கோருனோ-பதகுசான் தன்னாட்சி மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோர்னோ-படாட்சன் தன்னாட்சி மாகாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோர்னோ-படாக்ஷன் தன்னாட்சி பிராந்தியத்தின் வரைபடம்

கோர்னோ-படாக்ஷன் தன்னாட்சி பிராந்தியம் (The Kuhistani Badakhshan Autonomous Region, தாஜிக் மொழி : Вилояти Мухтори Кӯҳистони Бадахшон, Viloyati Muxtori Köhistoni Badaxshon; மேலும் Gorno-Badakhshan என்றும் அழைக்கப்படுகிறது, (/ˈɡɔːrnoʊ bədɑːkˈʃɑːn, -dɑːx-/, உருசிய மொழி : Горно-Бадахшанская автономная область, romanized: Gorno-Badahšanskaja avtonomnaja oblastj, சுருக்கமாக. GBAO) என்பது கிழக்கு தஜிகிஸ்தானில் உள்ள ஒரு தன்னாட்சி பகுதி ஆகும். பாமிர் மலைகளில் அமைந்துள்ள இது நாட்டின் நிலப்பரப்பில் 45% கொண்டுள்ளது, ஆனால் நாட்டின் மக்கள் தொகையில் 3% மட்டுமே கொண்டுள்ளது.[1]

வரலாறு[தொகு]

1895 க்கு முன்னர், இன்றைய கோர்னோ-படாக்ஸன் ஏஆர் பகுதியில் பல அரை சுயாட்சி கொண்ட சிற்றரசுகள் இருந்தன. அவை தர்வாஸ், ஷுக்னுன்-ருஷன் மற்றும் வாகன் போன்றவை ஆகும். அவர்கள் இன்றய தஜிகிஸ்தான் உள்ள கோர்னோ-படாக்ஸன் ஏஆர் மற்றும் ஆப்கானிஸ்தானின் பகுதியாக இருக்கும் பாடாக்சான் மாகாணப் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளை ஆண்டன. இந்த பகுதியை சீன மற்றும் உருசிய சாம்ராஜ்யங்கள் மற்றும் ஆப்கானித்தான் அமீரகம் ஆகியவற்றால் உரிமை கோரப்பட்டது. சீனாவின் சிங் அரசமரபு ஆட்சியாளர்கள் முழு பாமிர் மலைகளையும் தாங்கள் கட்டுப்படுத்துவதாகக் கூறினர்,[2] ஆனால் சிங் அரசமரபின் இராணுவப் பிரிவுகள் தாஷ்குர்கானுக்கு கிழக்கே உள்ள கணவாயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.   1890 களில், சீன, உருசிய மற்றும் ஆப்கானிய அரசாங்கங்கள் படாக்ஷனைப் பிரிக்கும் தொடர்ச்சியான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன, ஆனால் சீனர்கள் தஜிகிஸ்தான் அரசாங்கத்துடன் 2002 ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வரை இந்த எல்லை போட்டியியல் தொடர்ந்து ஈடுபட்டனர்.[3]

கோர்னோ-படாக்ஷன் தன்னாட்சி பிராந்தியம் 1925 சனவரியில் உருவாக்கப்பட்டது. இது 1929 இல் குடியரசு உருவாக்கிய பின்னர் தாஜிக் சோவியத் சோசலிச குடியரசுடன் இணைக்கப்பட்டது. 1950 களில், கோர்னோ- படாக்ஷனின் பூர்வீக மக்களும், பல இன பாமிரிகள் உட்பட்ட மக்கள் பலவந்தமாக தென்மேற்கு தஜிகிஸ்தானில் குடியமர்த்தப்பட்னர். 1955 ஆம் ஆண்டு கர்ம் ஒப்லாஸ்ட பகுதி கலைக்கப்பட்டபோது கோர்னோ-படாக்ஷனுடன் சில பகுதிகள் சேர்க்கப்பட்டன.

1992 இல் தஜிகிஸ்தானில் உள்நாட்டுப் போர் வெடித்தபோது, கோர்னோ-படாக்ஷனில் உள்ள உள்ளூர் அரசாங்கம் தஜிகிஸ்தான் குடியரசிலிருந்து சுதந்திரம் அறிவித்தது. உள்நாட்டுப் போரின்போது, பல பாமிரிகள் போட்டி குழுக்களால் கொல்லப்பட்டனர். கோர்னோ-படாக்ஷன் எதிர்தரப்பினரின் கோட்டையாக மாறியது. பின்னர் கோர்னோ-படாக்ஷன் அரசாங்கம் சுதந்திர அறிவிப்பிலிருந்து பின்வாங்கியது. கோர்னோ-படாக்ஷன் தஜிகிஸ்தானுக்குள் ஒரு தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது.[4][5] 2011 ஆம் ஆண்டில், பாஜீர் மலைகளில் 1,000 கிமீ2 (390 சதுர மைல்) நிலத்தை சீன மக்கள் குடியரசிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்துக்கு 1999 ஆம் ஆண்டு தஜிகிஸ்தான் ஒப்புதல் அளித்தது, இதனால் 130 ஆண்டுகால எல்லை சர்ச்சை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதோடு, தஜிகிஸ்தானிய பிரதேசத்தின் 28,000 கிமீ2

(11,000 சதுர மைல்) க்கும் அதிகமான இடத்துக்கு சீனா சொந்தம் கொண்டாடுவது கைவிடப்பட்டது.

