உள்ளடக்கத்துக்குச் செல்

கோலாலம்பூர்–கோலா சிலாங்கூர் விரைவுச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோலாலம்பூர்–கோலா சிலாங்கூர் விரைவுச்சாலை
Kuala Lumpur–Kuala Selangor Expressway
(LATAR Expressway)
Map
கோலாலம்பூர்–கோலா சிலாங்கூர் விரைவுச்சாலை
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு : LATAR
கேஎல்-கோலா சிலாங்கூர் எக்சுபிரசுவே நிறுவனம் (KLS)
நீளம்:32 km (20 mi)
பயன்பாட்டு
காலம்:
2008 –
வரலாறு:கட்டுமானம் தொடக்கம்: 2008
கட்டுமானம் முடிவு: 2011
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:ஈஜோக்
 54 கூட்டரசு சாலை 54

E32 மேற்கு விரைவுச்சாலை
E35 கத்திரி பெருவழி
E27 கிள்ளான் பள்ளத்தாக்கு கிழக்கு விரைவுச்சாலை

1 கோலாலம்பூர்–ரவாங் நெடுஞ்சாலை
கிழக்கு முடிவு:டெம்பிளர் பூங்கா
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
கோலா சிலாங்கூர்; ஈஜோக்; புஞ்சாக் ஆலாம்; குவாங்; ரவாங்
நெடுஞ்சாலை அமைப்பு

கோலாலம்பூர்–கோலா சிலாங்கூர் விரைவுச்சாலை E25  (ஆங்கிலம்; Kuala Lumpur–Kuala Selangor Expressway (KLS); மலாய்: Lebuhraya Kuala Lumpur–Kuala Selangor) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு விரைவுச் சாலையாகும். இந்த விரைவுச்சாலை முன்பு ஈஜோக்–டெம்பிளர் பார்க் நெடுஞ்சாலை (ஆங்கிலம்; Ijok–Templer Park Highway; மலாய்: Lebuhraya Ijok–Taman Templer), (LATAR) என்று அழைக்கப்பட்டது. தற்போது கோலாலம்பூர் வெளிவட்டச் சாலையின் (Kuala Lumpur Outer Ring Road) ஒரு பகுதியாகச் செயல்படுகிறது.[1]

இந்த அதிதுரித நெடுஞ்சாலை 32 கிமீ (20 மைல்) நீளம் கொண்டது; கோலா சிலாங்கூருக்கு அருகிலுள்ள ஈஜோக் நகரத்தையும்; ரவாங் நகரத்திற்கு அருகிலுள்ள டெம்பிளர் பூங்காயும் இணைக்கிறது.[1] இருப்பினும் இந்தச் சாலையின் பெயருக்கு ஏற்றவாறு இந்தச் சாலை கோலாலம்பூர் மாநகரத்தை இணைக்கவில்லை. கோலாலம்பூர் மாநகரத்திற்குச் செல்ல வேண்டியவர்கள் 1 கோலாலம்பூர்–ரவாங் நெடுஞ்சாலை (Kuala Lumpur–Rawang Highway) வழியாக மேலும் 20 கிமீ பயணிக்க வேண்டும்.

வழிப் பின்னணி

[தொகு]

கோலா சிலாங்கூருக்கு அருகிலுள்ள ஈஜோக் நகரத்தில், இந்த விரைவுச் சாலையின் 0 (சுழிய) கிலோமீட்டர் அமைந்துள்ளது. கோலாலம்பூர்–கோலா சிலாங்கூர் விரைவுச்சாலை, கிள்ளான் பள்ளத்தாக்கில் கிழக்கு-மேற்கு நோக்கிய நான்காவது விரைவுச்சாலையாகும்.[2]

2 கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை, E1 கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை (NKVE), E5 சா ஆலாம் விரைவுச்சாலை (KESAS) ஆகியவை கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மற்ற விரைவுச்சாலைகள் ஆகும்.

