உள்ளடக்கத்துக்குச் செல்

கோரமண்டல் இண்டர்நேசனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரமண்டல் இன்டர்நேசனல் லிமிடெட்
வகைபொதுப் பங்கு
தலைமையகம்ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா (பதிவு செய்யப்பட்ட அலுவலகம்)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா (நிறுவனத் தலைமையகம்)
வருமானம்Increase ₹29,628 கோடி (ஐஅ$3.5 பில்லியன்) (FY23)[1]
இயக்க வருமானம்Increase ₹2,959 கோடி (ஐஅ$350 மில்லியன்) (FY23)[1]
நிகர வருமானம்Increase ₹2,013 கோடி (ஐஅ$240 மில்லியன்) (FY23)[1]
உரிமையாளர்கள்ஈஐடி பாரி (62.82%)
தாய் நிறுவனம்முருகப்பா குழுமம்
இணையத்தளம்coromandel.biz

கோரமண்டல் இன்டர்நேசனல் லிமிடெட் (Coromandel International Limited) என்பது பயிர் பாதுகாப்பு தயாரிப்புகளை தயாரிக்கும் ஒரு இந்திய வேளாண் வேதிப்பொருள் நிறுவனமாகும். முதலில் கோரமண்டல் ஃபெடலைசஸ் என்று பெயரிடப்பட்ட இந்த நிறுவனம் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், சிறப்பு ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. கோரமண்டல் இன்டர்நேசனல் முருகப்பா குழுமத்தின் ஒரு பகுதியாகும். மேலும் நிறுவனத்தில் 62.82% பங்குகளை வைத்திருக்கும் ஈஐடி பாரியின் துணை நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் 1960 களின் முற்பகுதியில் ஐ.எம்.சி மற்றும் செவ்ரான் நிறுவனம் மற்றும் ஈஐடி பாரி ஆகியவற்றால் நிறுவப்பட்டது. இது ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் அதன் மனா குரோமோர் மையங்கள் மூலம் சில்லறை விற்பணையை நடத்துகிறது. இது ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராட்டிரம், குசராத்து, மத்தியப் பிரதேசம் இராசத்தான் உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பதினாறு உற்பத்தி அலகுகளைக் கொண்டுள்ளது. இதன் தயாரிப்பு வரிசையில் குரோமர், கோதாவரி, பரம்ஃபோஸ், பாரி கோல்ட், பாரி சூப்பர் ஆகியவை அடங்கும்.[2] [3]

இந்தியாவில் பணிபுரிய ஏற்ற சிறந்த நிறுவனங்கள் குறித்த பிசினஸ் டுடேயின் 2009 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் கோரமண்டல் #16 இடத்தைப் பிடித்தது. [4] வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் சிறந்து விளங்கும் இந்திய அறிவியலாளர்களுக்கு இந்த நிறுவனம் ஆண்டுதோறும் போர்லாக் விருதை வழங்குகிறது. [5]

வணிகங்கள்

[தொகு]

இந்த நிறுவனத்தின் பயிர் பாதுகாப்புப் பொருட்கள் இந்தியாவிலும் பன்னாட்டு அளவிலும் சந்தைப்படுத்தப்படுகின்றன.

இந்த நிறுவனம் ஆராய்ச்சி, மேம்பாடு பணிகளையும் கொண்டுள்ளது.

பாஸ்பேட் உரம்

[தொகு]

இந்த நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய பாஸ்பேட் உர தயாரிப்பாளரும், சந்தைப்படுத்துநரும் ஆகும்.

சிறப்பு ஊட்டச்சத்துக்கள்

[தொகு]

சிறப்பு ஊட்டச்சத்து வணிகம் சல்பர் பாஸ்டில்ஸ், நீரில் கரையக்கூடிய உரங்கள், நுண்ணூட்டச்சத்துகள் போன்ற தயாரிப்புகளில் கவனம் செலுத்துகிறது. இந்த நிறுவனம் இந்தியாவின் முன்னணி கரிம உர சந்தைப்படுத்துநராகும். மேலும் இது உயிரி பூச்சிக்கொல்லிகளையும் வழங்குகிறது. சிறப்பு ஊட்டச்சத்துக்கள் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் குறிப்பிட்ட பயிர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

சில்லறை விற்பனை

[தொகு]

2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த நிறுவனம் ஆந்திரம், தெலங்காணா, கருநாடகம், மகாராட்டிரம் முழுவதும் சுமார் 800 சில்லறை விற்பனை நிலையங்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. இந்த விற்பனை நிலையங்கள் மூலம், நிறுவனம் சுமார் 3 மில்லியன் விவசாயிகளுக்கு பயிர் ஆலோசனை, மண் பரிசோதனை, பண்ணை இயந்திரமயமாக்கல் உள்ளிட்ட வேளாண் சேவைகளை வழங்குகிறது.

30-40 கிராமங்களுக்கு ஒரு கடைவீதம், ஒவ்வொரு கடையும் சுமார் 5,000 விவசாய குடும்பங்களுக்கு சேவை செய்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 "Fertiliser firm Coromandel International's Q4 profit up 18% at Rs 290 cr". Business Standard. 15 May 2023. https://www.business-standard.com/companies/results/coromandel-international-posts-18-rise-in-q4-net-profit-to-rs-290-crore-123051500989_1.html.
  2. ↑ "Coromandel International Consolidated Profit & Loss account, Coromandel International Financial Statement & Accounts". www.moneycontrol.com (in ஆங்கிலம்). Retrieved 2020-07-01.
  3. ↑ "Coromandel International Consolidated Balance Sheet, Coromandel International Financial Statement & Accounts". www.moneycontrol.com (in ஆங்கிலம்). Retrieved 2020-07-01.
  4. ↑ Sharma, E. Kumar (8 January 2009). "The other good employers". Business Today. http://businesstoday.intoday.in/index.php?option=com_content&task=view&id=9429&completeview=1. பார்த்த நாள்: 26 October 2009.
  5. ↑ "Two IARI scientists get Borlaug Award 2012". The Weekend Leader. http://www.theweekendleader.com/Headlines/76/two-iari-scientists-get-borlaug-award-2012.html. பார்த்த நாள்: 26 December 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரமண்டல்_இண்டர்நேசனல்&oldid=4411459" இலிருந்து மீள்விக்கப்பட்டது