கோலாலம்பூர் நகரக் கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோலாலம்பூர் நகரக் கூடம்
திவான் பந்தராயா கோலாலம்பூர்
வகை
வகைஉள்ளாட்சி அமைப்பு
தலைமை
மேயர்மொகமது அமின் நோர்டின் அப்துல் அசீசு
கூடும் இடம்
ஜலான் ராஜா லவுட்டில் உள்ள கோலாலம்பூர் நகரக் கூட கட்டிடம்

கோலாலம்பூர் நகரக் கூடம் (Kuala Lumpur City Hall, மலாய்: திவான் பந்தராயா கோலாலம்பூர், டிபிகேஎல்) கோலாலம்பூரை நிர்வகிக்கும் உள்ளாட்சி மன்றமாகும். இது மலேசிய கூட்டாட்சிப் பகுதிகளின் அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றது.[1]

பொதுநலம் மற்றும் சுகாதாரம், குப்பை நீக்கம் மற்றும் மேலாண்மை, நகரத் திட்டமிடல், சூழல் பாதுகாப்பு, கட்டிடப் பாதுகாப்பு, சமூக,பொருளியல் மேம்பாடு, நகரியக் கட்டமைப்பின்பொதுப் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றிற்கு இந்த நகர மன்றம் பொறுப்பாகும். இதற்கான செயலாற்று அதிகாரம் நகரக் கூடத்தின் மேயருக்கு வழங்கப்பட்டுள்ளது; 1970 முதல் உள்ளாட்சித் தேர்தல்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் கூட்டாட்சிப் பகுதி அமைச்சு மேயரை மூன்று ஆண்டு பதவிக்காலத்துடன் நியமிக்கின்றது.[2] கோலாலம்பூரின் தற்போதைய மேயராக மொகமது அமின் நோர்டின் அப்துல் அசீசு பொறுப்பிலுள்ளார்; இவர் சூலை 18, 2015இல் பதவியேற்றார்.[3]

இந்த நகர மன்றத்தின் தலைமை அலுவலகம் ஜலான் ராஜா லவுட்டில் உள்ள கோலாலம்பூர் நகரக் கூட கட்டிடத்தில் இயங்குகின்றது. மற்றுமொரு கட்டிடம் மினாரா டிபிகேஎல் 2 கட்டிடம் இதன் பின்புறம் உள்ளது; மேலுமொரு கட்டிடம், மினாரா டிபிகேஎல் 3 ஜலான் ராஜா அப்துல்லாவில் உள்ளது. கோலாலம்பூரில் இதற்கு 11 கிளை அலுவலகங்கள் உள்ளன.

வரலாறு[தொகு]

இந்த அமைப்பு முன்னதாக கோலாலம்பூர் நகராட்சி மன்றம் (மலாய் மொழியில்: மஜிலிசு பந்தரன் கோலாலம்பூர்) என்றழைக்கப்பட்டு வந்தது. பிரித்தானிய குடியேற்றக் காலங்களிலும் விடுதலைக்கு பின்னரும் கோலாலம்பூர் நாட்டின் தலைநகரமாகவும் சிலாங்கூரின் தலைநகரமாகவும் இருந்துள்ளது.

ஏப்ரல் 1, 1961இல் இவ்வமைப்பின் பெயர் கோலாலம்பூர் கூட்டாட்சி தலைநகர் ஆணையம் (மலாய் மொழியில்: சுருகஞ்சய இபு கோட்டா) என மாற்றப்பட்டது.

கோலாலம்பூர் பெப்ரவரி 1, 1972இல் நகரத்திற்கானத் தகுதியை எட்டியது.[4] விடுதலைக்குப் பிறகு மலேசியாவில் இத்தகுதி பெற்ற முதல் குடியிருப்பாக கோலாலம்பூர் விளங்கியது. அப்போது இதன் பெயர் கோலாலம்பூர் நகரக் கூடம் (மலாய் மொழியில்: திவான் பந்தராய கோலாலம்பூர்) எனப்பட்டது. பின்னர், பெப்ரவரி 1, 1974இல் கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியானது.[5] 1978 முதல் சிலாங்கூரின் புதிய தலைநகரமாக ஷா ஆலாம் அறிவிக்கப்பட்டு கோலாலம்பூர் அத்தகுதியை இழந்தது.[6]

ஏப்ரல் 1, 1961 முதல் கூட்டாட்சி தலைநகர ஆணையர் (மலாய் மொழியில்: பெர்சுருஜய இபு கோட்டா) என அழைக்கப்பட்ட ஒற்றை நகராட்சியரால் ஆளப்பட்டது. பெப்ரவரி 1, 1972இல் நகரமாக தகுதி வழங்கப்பட்ட பின்னர் நிர்வாக அதிகாரம் மேயருக்கு (மலாய் மொழியில்: தாதுக் பந்தர்) வழங்கப்பட்டது.[1]

மேயரை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டாட்சிப் பகுதிகளுக்கான அமைச்சர் நியமிக்கின்றார். 1970இல் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு இடைநிறுத்தம் ஏற்பட்டதிலிருந்து இந்த முறைமை நிலுவையில் உள்ளது.[2]

மே 14, 1990இல் கோலாலம்பூர் உள்ளாட்சி மன்றத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடியது. அச்சமயத்தில் கோலாலம்பூருக்கான கொடியும் நகரப் பண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டன.

கோலாலம்பூரின் மேயர்கள்[தொகு]

1972 முதல் பத்து மேயர்கள் பதவியில் இருந்துள்ளனர். தற்போதைய மேயராக மொகமது அமின் நோர்டின் அப்துல் அசீசு உள்ளார்; இவர் சூலை 18, 2015இல் பதவியேறினார்.[3] முன்னாள் மேயர்களின் பட்டியல்:

# பெயர் பதவியில்
1. லோக்மன் யூசொஃப் 1972
2. யகூப் லத்தீஃப் 1973 - 1983
3. எலியாசு ஓமர் 1983 - 1992
4. மசலன் அகமது 1992 - 1995
5. கமருசமான் சரீஃப் 1995 - 2001
6. மொகமது சயீத் மொகமது டௌஃபெக் 2001 - 2004
7. ருசுலின் அசன் 2004 - 2006
8. அப். அக்கீம் போர்கன் 2006 - 2008
9. அகமது புயத் இசுமாயில் 2008 - 2012
10. அகமது பெசல் தலிப் 2012 - 2015
11. மொகமது அமின் நோர்டின் அப்துல் அசீசு 2015 -

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Kuala Lumpur City Hall". Ministry of Federal Territories and Urban Wellbeing. பார்த்த நாள் 18 September 2010.
  2. 2.0 2.1 "Malaysia's towns and cities are governed by appointed mayors". City Mayors. 2006. http://www.citymayors.com/government/malaysia_government.html. பார்த்த நாள்: 9 October 2006. 
  3. 3.0 3.1 "About KL City Hall - History". Kuala Lumpur City Hall. பார்த்த நாள் 18 September 2010.
  4. "Destinations: Kuala Lumpur". Tourism Malaysia. பார்த்த நாள் 16 December 2007.
  5. "Kuala Lumpur". Columbia Encyclopedia, Sixth Edition 2007. Columbia University Press. பார்த்த நாள் 6 December 2007.
  6. "Sejarah Shah Alam" (Malay). Shah Alam City Council. மூல முகவரியிலிருந்து 26 October 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 December 2007.

வெளி இணைப்புகள்[தொகு]