கோலாலம்பூர் நீதிமன்ற வளாகம்
கோலாலம்பூர் நீதிமன்ற வளாகம் Kuala Lumpur Courts Complex Kompleks Mahkamah Kuala Lumpur | |
---|---|
مجمع محاكم كوالالمبور | |
![]() கோலாலம்பூர் நீதிமன்ற வளாகம் (2008) | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | முழுமையானது |
வகை | உயர் நீதிமன்றம் |
கட்டிடக்கலை பாணி | இஸ்லாமியக் கட்டிடக்கலை மூரிஷ் கட்டிடக்கலை பல்லேடியன் கட்டிடக்கலை; புதுச்செவ்வியல்வாதம் |
நகரம் | கோலாலம்பூர் |
நாடு | மலேசியா |
ஆள்கூற்று | 3°10′37″N 101°40′16″E / 3.1769°N 101.6710°E |
அடிக்கல் நாட்டுதல் | 2004 |
கட்டுமான ஆரம்பம் | 2004 |
நிறைவுற்றது | 2007 |
துவக்கம் | 2007 |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 5 |
கோலாலம்பூர் நீதிமன்ற வளாகம் (மலாய்:Kompleks Mahkamah Kuala Lumpur; ஆங்கிலம்:Kuala Lumpur Courts Complex; சீனம்: 吉隆坡法院大楼) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையத்தில் அமைந்துள்ள மலேசிய நீதித்துறை வளாகம் ஆகும். இந்த வளாகம் பல்வேறு நிலையிலான மலேசிய நீதிமன்றங்களைக் கொண்டுள்ளது.[1]
இந்த வளாகம் கோலாலம்பூர், சிகாம்புட்டில் உள்ள டூத்தா சாலையில் (Duta Road) அமைந்துள்ளது. முன்பு இந்த வளாகம், மெர்டேக்கா சதுக்கத்திற்கு முன்னால் உள்ள குடியேற்றவியக் கட்டடங்களில் இருந்தது. தற்போது முந்தைய இடத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் (2.5 மைல்) தொலைவிற்கு இடப்பெயர்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்தக் கட்டடம் மார்ச் 1, 2004 அன்று ரிங்கிட் RM290 மில்லியன் செலவில் கட்டப்பட்டு; ஏப்ரல் 18, 2007 அன்று பொதுப் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது; மற்றும் மே 3, 2007 அன்று முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தது.
பொது
[தொகு]கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்றம் (High Court), மாஜிஸ்திரேட் குற்றவியல் நீதிமன்றம் (Magistrates' Court); குற்றவியல் அமர்வு நீதிமன்றம் (Sessions Court) போன்ற நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றைத் தவிர, போக்குவரத்து குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள இரவுநேர நீதிமன்றங்களும் செயல்படுகின்றன.[2]
அதிக எண்ணிக்கையிலான நீதிமன்ற வழக்குகளை ஒரே நேரத்தில் நடத்தவும், கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள நீதித்துறை கிளைகளை, ஒரே கட்டடத்தில் மையப்படுத்தவும் திட்டமிடப்பட்டு கோலாலம்பூர் நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டது.
அமைவு
[தொகு]

இந்த வளாகத்தில் தரை மட்டத்தில் இருந்து ஆறு மாடித் தளங்கள் உள்ளன. ஒவ்வொரு தளத்திலும் எண்கள் கொண்ட நீதிமன்ற அறைகள் உள்ளன. கட்டிடத்தின் இருபுறமும் நீதிமன்ற அறைகள் அமையப் பெற்றுள்ளன.
உயர் நீதிமன்றங்களுக்கு 30 நீதிமன்ற அறைகளும்; அமர்வு நீதிமன்றங்களுக்கு 21 நீதிமன்ற அறைகளும்; மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு 26 நீதிமன்ற அறைகளும் இந்த வளாகத்தில் உள்ளன. இந்த வளாகம் அமைக்கப்பட்ட போது உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கு முன்னர் உலகின் மிகப்பெரிய நீதிமன்ற வளாகம் என்று அறியப்படுகிறது.
வாகன நிறுத்துமிடங்கள்
[தொகு]கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்காக 500 வாகன நிறுத்துமிடங்கள், நீதிமன்ற ஊழியர்களுக்காக 300 வாகன நிறுத்துமிடங்கள்; மற்றும் நீதிபதிகளுக்கு என 200 வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட 500 வாகன நிறுத்துமிடங்களில் வழக்கறிஞர்களும் பகிர்ந்து கொள்வதால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாகப் புகார்களும் உள்ளன.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில், ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வழக்கறிஞர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தனிப்பட்ட வாகன நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து அமர்வு நீதிமன்ற விசாரணைகள் அல்லது மாஜிஸ்திரேட் நீதிமன்ற விசாரணைகள்; பிற்பகல் 2.00 மணிக்கு மேல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது; மேலும் புதிய நீதிமன்ற வளாகத்திற்கான பேருந்து சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.[1] [2].
போக்குவரத்து
[தொகு]இந்த வளாகத்தை மலாயா தொடருந்து சேவையின் KA05 சிகாம்புட் கொமுட்டர் நிலையம் வழியாக அணுகலாம்.
ரேபிட் கேஎல் T821 பேருந்து, இந்த நீதிமன்ற வளாகத்தை
காஜாங் வழித்தடத்தின் KG14 செமாந்தான் எம்ஆர்டி நிலையத்துடன் இணைக்கிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A BRIEF HISTORY OF THE MALAYSIAN COURT SYSTEM - Thomas Philip Advocates and Solicitors, Kuala Lumpur, Malaysia". www.thomasphilip.com.my. Retrieved 13 February 2022.
- ↑ "Night Courts at New Court Complex From May 3". Bernama. 24 April 2007. Retrieved 25 April 2007.
- "New Kuala Lumpur court complex ready by March". The Star (Malaysia]] Online. 8 September 2006. http://thestar.com.my/news/story.asp?file=/2006/9/8/nation/20060908173802&sec=nation. பார்த்த நாள்: 25 April 2007.
- L.Y., Chelsea Ng; Mageswari, M. (11 March 2007). "World's biggest court complex to open in May". The Star (Malaysia)]] Online. http://thestar.com.my/news/story.asp?file=/2007/3/11/nation/17079845&sec=nation. பார்த்த நாள்: 25 April 2007.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Kuala Lumpur Courts Complex தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Official Website