உள்ளடக்கத்துக்குச் செல்

கோரோனீயா சமர் (கிமு 447 )

ஆள்கூறுகள்: 38°21′N 22°58′E / 38.350°N 22.967°E / 38.350; 22.967
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரோனீயா சமர்
முதல் பெலோபொன்னேசியன் போர் பகுதி
நாள் 447 BC
இடம் கொரோனியா
போயோட்டியாவின் வெற்றி
பிரிவினர்
போயேட்டியன் நகர அரசுகள் டெலியன் கூட்டணி
தளபதிகள், தலைவர்கள்
Sparton தால்மிடிஸ் 
பலம்
தெரியவில்லை 1000 ஹெப்லைட்டுகள், பிறர்?
இழப்புகள்
தெரியவில்லை தெரியவில்லை

கோரோனீயா சமர் (Battle of Coronea, முதல் கோரோனீயா சமர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது முதல் பெலோபொன்னேசியப் போரின் போது ஏதெனியன் தலைமையிலான டெலியன் கூட்டணி மற்றும் போயோட்டியன் கூட்டணி இடையே கிமு 447 இல் நடந்த மோதலாகும்.

கிமு 457 இல் ஏதெனியர்கள் ஓனோபைட்டா போரின் முடிவில் போயோட்டியாவைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் அடுத்த பத்து ஆண்டுகள் தங்கள் கூட்டணியின் வரம்பை அதிகரித்து பலப்படுத்த முயன்றனர். கிமு 454 இல் பாரசீகத்திற்கு எதிரான எகிப்திய கிளர்ச்சிக்கு உதவ முயன்று அனுப்பபட்ட ஒரு கடற்படையை ஏதென்ஸ் இழந்தது. அதன்பிறகு டெலியன் கூட்டணியின் மற்ற உறுப்பு நாடுகள் கிளர்ச்சியில் ஈடுபடலாம் என்று அஞ்சி, ஏதென்ஸ் கிமு 453 இல் டெலோசிலிருந்த கூட்டணியின் கருவூலத்தை தங்கள் நகரத்திற்கு மாற்றினர். மேலும் கிமு 450 இல் பாரசீகத்துடன் கால்லியாஸ் அமைதி ஒப்பந்த்ததை மேற்கொண்டனர்.

டெலியன் கூட்டணி நடைமுறையில் ஒரு ஏதெனியப் பேரரசாக இருந்தது. ஏதென்ஸ் பொதுவாக ஏஜியன் கடலில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துவதில் வெற்றி பெற்றாலும். அவர்கள் தரைப்போர்களில் குறைவான வெற்றிகளையே ஈட்டினர். கிமு 457 இல் ஏதெனியன் வெற்றிக்குப் பிறகு எதிர்ப்பாக இருந்த பிரபுக்களை போயோட்டியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் கிமு 447 ஆண்டு வாக்கில், நாடுதிரும்பினர். சில போயோட்டியன் நகரங்களையும் கைப்பற்றத் தொடங்கினர். இதை அறிந்த ஏதென்சு இதை ஒரு சிறு கலமகாக கருதி டால்மிடீஸ் என்பவரின் தலைமையில் பெரிய குடும்பத்து இளைஞர்கள் அதிகமாக கொண்ட 1,000 ஹெப்லைட்டுகளையும், அவர்களது கூட்டாளிகளின் பிற துருப்புக்களுடன் அனுப்பியது. இந்தக் கலகத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது இதை அடக்க தீவிர நடவடிக்கை தேவை என்று பெரிக்கிள்ஸ் எச்சரித்து பார்த்தார். ஆனால் அவை அதைக் கேட்கவில்லை. சிறு படையை மட்டும் அனுப்பினால் போதும் என்று கருதி அப்படியே அனுப்பியது. டால்மிடீஸ் மீண்டும் அந்த நகரங்களைத் திரும்பக் கைப்பற்றுவதற்காக படைகளுடன் போயோட்டியாவிற்கு அணிவகுத்துச் சென்றான். டால்மிடீஸ் கொரோனியாவை மீண்டும் கைப்பற்றினன். அங்கே ஒரு சிறு படையை நிறுவினார். ஓர்கோமெனைக் கைப்பற்ற முயற்சி செய்யவில்லை. ஊர் திரும்ப ஆரம்பித்தார். திரும்புகையில் கொரோனியாவில் ஓர்கோமெனை கைப்பற்றியவர்களும், நாடு கடத்தபட்ட போயோட்டியர்களும் ஒரு படையாக திரண்டு ஏதெனியப் படைகளை தாக்கி தோற்கடித்தனர். தாக்குதலில் டால்மிடீஸ் இறந்தார். ஏதெனியப் படையினர் பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களை மீட்டுக்கொள்ளவேண்டி போயோட்டியாவில் தாங்கள் செலுத்திவந்த ஆதிக்கத்தை ஏதென்சு விட்டுக் கொடுக்க வேண்டி வந்தது. மேலும் டெலியன் கூட்டணியை விட்டு வெளியேற போயோட்டியா அனுமதிக்கப்பட்டது. போயோட்டியா போனதோடு லோக்கிரிசு, போசிசு போன்றவையும் ஏதென்சின் தொடர்பிலிருந்து விலகின. ஏதெனியர்களுக்கு இந்தப் போரில் ஏற்பட்ட தோல்வியானது யூபோயா மற்றும் மெகாராவுக்கு ஊக்கத்தை அளித்து அங்கு கிளர்ச்சிகள் ஏற்பட காரணமாயிற்று. இது எசுபார்த்தாவுடன் மேலும் மோதல்கள் ஏற்பட வழிவகுத்தது, பெலோபொன்னேசியன் போருக்கு பங்களித்தது.

குறிப்புகள்

[தொகு]

Thucydides 1.113

Battle of Coronea in Robert J. Buck's History of Boetia[தொடர்பிழந்த இணைப்பு]

C.M. Bowra, The Epigram of the Fallen at Coronea

J.A.O. Larsen, Orchomenus and the Formation of the Boeotian Confederacy in 447 B.C.

Clifford J. Dull, Thucydides 1. 113 and the Leadership of Orchomenus


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரோனீயா_சமர்_(கிமு_447_)&oldid=3649793" இலிருந்து மீள்விக்கப்பட்டது