கோலாலம்பூர் கால்பந்துச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோலாலம்பூர் கால்பந்துச் சங்கம்
Kuala Lumpur FA Logo.png
முழுப்பெயர்கோலாலம்பூர் கால்பந்துச் சங்கம்
பெர்சாத்துயன் போலா செபக் கோலாலம்பூர்
அடைமொழிநகர அணி
நகரப் பசங்க Boys
பருந்துகள்
தோற்றம்கூட்டாட்சிப் பகுதி காற்பந்து சங்கமாக 1974இல்
ஆட்டக்களம்செலாயங் விளையாட்டரங்கம்
ஆட்டக்கள கொள்ளளவு25,000
அவைத்தலைவர்அத்னான் மொகமது அக்சன்
பயிற்சியாளர்இசுமாயில் சக்காரியா
கூட்டமைப்புமலேசியா பிரீமியர் லீக்
2015மலேசிய பிரீமியர் லீக், 11வது

கோலாலம்பூர் காற்பந்துச் சங்கம் (Kuala Lumpur Football Association, மலாய்: ['பெர்சாத்துயன் போலா செபக் கோலாலம்பூர்'] error: {{lang}}: text has malformed markup (உதவி)), மலேசிய கூட்டாட்சிப் பகுதியான கோலாலம்பூரில் காற்பந்துச் செயற்பாடுகளை மேற்பார்வையிடும் காற்பந்துச் சங்கமாகும்.

கோலாலம்பூர் காற்பந்துச் சங்கம் 1974இல் கோ ஆ சாய் மற்றும் கே. இராசலிங்கத்தால் நிறுவப்பட்டது. துவக்கத்தில் இது கூட்டாட்சிப் பகுதி காற்பந்துச் சங்கம் எனப்பட்டது. 1979இலிருந்து மலேசிய காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்று வரும் இச்சங்கம் 1986இல் தற்போதுள்ள பெயருக்கு மாறியது.

1980களில் அச்சங்கம் சாதனைகளை நிகழ்த்தியது; 1986இலும் 1988இலும் லீக் வெற்றியாளராக விளங்கியது. 1987, 1988,1989 எனத் தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் மலேசியக் கோப்பையை வென்றனர். 1990களிலும் கோப்பை போட்டிகளில் வெற்றிகளை ஈட்டியது. 1993, 1994, 1999இல் மலேசிய கோப்பையை வென்றது. மலேசிய அறக்கட்டளை கேடயத்தையும் சுல்தான் ஆஜி அகமது ஷா கோப்பையையும் 1988, 1995, 2000ஆம் ஆண்டுகளில் வென்றுள்ளது.

இந்தச் சங்கத்திற்கும் செலாங்கூர் காற்பந்துச் சங்கத்திற்கும் கடுமையான போட்டி நிலவுகின்றது. இவை இரண்டுக்கும் இடையேயான போட்டிகள் கிளாங் பள்ளத்தாக்கு டெர்பி என்றழைக்கப்படுகின்றன. 2012இல் கோலாலம்பூர் கூட்டிணைவுப் போட்டிகளில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது; 2013இல் தனது வரலாற்றில் முதன்முறையாக மேலும் தாழ்ந்து மூன்றாம் நிலைக்கு வந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]