வரலாறு

[தொகு]

முன்னர் காலத்தில், கோலா சிலாங்கூருக்குச் செல்லும் ஒரே சாலையாக மலேசிய கூட்டரசு சாலை 54 மட்டுமே இருந்தது. அந்தப் பழைய சாலையில் செல்வதற்கு வழக்கமாக 1 மணிநேரம் பிடிக்கும். கோலாலம்பூர்-கோலா சிலாங்கூர் விரைவுச்சாலை திட்டம்; பினா பூரி நிறுவனத்திற்கு (Bina Puri Holdings Berhad) MYR 958 மில்லியன் உடன்படிக்கையின் கீழ் வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான முதன்மை தயாரிப்பு ஒப்பந்ததாரர் மூடாஜெயா கார்ப்பரேசன் பெர்காட் நிறுவனம் (Mudajaya Corporation Berhad) ஆகும்.[3]

கட்டுமானம்

[தொகு]

கட்டுமானம் இரண்டு தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் கட்டுமான உடன்படிக்கை தொகுப்பு 1 என்பது ஈஜோக் நகரம் தொடங்கி குண்டாங் வரை உள்ளது. தொகுப்பு 2 குண்டாங்கிலிருந்து டெம்பிளர் பார்க் வரை உள்ளது. கட்டுமானப் பணிகள் சூலை 3, 2008-இல் தொடங்கப்பட்டு மே 2011-இல் நிறைவடைந்தன. விரைவுச் சாலை சூன் 23, 2011 அன்று போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டது.[3]

சிறப்புகள்

[தொகு]
  • விரைவுச்சாலை வழியில் பல செம்பனைத் தோட்டங்கள்
  • 2 இரட்டை வழிப்பாதை
  • 5 மாற்றுச்சாலைகள்
  • 4 சுங்கச்சாவடிகள் (குண்டாங் மேற்கு மற்றும் குண்டாங் கிழக்கு) - குண்டாங் மாற்றுச் சாலையில் 2 சுங்கச்சாவடிகள்)
  • ஓய்வு மற்றும் சேவைப் பகுதிகள்
  • ஈஜோக் மற்றும் யூ ஆக் குடியிருப்பு பகுதியில் உயர்த்தப்பட்ட வழித்தட பாலங்கள் (வழிப்பாதைகள்)
  • டெம்பிளர் பூங்கா மாற்றுச் சாலையில் மிக அழகிய இயற்கைக் காட்சிகள்[1]

சுங்கக் கட்டணங்கள்

[தொகு]

(அக்டோபர் 15, 2015 தொடக்கம்)

பிரிவு வாகனங்களின் வகை கட்டணம்
(மலேசிய ரிங்கிட் RM)
குண்டாங்
(இரு திசைகளும்)
ஈஜோக் குவாங்
(இரு திசைகளும்)
டெம்பிளர் பூங்கா
0 விசையுந்துகள்
(இரண்டு அச்சுகள் மற்றும் இரண்டு சக்கரங்கள் கொண்ட வாகனங்கள்)
இலவசம்
1 தனியார் வாகனங்கள்
(இரண்டு அச்சுகள் மற்றும் மூன்று அல்லது நான்கு சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் (வாடகை உந்துகள் மற்றும் பேருந்துகள் தவிர)))
1.30 2.50
2 கூடு உந்துகள் மற்றும் பிற சிறிய சரக்கு வாகனங்கள்
(இரண்டு அச்சுகள் மற்றும் ஐந்து அல்லது ஆறு சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் (பேருந்துகள் தவிர))
2.60 5.00
3 பெரிய சுமையுந்துகள்
(மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகளைக் கொண்ட வாகனங்கள் (பேருந்துகள் தவிர))
3.90 7.50
4 வாடகை உந்துகள் 0.70 1.30
5 பேருந்துகள் 1.30 2.00
குறிப்பு:

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "The KL-Kuala Selangor Expressway (LATAR Expressway) linking Kuala Lumpur at Templer's Park in the district of Gombak with the township of Ijok in the district of Kuala Selangor on the West coast of the peninsula. It was opened on Thursday 23 June 2011". www.latar.com.my. Retrieved 1 November 2025.
  2. "This 51.7 km dual-carriageway provides links to the booming towns in southern Klang Valley, including the country's administrative capital, Putrajaya". klia2.info. 21 October 2017. Retrieved 31 October 2025.
  3. 3.0 3.1 "KL-Kuala Selangor Expressway (LATAR Expressway) was officially opened to the public. YB Dato' Shaziman Bin Hj Abu Mansor, Minister of Works Malaysia graced the opening of expressway". www.binapuri.com.my. Retrieved 1 November 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]