கோரி லீ ரென்
கோரி லீ ரென் | |
|---|---|
| பிறப்பு | அக்டோபர் 22, 1983 |
| தேசியம் | அமெரிக்கர் |
| பணி | கல்வித்துறை |
| கல்விப் பின்னணி | |
| கல்வி நிலையம் | கொலொராடோ மாநிலப் பல்கலைக்கழகம் |
| ஆய்வு | (2016) |
| கல்விப் பணி | |
| துறை | சமூகவியலாளர் |
| Sub-discipline | விலங்குரிமை இயக்கம்; மானுடவிலங்கியல்; நனிசைவம் |
| கல்வி நிலையங்கள் | மான்மவுத் பல்கலைக்கழகம்; கென்ட் பல்கலைக்கழகம் |
கோரி லீ ரென் (Corey Lee Wrenn) (பிறப்பு: 22 அக்டோபர் 1983) ஒரு அமெரிக்க சமூகவியலாளர் ஆவார். இவர் மனித–விலங்கு ஆய்வுகள், விலங்குரிமை இயக்கத்தின் சமூகவியல், சூழலியல் பெண்ணியம், மற்றும் நனிசைவக் கல்வியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.[1] இவர் தற்போது கென்ட் பல்கலைக்கழகத்தின் சமூகக் கொள்கை, சமூகவியல் மற்றும் சமூக ஆராய்ச்சிப் பள்ளியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.
கல்வியும் தொழில் வாழ்க்கையும்
[தொகு]ரென் வர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் 2005-ல் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டத்தையும், 2008-ல் சமூகவியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.[2] 2013-ல், ரென் "வீகன் ஃபெமினிஸ்ட் நெட்வொர்க்" என்னும் ஒரு கல்விசார்-செயல்பாட்டுத் திட்டத்தை நிறுவினார்.[3] அவர் 2016-ல் கொலராடோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[4]
ரென் 2015-ல் மான்மவுத் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் துறையில் விரிவுரையாளரானார்.[4] 2016-ல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் தேசிய நிறுவனப் பன்முகத்தன்மை மையத்தால் அவர் 'சிறந்த பன்முகத்தன்மை அறிஞர்' எனப் பாராட்டப்பட்டார்.[5] 2013 முதல் 2016 வரை அமெரிக்க சமூகவியல் சங்கத்தின் விலங்குகள் மற்றும் சமூகம் பிரிவின் மன்ற உறுப்பினராகப் பணியாற்றிய ரென் 2018-ல் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] 2018-ல் மான்மவுத் பல்கலைக்கழகத்திலிருந்து விலகி கென்ட் பல்கலைக்கழகத்தின் சமூகக் கொள்கை, சமூகவியல் மற்றும் சமூக ஆராய்ச்சிப் பள்ளியில் விரிவுரையாளராக பணியாற்றத் துவங்கினார்.[4] தற்போது 'சொசைட்டி & அனிமல்ஸ்' ஆய்விதழின் புத்தக மதிப்புரை ஆசிரியராகப் பணியாற்றி வரும் ரென், தி வீகன் சொசைட்டியின் ஆராய்ச்சிசார் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[7]
ஆய்வு
[தொகு]ரென் ஒரு உணர்திறமையவாதியும்,[8][9] ஒழிப்புவாத நனிசைவ ஆர்வலரும், பெண்ணியவாதியும் ஆவார். அவர் விலங்குரிமைகளுக்கான ஒரு பகுத்தறிவு அணுகுமுறை: ஒழிப்புவாதக் கோட்பாட்டில் விரிவாக்கங்கள் (பால்கிரேவ் மேக்மில்லன், 2016)[8] மற்றும் படிப்படியான எதிர்ப்பு: இலாப நோக்கற்ற நிறுவனங்களின் காலகட்டத்தில் விலங்குரிமை (மிச்சிகன் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2019) ஆகிய நூல்களின் ஆசிரியராவார்.
குறிப்பிடத்தக்க படைப்புகள்
[தொகு]- ரென், கோரி (2016). A Rational Approach to Animal Rights: Extensions in Abolitionist Theory. பால்கிரேவ் மேக்மில்லன் UK.[8]
- ரென், கோரி (2019). Piecemeal Protest: Animal Rights in the Age of Nonprofits. மிஷிகன் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
- ரென், கோரி (2021). Animals in Irish Society: Interspecies Oppression and Vegan Liberation in Britain's First Colony. SUNY பதிப்பகம்.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள் தரவுகள்
[தொகு]- ↑ "Corey Lee Wrenn". University of Kent. 25 October 2023.
- ↑ "Corey Lee Wrenn". Colorado State University. https://www.libarts.colostate.edu/people/cwrenn/.
- ↑ Callan, Laura (February 20, 2018). "Long Read: Why Feminism Needs Veganism". Bright Zine. https://www.brightzine.co/news/2018/2/28/why-feminism-needs-veganism.
- ↑ 4.0 4.1 4.2 "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2020-06-11. Retrieved 2020-06-11.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link) - ↑ "Corey Wrenn". National Center for Institutional Diversity. University of Michigan.
- ↑ "Animals and Society". American Sociological Association.
- ↑ Wrenn, Corey. "Research Advisory Committee". The Vegan Society.
- ↑ 8.0 8.1 8.2 Wrenn, Corey Lee (2016). A Rational Approach to Animal Rights: Extensions in Abolitionist Theory. United Kingdom: Palgrave Macmillan UK. ISBN 978-1-137-43464-7. Reviews: Clifton P. Flynn, Journal of Animal Ethics, எஆசு:10.5406/janimalethics.7.2.0227a, JSTOR 10.5406/janimalethics.7.2.0227a; Jessica Greenebaum, Contemporary Sociology, JSTOR 26425668; Alejandro Villamor Iglesias, Dilemata, [1]; Alma Massaro, Relations, [2]; Iva Rinčić, Amir Muzur, & Sandra Mijač, Jahr, [3]
- ↑ Wrenn, Corey Lee. "Wrenn Personal Statement re: Sentientism". Sentientism.info.
வெளியிணைப்புகள்
[தொகு]| "Episode 125: Animal Rights Professionalisation with Corey Lee Wrenn" Wrenn discusses Piecemeal Protest on the Knowing Animals podcast. | |
- தனிப்பட்ட வலைதளம்
- கோரி லீ ரென் publications indexed by Google Scholar
- கோரி லீ ரென் பற்றி Academia.edu
- வார்ப்புரு:ResearchGate