கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1
| கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1 | |
|---|---|
| Kuala Lumpur Middle Ring Road 1 Jalan Lingkaran Tengah 1 Kuala Lumpur | |
| வழித்தடத் தகவல்கள் | |
| பயன்பாட்டு காலம்: | 1983 தொடக்கம் – |
| வரலாறு: | கட்டுமான நிறைவு: 1995 |
| முக்கிய சந்திப்புகள் | |
| தொடக்கம்: | இசுதானா பறிமாற்றச் சாலை |
|
| |
| முடிவு: | இசுதானா பறிமாற்றச் சாலை |
| அமைவிடம் | |
| முதன்மை இலக்குகள்: | கேஎல்எல்சி; செந்தூல்; தித்திவங்சா |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1 அல்லது கோலாலம்பூர் மத்திய சுற்றுச் சாலை 1 (ஆங்கிலம்: Kuala Lumpur Middle Ring Road 1 (MRR1); மலாய்: Jalan Lingkaran Tengah 1 Kuala Lumpur) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தின் முக்கிய நகர்ப்புற மற்றும் நகராட்சி சாலைகளில் ஒன்றாகும். மேலும், முன்பு பெக்கெலிலிங் சாலை (Jalan Pekeliling) என்று அழைக்கப்பட்ட துன் ரசாக் சாலை, சுல்தான் இசுகந்தர் நெடுஞ்சாலை, மகாமேரு நெடுஞ்சாலை (Lebuhraya Mahameru), டாமன்சாரா சாலை, ஜாலான் இசுதானா சாலை போன்ற சாலைகளையும் கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1 உள்ளடக்கியது.[1]
மலேசியாவின் தலைநகரைச் சுற்றியுள்ள ஒரு பெரிய வளையச் சாலையாகவும் அறியப்படுகிறது. கோலாலம்பூர்-பெட்டாலிங் ஜெயா போக்குவரத்து பரவல் திட்டம் (Kuala Lumpur-Petaling Jaya Traffic Dispersal Scheme) என்றும் தற்போது அழைக்கப்படுகிறது. பரபரப்பான இந்தச் சுற்றுச் சாலையை கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) பராமரிக்கிறது.[2]
வரலாறு
[தொகு]கோலாலம்பூர் மத்திய வளைய சாலை 1-இன் தொடக்கக்காலப் பகுதி, மலேசிய நாடாளுமன்றக் கட்டிடத்திலிருந்து கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம் அமைந்துள்ள பத்து ஆறு வரை செல்கிறது. அப்போது அந்தச் சாலை நாட்டின் விடுதலைக்குப் பிறகு 1960-ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது.[1]
இரண்டாவது பகுதி, மலேசிய நாடாளுமன்றக் கட்டிடத்திலிருந்து இசுதானா நெகாரா வரை 1970-களில் கட்டப்பட்டது. இன்று இந்தச் சாலை பொதுவாக டாமன்சாரா சாலை என்று அழைக்கப்படுகிறது.
இசுதானா நெகாரா அரண்மனையிலிருந்து சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையம் வரையிலான மூன்றாவது பகுதி 1980-களில் கட்டப்பட்டது. இப்போது இஸ்தானா சாலை என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து சுங்கை பீசி சாலை மற்றும் துன் ரசாக் சாலையுடன் கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1 இணைகிறது. பின்னர் மகாமேரு நெடுஞ்சாலையுடன் மீண்டும் இணைகிறது.[1]
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2
[தொகு]கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் கட்டுமானமானது; பின்வரும் பல முக்கியச் சாலைகளைக் கையகப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது:[3]
| நெடுஞ்சாலை சின்னம் |
சாலைகள் | பிரிவுகள் |
|---|---|---|
| சுங்கை பூலோ நெடுஞ்சாலை | பண்டார் செரி டாமன்சாரா–கெப்போங் | |
| கெப்போங்–செலாயாங் நெடுஞ்சாலை | கெப்போங்–தாமான் டாயா | |
| பத்து மலை சாலை | பத்து மலை–தாமான் கிரீன்வூட் | |
| கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை | தாமான் கிரீன்வூட்–வடக்கு கோம்பாக் | |
| தாமான் மெலாத்தி சாலை | தாமான் மெலாத்தி–தாமான் மெலாவத்தி | |
| உலு கிள்ளான் சாலை | தாமான் மெலாவத்தி–அம்பாங் ஜெயா | |
| பாண்டான் உத்தாமா சாலை | பாண்டான் ஜெயா–பாண்டான் இண்டா | |
| செராஸ் பாரு சாலை | குவாரி சாலை–செராஸ் வட்டச்சுற்று வழி | |
| மீடா உத்தாமா சாலை | செராஸ் வட்டச்சுற்று வழி–தாமான் மீடா | |
| பண்டார் தாசேக் செலாத்தான் சாலை | பண்டார் மேவா–பண்டார் தாசேக் செலாத்தான் |
காட்சியகம்
[தொகு]கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1 காட்சிப் படங்கள்
-
துன் ரசாக் சாலை 1
-
துன் ரசாக் சாலை 2
-
துன் ரசாக் சாலை 3
-
இசுதானா சாலை சுற்றுவட்டம்
விளக்கம்
[தொகு]- மலேசிய கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia)
- மலேசிய நெடுஞ்சாலை: (ஆங்கிலம்: Malaysian Highway; மலாய்: Laluan Malaysia)
- மலேசிய விரைவுச்சாலை: (ஆங்கிலம்: Malaysian Expressway; மலாய்: Lebuhraya Malaysia)
மேலும் காண்க
[தொகு]- கோலாலம்பூர் உள்வட்டச் சாலை
- கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2
- வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பு
- துவாங்கு அப்துல் அலிம் சாலை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Kuala Lumpur Middle Ring Road 1 is a major ring road encircling the capital of Malaysia. Also called the Kuala Lumpur-Petaling Jaya Traffic Dispersal Scheme". Penang Travel Tips (in ஆங்கிலம்). Retrieved 2 October 2025.
- ↑ "Kuala Lumpur has three ring roads for more effective traffic management following the increase in the use of motor vehicles which leads to road congestion problems". Blog Jalan Raya Malaysia (Malaysian Highway Blog). 14 January 2015. Retrieved 2 October 2025.
- ↑ Statistik Jalan Raya Malaysia 2018, KKR

