உள்ளடக்கத்துக்குச் செல்

கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கம்

ஆள்கூறுகள்: 3°08′31.9″N 101°42′38.2″E / 3.142194°N 101.710611°E / 3.142194; 101.710611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கம்
Berjaya Times Square
Berjaya Times Square KL
பெர்ஜெயா கோபுரம்
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவு பெற்றது
வகைகுடியிருப்பு; தங்கும் விடுதி
கட்டிடக்கலை பாணிநவீன கட்டிடக்கலை
இடம்1 இம்பி சாலை கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூற்று3°08′31.9″N 101°42′38.2″E / 3.142194°N 101.710611°E / 3.142194; 101.710611
கட்டுமான ஆரம்பம்1997
நிறைவுற்றது2003
உயரம்
கட்டிடக்கலை210 m (690 அடி)
முனை227 m (745 அடி)
அலைக்கம்ப கோபுரம்17 m (56 அடி)
கூரை203 m (666 அடி)
மேல் தளம்205.7 m (675 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை49 (கோபுரம் A)
48 (கோபுரம் B)
19 (அங்காடி கடைகள்)
உயர்த்திகள்31
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக் கலைஞர்(கள்)டிபி கட்டிடக் கலைஞர்கள்
(DP Architects)
பிற தகவல்கள்
பொது போக்குவரத்து அணுகல் MR5  இம்பி நிலையம்
மேற்கோள்கள்
[1]

கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கம் அல்லது பெர்ஜெயா டைம்ஸ் சதுக்கம் (மலாய்; Berjaya Times Square KL; ஆங்கிலம்: Berjaya Times Square) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையம், புக்கிட் பிந்தாங் நகர மையப் பகுதியில், 203 மீ; (666 அடி) உயரத்தில் உள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும்.[2]

இது ஓர் இரட்டை கோபுரக் கட்டிடமாகும். இதில் தங்கும் விடுதி, காண்டோமினியம் (condominium) எனும் தளவீடுகள், உட்புறப் பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக மையங்கள் மற்றும் கடைவல வளாகங்கள் போன்றவை உள்ளன. இந்த இரட்டைக் கோபுரம் 2003-இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

அமைவு

[தொகு]

தரைப் பரப்பளவில், தற்போது இந்தக் கோபுரம், உலகின் பத்தாவது பெரிய கட்டிடமாகச் சாதனை படைக்கிறது. இதன் தரைப் பரப்பளவு 700,000 மீ2 (7,500,000 சதுர அடி). அத்துடன், இதுவரையில் ஒரே கட்டத்தில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கட்டிடம் என்றும் சாதனை படைக்கிறது. மேலும் இந்தச் சாதனை மலேசிய சாதனை நூலில் (The Malaysia Book of Records) இடம்பெற்று உள்ளது.[3]

இந்தக் கட்டிடம் 19-மாடி கடைவல வளாகங்கள், வணிக அலுவலகங்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள், 1,200 சொகுசு சேவை அறைகள், 65 உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களைக் கொண்ட ஓய்வு மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பொழுதுபோக்கு ஈர்ப்பாக பெர்ஜெயா டைம்ஸ் பொழுதுபோக்கு பூங்கா (Berjaya Times Square Theme Park) உள்ளது.[4][5]

வரலாறு

[தொகு]

கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கம் அமைந்துள்ள இடம்; தொடக்கத்தில், இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, மலேசியச் செல்வந்தரும், கொடையாளருமான சியோங் யோக் சோய் (Cheong Yoke Choy) என்பவருக்குச் சொந்தமாக இருந்தது.

