் மலாய் கல்லூரியின் வாரிய உறுப்பினர்கள் அனைவரும் மலேசிய ஆட்சியாளர்களின் பேரவையினால் நியமிக்கப்படுகிறார்கள்.
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
[தொகு]- கோலா கங்சார் மலாய் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்
-
துவாங்கு அப்துல் ரகுமான், 1-ஆவ்து மலேசிய பேரரசர்
-
புரூணை 29-ஆவது சுல்தான் உமர் அலி சைபுதீன்
-
அப்துல் ரசாக் உசேன், 2-ஆவது மலேசியப் பிரதமர்
-
அன்வர் இப்ராகீம், 10-ஆவது மலேசியப் பிரதமர்
-
நிக் நசுமி நிக் அகமட் மலேசிய இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் அமைச்சர்
-
தெங்கு சப்ருல் அப்துல் அசீஸ், மலேசிய முதலீடு, வணிகம் தொழில்துறை அமைச்சர்
-
ஓன் ஜாபார், 7-ஆவது ஜொகூர் மந்திரி பெசார்
-
ரசாலி இசுமாயில், தலைவர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
-
சுல்கிப்லி அப்துல் ரசாக், மலேசிய இசுலாமிய பல்கலைக் கழகம்
-
சார்லி அத்ரே சர்க்கும், மலேசிய கட்டிடக் கலைஞர்கள் நிறுவனம்
மேலும் காண்க
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Neil J Ryan. The Last Expatriate: Reminiscences of an educationalist in Malaysia. Utusan Publications & Distributors Sdn. Bhd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-61-1730-7
- Nik Ismail Nik Daud. Arbain Kadri. Prosiding Simposium MCOBA 1. 3 December 1989.
சான்று நூல்கள்
[தொகு]- Khasnor Johan|Johan, Khasnor. Educating The Malay Elite: The Malay College Kuala Kangsar, 1905-1941. Pustaka Antara. Malay College Old Boys Association. The Malaysian Branch of the Royal Asiatic Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-937-356-8
- Johan, Khasnor. Leadership But What's Next? பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-3318-52-5
- Paridah Abd. Samad (2009). Datuk Seri Najib: A Long Political Journey. From The Golden Boy of Malaysian Politics to Malaysia's Sixth Prime Minister. Partisan Publication & Distribution. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-99417-4-6
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Maktab Melayu Kuala Kangsar, arkib.gov.my
- ↑ "About MCKK".
- ↑ "Directory: Malay College Kuala Kangsar". International Baccalaureate Organisation.
- ↑ Kecemerlangan sekolah satu gender, Utusan Online
- ↑ Federation of Malaya: Annual Report 1946 (Report) (in English). The Stationery Office. p. 56. Retrieved 2024-11-27.
{{cite report}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Baharom, Raslan (27 March 2005). "Archives; The Star Online". Thestar.com.my. Retrieved 6 December 2013.
- ↑ "Boarding Schools / Residential Schools in Malaysia - Malaysia Students Web". web.malaysia-students.com. Retrieved 2017-11-04.
- ↑ "MCKK declared a national heritage by King in elaborate ceremony - Nation | The Star Online". www.thestar.com.my. Retrieved 2017-11-04.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் கோலா கங்சார் மலாய் கல்லூரி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Official website