கோலாலம்பூர் உள்வட்டச் சாலை
| கோலாலம்பூர் உள்வட்டச் சாலை | |
|---|---|
| Kuala Lumpur Inner Ring Road Jalan Lingkaran Dalam Kuala Lumpur | |
| வழித்தடத் தகவல்கள் | |
| பராமரிப்பு : வெள்ளநீர் மற்றும் சுரங்கப்பாதை மேலாண்மை நிறுவனம் (SMART) | |
| நீளம்: | 4 km (2.5 mi) |
| முக்கிய சந்திப்புகள் | |
| வடக்கு முடிவு: | எடின்பர்க் வட்டச்சுற்று |
| |
| முடிவு: | எடின்பர்க் வட்டச்சுற்று |
| அமைவிடம் | |
| முதன்மை இலக்குகள்: | கம்போங் பாரு; கோலாலம்பூர் மாநகர மையம்; புக்கிட் பிந்தாங்; புடு |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
கோலாலம்பூர் உள்வட்டச் சாலை (ஆங்கிலம்; Kuala Lumpur Inner Ring Road; மலாய்: Jalan Lingkaran Dalam Kuala Lumpur) என்பது மலேசியா, கோலாலம்பூரின் நகர்ப்புற மற்றும் நகராட்சி சுற்றுச் சாலை அமைப்பாகும். இந்த உள்வட்டச் சாலைக்குள் சுல்தான் இசுமாயில் சாலை (Jalan Treacher), இம்பி சாலை, மலேசிய கூட்டரசு சாலை 1, கூச்சிங் சாலை, சுல்தான் இசாமுதீன் சாலை (Victory Avenue), கினாபாலு சாலை, மகாராஜா லேலா சாலை (Jalan Maharajalela) ஆகிய சாலைகள் இணைந்துள்ளன.[1]
கோலாலம்பூரின் தங்க முக்கோணம் இந்த உள்வட்டச் சாலை எல்லைக்குள்தான் உள்ளது.
மேம்பாடுகள்
[தொகு]கட்டுமானப் பணிகள் 2007-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கி 2009-ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவடைந்தன. இந்தத் திட்டம் கோலாலம்பூர் மாநகராட்சியின் நிர்வாகத்தால் (DBKL) வழிநடத்தப்படுகிறது.
புடு சாலை-ஆங் துவா சந்திப்புகள்
[தொகு]புடு சாலைக்கும் ஆங் துவா சாலைக்கும் இடையில் இருந்த 114 ஆண்டுகள் பழமையான புடு சிறைச்சாலையின் சுவர்கள் கோலாலம்பூர் மாநகராட்சியால் 20 சூன் 2010 அன்று இடிக்கப்பட்டது. இது புடு சாலை விரிவாக்கம் மற்றும் சுரங்கப்பாதை திட்டத்திற்கு வழி வகுத்தது. பிப்ரவரி 2022-இல் புடு சிறைச்சாலை வளாகம், புக்கிட் பிந்தாங் நகர மையமாக மாற்றப்பட்டது.[2]
ராஜா சூலான் - இம்பிக்கும் இடைப்பட்ட பகுதி
[தொகு]2007-ஆம் ஆண்டில், ராஜா சூலான் சாலை மற்றும் இம்பி சாலை சந்திப்புகளுக்கு இடையிலான உள் வளையச் சாலையின் ஒரு பகுதி, இஸ்மார்ட் சுரங்கப்பாதை திறக்கப்பட்டதன் காரணமாக ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது.
அதே காலக்கட்டத்தில், சுல்தான் இசுமாயில்-கம்போங் பாண்டான் இணைப்புப் பாதையும் திறக்கப்பட்டது.
மேலும் காண்க
[தொகு]- கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1
- கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2
- வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பு
- சுங்கை பீசி விரைவுச்சாலை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jalan Sultan Ismail - Kuala Lumpur Inner Ring Road. Formerly named after William Hood Treacher, a British Resident during British Malaya era". klia.info. Retrieved 3 October 2025.
- ↑ "The Kuala Lumpur road network comprise 3 major concentric ring roads (the Inner Ring Road, Middle Ring Road 1 and the Middle Ring Road II, with average radii of 1.5km, 3km and 10kms, respectively)" (PDF). PIARC International Seminar on Intelligent Transport System. Retrieved 3 October 2025.
