கோலப்ப கனகசபாபதி பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோலப்ப கனகசபாபதி பிள்ளை
பிறப்புஏப்ரல் 3, 1905(1905-04-03)
அல்லூர், திருச்சிராப்பள்ளி மாட்டம், திருவிதாங்கூர்
இறப்பு26 செப்டம்பர் 1981(1981-09-26) (அகவை 76)
சென்னை, இந்தியா
பணிவரலாற்றாளர், கல்வித்துறையாளர், பேராசிரியர், எழுத்தாளர்
தாக்கம் 
செலுத்தியோர்
க. அ. நீலகண்ட சாத்திரி

கோலப்ப கனகசபாபதி பிள்ளை (Kolappa Kanakasabhapathy Pillay) (3 ஏப்ரல் 1905 – 26 செப்டம்பர் 1981) 1954 முதல் 1966 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்றுத் துறைக்கு தலைமை தாங்கிய ஒரு இந்திய வரலாற்றாசிரியர் ஆவார்.[1] அவர் இந்திய வரலாற்று காங்கிரஸின் தலைவராகவும், தென்னிந்திய வரலாற்று காங்கிரஸின் நிறுவனத் தலைவராகவும் பணியாற்றினார்.[2]

சுயசரிதை[தொகு]

பிள்ளை 1905 ஏப்ரல் 3 அன்று முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டம் அல்லூர் என்ற கிராமத்தில் கோலப்ப பிள்ளை மற்றும் பார்வதி என்கிற தமிழ் பேசும் தம்பதியற்கு மகனாக பிறந்தார். இவர் கோட்டாறு ஆங்கில உயர்நிலைப்பள்ளியிலும், பின்னர் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பட்டப்படிப்பு முடித்தவுடன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளாரக பணியாற்றினார். பின்னர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்னர், இவர் சென்னை, மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார்.

1948 ஆம் ஆண்டில், "மெட்ராஸ் பிரசிடென்சியில் உள்ளூர் சுயாதீனமான-அரசு, 1850-1919" என்ற தனது ஆய்வறிக்கைக்காக பிள்ளை ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு முனைவர் பட்டம் பெற்றார். 1953 ஆம் ஆண்டில் "தி சுசிந்திரம் கோயில்" என்ற ஆய்வுக்காக அவர் டி. இலக்கியத்தில் பட்டயச்சான்றையும் வென்றார்.. 1954 முதல் 1959 வரை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறைக்கும், 1959 முதல் 1966 வரை இந்திய வரலாற்றுத் துறைக்கும் பிள்ளை தலைமை தாங்கினார். 1966 ஆம் ஆண்டில், பிள்ளை புதிதாக உருவாக்கப்பட்ட சமூக அறிவியல் மற்றும் பகுதி ஆய்வுகள் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார், அவர் 1971 வரை அப்பதவியினை வகித்தார். பிள்ளை 1972 ல் க. அ. நீலகண்ட சாத்திரிக்கு பின்னர் தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரிய கலாச்சாரங்கள் நிறுவனமானா ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் இயக்குனாரானார். அவரது தலைமையின் கீழ், இந்த நிறுவனம் 1977 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் இரண்டு மாநாடுகளை நடத்தியது. பிள்ளை 26 செப்டம்பர் 1981 இல் தனது 76 வயதில் இறந்தார்.

பணிகள்[தொகு]

இவர் பல்வேறு வரலாற்று நூல்களையும் ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.

 • மெட்ராஸ் பிரசிடென்சியில் உள்ளூர் சுய-அரசு,[3],
 • சுசிந்திரம் கோயில்,[4]
 • தென்னிந்தியாவில் உயர் கல்வியின் வரலாறு, [5],
 • பேராசிரியர் பி. சுந்தரம் பிள்ளை நினைவு தொகுதி [6],
 • தென்னிந்தியா மற்றும் இலங்கை|[7],
 • தமிழ் பத்திரிகைகளின் வரலாறு[8]
 • தமிழர்களின் சமூக வரலாறு,[9]
 • தமிழ்நாட்டில் சாதி அமைப்பு[10]
 • நாஞ்சில்நாட்டின் ஆரம்பகால வரலாறு,[11]
 • தமிழ்நாட்டின் வரலாறு: மக்கள் மற்றும்அவர்களின் கலாச்சாரம்,[12]
 • தமிழர்களின் வரலாற்று பாரம்பரியம்,[13]
 • இந்திய வரலாற்றில் ஆய்வுகள்: தமிழ்நாடு பற்றிய சிறப்பு குறிப்புடன்,[14]

ஆகியவை இவரெழுதிய நூல்களாகும்.இவை பல பல்கலைக் கழகங்களில் பாடங்களாக இடம்பெற்றுள்ளன.[15]

குறிப்புகள்[தொகு]

 1. "School of Historical Studies".
 2. "South Indian History Congress website".
 3. Pillay, K. K. (1948). Local Self-Government in Madras Presidency, 1850-1919. University of Oxford. 
 4. Pillay, K. K. (1953). The Suchindram Temple. Kalakshetra Publications. 
 5. Pillay, K. K. (1957). History of higher education in South India 1857-1957. University of Madras. 
 6. Pillay, K. K. (1957). Prof P. Sundaram Pillai Commemoration Volume. 
 7. Pillay, K. K. (1963). South India and Ceylon. University of Madras. 
 8. Pillay, K. K. (1967). History of the Tamil press. 
 9. Pillay, K. K. (1969). A social history of the Tamils. University of Madras. 
 10. Pillay, K. K. (1973). The caste system in Tamil Nadu. MJP Publishers. 
 11. Pillay, K. K. (1975). The early history of Nanjil Nadu. University of Madras. 
 12. Pillay, K. K. (1977). History of Tamil Nadu: Her people and culture. Tamil Nadu Textbook Society. 
 13. Pillay, K. K. (1979). Historical heritage of the Tamils. MJP Publishers. 
 14. Pillay, K. K. (1979). Studies in Indian history: with special reference to Tamil Nadu. K. K. Pillay. 
 15. http://www.southindianhistorycongress.org/