கோராபுட் மக்களவைத் தொகுதி
கோராபுட் மக்களவைத் தொகுதி OD-21 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 14,80,207 |
ஒதுக்கீடு | பழங்குடியினர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கோராபுட் மக்களவைத் தொகுதி (Koraput Lok Sabha constituency) என்பது ஒடிசாவில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி. இது இந்திய தேசிய காங்கிரசின் கோட்டையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இங்கு ஓர் இடைத்தேர்தல் உட்பட நடைபெற்ற 18 தேர்தல்களில் 16 முறை இந்த இடத்தைக் காங்கிரசு வென்றுள்ளது. ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் கிரிதர் கமாங் 1972 முதல் 2004 வரை 9 முறை இந்தத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2024 இந்திய பொதுத் தேர்தலில் ஒடிசாவில் 21 மக்களவை இடங்களில் 20 இடங்களை பாஜக வென்றபோதும், இந்த இடத்தை வெல்லத் தவறிவிட்டது. காங்கிரசின் சப்தகிரி சங்கர் உலகா தொடர்ந்து 2ஆவது முறையாக 1.47 இலட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றிபெற்றார். மேலும் 2024 ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் 7 சட்டமன்றத் தொகுதிகளில் 6 தொகுதிகளைக் காங்கிரசு கட்சி வென்றுள்ளது.
சட்டசபை பிரிவுகள்
[தொகு]இந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகள்.[1]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
138 | குனுபூர் (ப.கு.) | ராயகடா | சத்யஜீத் கோமாங்கோ | இந்திய தேசிய காங்கிரசு | |
139 | பிசாம் கட்டாக் (ப.கு.) | நிலமாதாப் ஹிகாகா | |||
140 | ராயகடா (ப.கு.) | கத்ரக அப்பல சுவாமி | |||
141 | லட்சுமிபூர் (ப.கு.) | கோராபுட் | பபித்ரா சௌந்தா | ||
143 | ஜெய்ப்பூர் | தாரா பிரசாத் பாஹினிபட்டி | |||
144 | கோராபுட் (ப.இ.) | ரகுராம் மச்சா | பாரதிய ஜனதா கட்சி | ||
145 | பொட்டாங்கி (ப.கு.) | ராம சந்திர கதம் | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]
1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, 1972இல் ஒரு இடைத்தேர்தல் உட்பட இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கோராபுட் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்
ஆண்டு | பெயர் | கட்சி | |
---|---|---|---|
இராயகடா புல்பானி மக்களவைத் தொகுதி
| |||
1952 | டி. சங்கண்ணா | இந்திய தேசிய காங்கிரசு | |
கோராபுட் மக்களவைத் தொகுதி
| |||
1957[a] | ஜெகன்நாத ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
டி. சங்கண்ணா | |||
1962 | இராமசந்திர உலாகா | ||
1967 | |||
1971 | பாகீரதி கமாங் | ||
1972-இடைத்தேர்தல்[b] | கிரிதர் கமாங் | ||
1977 | |||
1980 | |||
1984 | |||
1989 | |||
1991 | |||
1996 | |||
1998 | |||
1999 | ஹேமா கமாங் | ||
2004 | கிரிதர் கமாங் | ||
2009 | ஜெயராம் பாங்கி | பிஜு ஜனதா தளம் | |
2014 | ஜினா ஹிகாகா | ||
2019 | சப்தகிரி சங்கர் உலகா[2] | இந்திய தேசிய காங்கிரசு | |
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]2024 இந்திய பொதுத் தேர்தலின் நான்காவது கட்டத்தில் 13 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[3] இதன் படி இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் சப்தகிரி சங்கர் உலகா, பிஜு ஜனதா தளம் வேட்பாளர் கௌசல்யா கிககாவை 1,47,744 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | சப்தகிரி சங்கர் உலகா | 4,71,393 | 41.03 | 6.67 | |
பிஜத | கவுசல்யா கிகாகா | 3,23,649 | 28.17 | 5.85 | |
பா.ஜ.க | கல்லிராம் மாஜ்கி | 2,32,514 | 20.24 | 0.95 | |
நோட்டா (இந்தியா) | நோட்டா | 37,131 | 3.23 | 0.15 | |
வாக்கு வித்தியாசம் | 1,47,744 | 12.86 | 12.52 | ||
பதிவான வாக்குகள் | 11,48,842 | 77.53 | 2.19 | ||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} |
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on March 4, 2009. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/statewiseS181.htm
- ↑ "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.