உள்ளடக்கத்துக்குச் செல்

கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Expressway 37
கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை
Kuala Lumpur–Seremban Expressway
Lebuhraya Kuala Lumpur-Seremban
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு : அனி நிறுவனம் (ANIH Berhad)
நீளம்:8.1 km (5.0 mi)
பயன்பாட்டு
காலம்:
1974 தொடக்கம் –
வரலாறு:கட்டுமான நிறைவு: 1982
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:இசுதானா சாலை, கோலாலம்பூர்
 கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1

E9 சுங்கை பீசி விரைவுச்சாலை
E38 இசுமார்ட் சுரங்கப்பாதை (SMART Tunnel)
E37 கிழக்கு–மேற்கு இணைப்பு விரைவுச்சாலை
E10 பந்தாய் புதிய விரைவுச்சாலை
E20 மாஜு விரைவுச்சாலை
E5 சா ஆலாம் விரைவுச்சாலை
217 புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை

E2 தெற்கு வழித்தடம்

தெற்கு முடிவு:சுங்கை பீசி சுங்கச்சாவடி
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
கோலாலம்பூர், சுங்கை பீசி, தாமான் தேசா, கூச்சாய் லாமா, தேசா பெட்டாலிங், செரி பெட்டாலிங், கோலாலம்பூர் விளையாட்டு நகரம், சிரம்பான், மலாக்கா, ஜொகூர் பாரு நகரம்
நெடுஞ்சாலை அமைப்பு

கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை (மலாய்; Lebuhraya Kuala Lumpur-Seremban; ஆங்கிலம்: Kuala Lumpur–Seremban Expressway சீனம்: 隆芙大道) என்பது தீபகற்ப மலேசியா, கோலாலம்பூரில் உள்ள ஒரு முக்கிய விரைவுச் சாலையாகும்.

8.1 கிமீ (5.0 மைல்) நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலை, வடக்கே கோலாலம்பூர் மாநகரையும்; தெற்கில் நெகிரி செம்பிலான், சிரம்பான் நகரையும் இணைக்கிறது. சில வரைபடங்கள் இந்த நெடுஞ்சாலையை E2 என்று பெயரிடுகின்றன. ஏனெனில் இந்தச் சாலை வடக்கு-தெற்கு விரைவுச்சாலை தெற்கு வழித்தடத்துடன் நேரடியாக இணைப்பதால் அவ்வாறு கருதப்படுகிறது.

இருப்பினும் அவ்வாறு குறிப்பிடுவது முற்றிலும் சரியானதல்ல; ஏனெனில் இந்த கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை, பிளஸ் விரைவுச்சாலைகள் அமைப்பினால் நிர்வகிக்கப்படவில்லை. மாறாக மெட்ராமேக் கார்ப்பரேசன் (Metramac Corporation) என்று முன்பு அழைக்கப்பட்ட அனி நிறுவனத்தால் (ANIH Berhad) நிர்வகிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச் சாலையின் செலவுகளை ஈடுகட்ட, சுங்கை பீசி சுங்கக் கட்டணச் சாவடியில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இருப்பினும் அந்தக் கட்டணம் 2018-ஆம் ஆண்டு நீக்கல் செய்யப்பட்டது. 2007-ஆம் ஆண்டில், சாலாக் விரைவுச்சாலையுடன் கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச் சாலை இணைக்கப்பட்டது; பின்னர் E37 எனும் சொந்த வழித்தட எண் வழங்கப்பட்டது.

