கோர்க்லாரெலி மாகாணம்
கோர்க்லாரெலி மாகாணம் ( Kırklareli Province, துருக்கியம்: Kırklareli ili ; பல்கேரிய: Лозенград ; கிரேக்கம்: Σαράντα Εκκλησιές ) என்பது துருக்கியியன் என்பத்தோரு மாகாணங்களில் ஒன்று ஆகும். இந்த மாகாணமானது கருங்கடலின் மேற்கு கடற்கரையில் வடமேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும். இந்த மாகாணமானத்தின் வடக்கு எல்லையாக 180-கிலோமீட்டர் (110 mi) நீளமுள்ள பல்காரியா நாட்டின் நீண்ட எல்லைப் பகுதி உள்ளது. மேலும் இது மேற்கில் எடிர்னே மாகாணத்துடனும் தெற்கே டெக்கிர்தாஸ் மாகாணத்துடனும் தென்கிழக்கில் இசுதான்புல் மாகாணத்துடனும் எல்லையைக் கொண்டுள்ளது. மாகாணத்தின் தலை நகராக கோர்க்லரேலி நகரம் உள்ளது. மாகாணம் மற்றும் அதன் தலை நகரத்தின் பெயர் துருக்கிய மொழியில் "நாற்பதுகளின் நிலம்" என்று பொருள்படும். இந்த சொல்லானது 15 ஆம் நூற்றாண்டில் உதுமானியப் பேரரசிற்காக இந்த நகரத்தை கைப்பற்ற சுல்தான் முராத் I அனுப்பிய நாற்பது ஒட்டோமான் காஜிகளைக் குறிக்கலாம் அல்லது ஒட்டோமான் வெற்றிக்கு முன்னர் இப்பகுதியில் நாற்பது தேவாலயங்கள் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது, இதன் முந்தைய பெயராக கார்க்லாரெலி ( துருக்கிய மொழியில் கோர்க் கிலிஸ்; Εκκλησιέςαράντα) என்று இருந்துள்ளது. ஒட்டோமான் வெற்றியாளர்களை கௌரவிப்பதற்காக கோர்க்லாரெலி நகரத்தில் ஒரு மலை உச்சியானது "கோர்க்லர் அனேட்டா" (துருக்கியில் நாற்பதுகளின் நினைவு) என்று அழைக்கப்படுகிறது.
இந்த மாகாணம் யால்டாஸ் ( இஸ்ட்ராங்கா ) மலைத் தொடரால் பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் துருக்கியின் குறைந்த மக்கள் தொகை கொண்டதும் மற்றும் வளர்ந்த பகுதிகளில் ஒன்றாகும். மாகாணத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களானது அதிக மக்கள் தொகையைக் கொண்டு உள்ளது, ஏனெனில் இந்த மாவட்டங்களின் நிலப் பகுதியானது வேளாண்மைக்கும் தொழில் துறைக்கும் மிகவும் ஏற்றதாக உள்ளது. மாகாணத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் காடுகள் நிறைந்ததாக உள்ளன. எனவே, இந்த பகுதிகளில் வாழ்பவர்களுக்கு வனவளம் ஒரு முக்கிய வாழ்க்கை ஆதாரமாக உள்ளது. கருங்கடல் கடற்கரை பகுதியில் மீன்பிடித்தல் தொழில் ஒரு முக்கியத் தொழிலாக நடக்கிறது.
வேளாண்மை
[தொகு]கோர்க்லாரெலி மாகாணமானது திராட்சைப் பழ வேளாண்மை மற்றும் ஒயின் தயாரிப்பு நடக்கும் ஒரு முக்கியமான பகுதியாகும். திராட்சை, செர்ரி இலைகள் மற்றும் கடுகு விதைகளால் ஆன "ஹர்தாலியே" என்ற சிரப், இப்பகுதியில் உள்ள சிறப்பான மது அல்லாத பானமாகும்.[1][2]
உள்ளூர் இடங்கள்
[தொகு]டுப்னிசா குகை என்பது மாகாணத்தில் உள்ள ஒரு பிரபலமான இயற்கை பகுதியாகும். இது வடக்கில் மாகாணத்தின் எல்லைகளுக்குள் உள்ள ஒரு தனித்துவமான புவியியல் அமைப்பு ஆகும். மாகாணத்தில் அமைந்துள்ள 60 கி.மீ நீளமுள்ள கருங்கடல் கடற்கரையானது துருக்கியில் மிகவும் அழகிய மற்றும் வளர்ச்சி அடையாத கடற்கரைகளில் ஒன்றாகும். கடற்கரையில் இரண்டு பாதுகாக்கப்பட்ட இயற்கை பகுதிகள் உள்ளன. அதாவது வடக்கே சாகா கோலே ( சாகா ஏரி ) ஒரு பாதுகாக்கப்பட்ட ஒரு இயற்கை பகுதி அடுத்து தெற்கே கசதுரா கோர்பெஸி (கசதுரா விரிகுடா) ஒரு பாதுகாக்கப்பட்ட இயற்கை பகுதி ஆகும். இந்த தளங்களானது அவற்றின் ஆபத்தான சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் பல அச்சுறுத்தலுக்கு உள்ளான உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்களைக் கொண்டுள்ளன.
மாவட்டங்கள்
[தொகு]கோர்க்லாரெலி மாகாணம் எட்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Trakya'daki il, ilçe ve beldelerimizi tanıyalım..." Matmara Haber (in Turkish). 2015-03-13. Retrieved 2015-07-28. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "mh1" defined multiple times with different content - ↑ "Hardaliye Üretimin Mevcut Durumunu Değerlendirme Raporu" பரணிடப்பட்டது 2015-12-08 at the வந்தவழி இயந்திரம் (PDF) (in Turkish). Trakya Kalkınma Ajansı - Kırklareli Yatırım Destek Ofisi. December 2014. Retrieved 2015-07-28. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "iik" defined multiple times with different content