சியோங் யோக் சோய், கோலாலம்பூரின் தொடக்கக் கால உருவாக்குநர்களில் ஒருவர் ஆவார். தம் சொத்துகளில் பெரும்பகுதியை மலேசிய மக்களின் உடல்நலம் சார்ந்த செயல்பாடுகளுக்கும்; அறப் பணிகளுக்கும்; பள்ளிகளுக்கும்; நன்கொடையாக வழங்கி உள்ளார்.[6] இவரின் பெயரில் சியோங் யோக் சோய் தெரு; சியோங் யோக் சோய் சாலை என இரு சாலைகளுக்குப் பெயர் சூட்டப்பட்டு உள்ளன.

அதன் பின்னர், பெர்ஜெயா டைம்ஸ் சதுக்கத்தின் மேம்பாட்டிற்காக டான் ஸ்ரீ வின்சென்ட் டான் (Vincent Tan) என்பவரின் பெர்ஜெயா குழுமத்தால் (Berjaya Corporation) முழு நிலமும் வாங்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடியும் வரையில் அந்தச் செல்வந்தரின் மாளிகை அங்கேயே இடிக்கப்படாமல் இருந்தது.[7]

திறப்பு

[தொகு]
பெர்ஜெயா சதுக்கம் கட்டப்படுவதற்காக இடிக்கப்பட்ட சியோங் யோக் சோய் மாளிகை (2019)

பெர்ஜெயா டைம்ஸ் சதுக்கம் அப்போதைய மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் முகமது அவர்களால் செப்டம்பர் 29, 2003 அன்று முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.[8] முதலில் 1999-ஆம் ஆண்டில் திறக்கப்படுவதற்காக, நாள் குறிக்கப்பட்டது. இருப்பினும் 1997 ஆசிய நிதி நெருக்கடியின் காரணமாக, திறப்பு நிகழ்வு கால தாமதம் ஆனது.[9]

போக்குவரத்து

[தொகு]

கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கம்; கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் உள்ள இம்பி நிலையத்திற்கு வடக்கில் உள்ளது. மேலும், புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையத்திற்கு (Bukit Bintang MRT station) தென்மேற்குப் பகுதியில், நடந்து செல்லும் தொலைவிலும் உள்ளது.

காட்சியகம்

[தொகு]

கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கம்; காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The 100 Tallest Completed Buildings in the World in 2025 - The Skyscraper Center". www.skyscrapercenter.com. Retrieved 6 February 2025.
  2. "The Berjaya Times Square of Kuala Lumpur is a shopping centre with 9 floors of shops. There's a good mix of stores throughout the floors". 2025 Tripadvisor. Retrieved 7 February 2025.
  3. "Berjaya Times Square Theme Park has been inducted into the Malaysia Book of Records as the First Largest Indoor Theme Park in Malaysia. The gigantic indoor theme park, measuring 133,000 square feet". Berjaya Times Square Theme Park. Retrieved 7 February 2025.
  4. "Berjaya Times Square". Asia Rooms. 30 October 2010. Archived from the original on 27 July 2011. Retrieved 2 March 2012.
  5. "The gigantic indoor theme park, measuring 133,000 square feet, offers 2 exciting sections – Galaxy Station for the thrill seekers and Fantasy Garden for the young ones". Berjaya Times Square Theme Park. Retrieved 7 February 2025.
  6. http://www.kwongsiew.org/aboutus03g.php பரணிடப்பட்டது 18 சூன் 2008 at the வந்தவழி இயந்திரம்
  7. "Berjaya Times Square – World's Largest Shopping Mall Building". Burj. 6 September 2010. Retrieved 2 March 2012.
  8. "Tycoon to inject KL mall into listed company". Business Times (Singapore). Associated Press. 30 September 2003. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/biztimes20030930-1.2.28.2?qt=berjaya,%20times,%20square,%20theme,%20park&q=berjaya%20times%20square%20theme%20park. 
  9. "Berjaya Times Sq opens". The New Paper. 30 September 2003. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/newpaper20030930-1.2.36.8?qt=berjaya,%20times,%20square,%20theme,%20park&q=berjaya%20times%20square%20theme%20park. 

வெளி இணைப்புகள்

[தொகு]