உள்ளடக்கத்துக்குச் செல்

கோர்வா

ஆள்கூறுகள்: 26°13′N 81°49′E / 26.217°N 81.817°E / 26.217; 81.817
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோர்வா
கோர்வா is located in உத்தரப் பிரதேசம்
கோர்வா
கோர்வா
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மாவட்டத்தில் கோர்வா நகரத்தின் அமைவிடம்
கோர்வா is located in இந்தியா
கோர்வா
கோர்வா
கோர்வா (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°13′N 81°49′E / 26.217°N 81.817°E / 26.217; 81.817
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்அமேதி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,524
மொழி
 • அலுவல் மொழிஇந்தி மொழி[1]
 • கூடுதல் மொழிஉருது[1]
 • வட்டார மொழிஅவதி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுUP 36

கோர்வா (Korwa), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இங்குள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனம் மிக்-27 மற்றும் ஜாகுவார் போர் விமானங்களுக்கு மின்னணுக் கருவிகள் தயாரிக்ககிறது. மேலும் இங்குள்ள இராணுவப் போர்ப் படைக்கலன்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏகே-203 ரக தாக்குதல் துப்பாக்கிக்கள் தயாரிக்கப்படுகிறது.[2]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 1,612 வீடுகள் கொண்ட கோர்வா நகரத்தின் மக்கள் தொகை 6,524 ஆகும். அதில் ஆண்கள் 3,430 மற்றும் பெண்கள் 3,094 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 902 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 92.4% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,043 மற்றும் 1 ஆகவுள்ளனர்.இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 94.94%, இசுலாமியர் 3.69%, சமணர்கள் 0.18%, சீக்கியர்கள் 0.26%, கிறித்தவர்கள் 0.41% மற்றும் பிறர் 0.50% ஆகவுள்ளனர்.[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  2. Indo-Russian JV produces first batch of AK-203 assault rifles in Amethi, deliveries to Army soon
  3. Korwa Population, Religion, Caste, Working Data - Uttar Pradesh - Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்வா&oldid=3644091" இலிருந்து மீள்விக்கப்பட்டது