2012 ஆம் ஆண்டில், தாஜிக் இராணுவத்திற்கும் முன்னாள் போர்வீரரான டோலிப் அயோம்பெகோவுக்கு விசுவாசமான போராளிகளுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்கள் இப்பகுதியில் நிலவின.[6]

மாவட்டங்கள் மற்றும் புவியியல்[தொகு]

டார்வோஸ் மாவட்டமானது மாகாணத்தின் மேற்கு 'அலகு' ஆகும். மேற்கு-மத்திய கோர்னோ-படாக்ஷன் பெரும்பாலும் கிழக்கு-மேற்கு மலைத்தொடர்களின் வரிசையாகும், இது பஞ்ச் ஆற்றில் பாயும் ஆறுகளின் பள்ளத்தாக்குகளால் பிரிக்கப்படுகிறது. மாவட்டங்கள் நதி பள்ளத்தாக்குகளுக்கு ஒத்திருக்கின்றன. முர்கோப் மாவட்டம் மாகாணத்தின் கிழக்குப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது மற்றும் பெரும்பாலும் மேற்கில் உயரமான மலைகளைக் கொண்ட தனித்துவிடப்பட்ட பீடபூமியாகும்.

  • டார்வோஸ் மாவட்டம் (மேற்கு திசையில், வடக்கு)
  • வஞ்ச் மாவட்டம் (மேற்கு, வடக்கு)
  • ருஷோன் மாவட்டம் (மேற்கு, மையம்)
  • ஷுக்னான் மாவட்டம் (மேற்கு, மையம்)
  • ரோஷ்த்கால் மாவட்டம் (மேற்கு, தெற்கு)
  • Ishkoshim மாவட்ட (மேற்கு தென்கோடி)
  • முர்கோப் மாவட்டம் (கிழக்கு மூன்றில் இரண்டு பங்கு)

இந்த தன்னாட்சிப் பகுதியானது நாட்டின் மொத்த கிழக்கு பகுதிகளையும் உள்ளடக்கியது. மேலும் இதன் கிழக்கில் சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பகுதியும், தெற்கில் ஆப்கானிஸ்தானின் படாக்ஷன் மாகாணமும், வடக்கில் கிர்கிஸ்தானின் ஓஷ் பகுதி ஆகியவற்றையும் எல்லையாக கொண்டுள்ளது. இந்த பிராந்தியத்தில் உயரமான மலைகளானது பாமிர் மலைகள் (பண்டைய மவுண்ட் இமியோன்) இது உலகின் கூரை என்று அழைக்கப்படுகிறது. முன்னாள் சோவியத் ஒன்றியத்துக்கு உட்பட்ட நடு ஆசியாவில் உள்ள 7,000 மீட்டர் உயரத்துக்கும் மேற்பட்ட ஐந்து மலைமுகடுகளில் மூன்று இங்கே அமைந்துள்ளன. அவை இஸ்மாயில் சோமோனி சிகரம் (முன்னர் கம்யூனிச சிகரம், அதற்கு முன், ஸ்டாலின் சிகரம்; 7,495 மீ),   கிர்கிஸ்தான் எல்லையில் இப்னு சினா சிகரம் (முன்னர் லெனின் சிகரம், இது கிர்கிஸ் பக்கவாட்டில் அந்த பெயரால் இன்னும் அறியப்படுகிறது; 7,134 மீ), இபின் ஸினா பீக் 7.134 மீ); (முன்னர் லெனின் பீக், மற்றும் இன்னும் அதன் கிர்கிஸ் பக்கவாட்டிலும் என்று பெயர்களிலும் அழைக்கப்படுகிறது) மற்றும் கிர்கிசுத்தான், எல்லையில் உள்ள பீக் கோர்செனெவ்ஸ்கயா (7,105 மீ) ஆகும்.

குறிப்புகள்[தொகு]

  1. Population of the Republic of Tajikistan as of 1 January 2008, State Statistical Committee, Dushanbe, 2008 (உருசிய மொழியில்)
  2. 董丛林. 中国近代史课程教案. Hebei Normal University (in சீனம்). Archived from the original on 2007-08-06. பார்க்கப்பட்ட நாள் 2017-02-02.
  3. "China's Territorial and Boundary Affairs". Ministry of Foreign Affairs, the People's Republic of China. 2003-06-30. பார்க்கப்பட்ட நாள் 2009-11-27.
  4. Suhrobsho Davlatshoev (2006). "The Formation and Consolidation of Pamiri Ethnic Identity in Tajikistan. Dissertation" (PDF). School of Social Sciences of Middle East Technical University, Turkey (M.S. thesis). பார்க்கப்பட்ட நாள் 25 August 2006.
  5. "Gorno-Badakhshan Autonomous Oblast (GBAO) :: Regions of Tajikistan". OrexCA.com. பார்க்கப்பட்ட நாள் 2017-02-02.
  6. "Tajikistan clashes: 'Many dead' in Gorno-Badakhshan". BBC News. 24 July 2012. பார்க்கப்பட்ட நாள் 25 July 2012.