வழிப் பின்னணி

[தொகு]

இந்த விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 0; ரசாக் மேன்சன் மாற்றுச் சாலையில் (Razak Mansion Interchange) தொடங்குகிறது. அதே வேளையில் அதன் தெற்கு முனையம்; மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடம் E2 -இல் சுங்கை பீசி சுங்கக் கட்டணச் சாவடிக்கு முன்னால் உள்ளது. அதன் இறுதி கிலோமீட்டர் (KM8.1) என்பது E2 மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடத்தின் கிலோமீட்டர் 310.8-இல் முடிவடைகிறது.[1]

வரலாறு

[தொகு]

கோலாலம்பூரிலிருந்து சிரம்பான் வரையிலான 63.4 கிமீ (39.3 மைல்) கட்டுப்படுத்தப்பட்ட இந்த அணுகல் விரைவுச் சாலையின் கட்டுமானம் மலேசிய இரண்டாவது திட்டத்தின் (ஆங்கிலம்: Second Malaysia Plan; மலாய்: Rancangan Malaysia Kedua) (RMK-2) ஒரு பகுதியாக 1974 மார்ச் 27-இல் தொடங்கியது; மொத்த செலவு RM 32.9 மில்லியன் ஆகும்.[2]

இந்த விரைவுச் சாலை 14 பரிமாற்றச் சாலைகள், 2 சாலையோர ஊர்தி நிறுத்தும் இடங்கள்; மற்றும் 6 சுங்கச்சாவடிகள் (சுங்கை பீசி, மலேசிய புத்ரா பல்கலைக்கழகம், காஜாங், பாங்கி, நீலாய், சிரம்பான்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மூன்று கட்டங்களாகக் கட்டப்பட்ட இந்த விரைவுச் சாலைக்கு உலக வங்கிக் கடன் வழியாக நிதியளிக்கப்பட்டது. முதல் கட்டம்: கோலாலம்பூரிலிருந்து நீலாய் வரை: இரண்டாவது கட்டம்: நீலாய் முதல் சிரம்பான் வரை;[2] மூன்றாவது கட்டம்: வாகன ஓட்டிகளுக்கு கட்டணமில்லா சேவைக்காக கோலாலம்பூரிலிருந்து சிரம்பான் வரையிலான பழைய 1 மலேசிய கூட்டரசு சாலை 1-ஐ மறுசீரமைப்பு ஆகும்.[2]

சுங்கக் கட்டணங்கள்

[தொகு]

சுங்கை பீசி சுங்கக் கட்டணச் சாவடியில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பது சூன் 1, 2018-இல் நிறுத்தப்பட்டது. மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச்சாலை மற்றும் சாலாக் விரைவுச்சாலைக்கான சுங்கச் சலுகைகள் நடைமுறைக்கு வந்தன.[3]

பிரிவு வாகனங்களின் வகை கட்டணம்
(மலேசிய ரிங்கிட் RM)
0 விசையுந்துகள் இலவசம்
1 2 அச்சுகள் மற்றும் 3 அல்லது 4 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் (வாடகை உந்து தவிர) RM 0.80
2 2 அச்சுகள் மற்றும் 5 அல்லது 6 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் (பேருந்து தவிர) RM 1.20
3 3 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகளைக் கொண்ட வாகனங்கள் RM 1.70
4 வாடகை உந்துகள் RM 0.40
5 பேருந்துகள் RM 0.60
குறிப்பு:   Touch 'n Go   தொட்டு செல் அட்டைகள், விசா/மாஸ்டர்கார்டு வங்கி அட்டைகள், SmartTAG இஸ்மார்ட் அட்டைகள் (SmartTAG) அல்லது MyRFID வானலை அடையாள அட்டை ஆகியவற்றின் மூலம் சுங்கக் கட்டணங்களைச் செலுத்தலாம். தற்காலிகமாக ரொக்கப் பணம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

காட்சியகம்

[தொகு]

கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை காட்சிப் படங்கள் (2007-2008)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Reviu dan sejarah Lebuhraya Kuala Lumpur-Seremban E37". Blog Jalan Raya Malaysia. 2014-06-18. Retrieved 2014-07-13.
  2. 2.0 2.1 2.2 "Timeline Photo". Facebook. Malaysian Ministry of Works. 2013-03-27. Retrieved 2014-07-13.
  3. Tay, Chester (31 May 2018). "No toll for KL-Seremban and Salak highways starting June 1". The Edge Markets. The Edge (Malaysia). Archived from the original on 24 June 2018. Retrieved 24 June 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • ANIH Berhad (Formally known as Metramac Corporation Sdn Bhd)