கோரக்செப்
தோற்றம்
கோரக்செப்
நேபாளி: गोराशप Gorak Shep | |
---|---|
![]() கோரக்செப்பிலிருந்து எவரஸ்டு மலை காட்சிகள் | |
ஆள்கூறுகள்: 27°58′50″N 86°49′43″E / 27.98056°N 86.82861°E[1] | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | மாநில எண் 1 |
மாவட்டம் | சோலுகும்பு |

கோரக்செப் (Gorak Shep) (நேபாளி: गोराशप) நேபாள நாட்டின் மாநில எண் 1-இல் அமைந்த சோலுகும்பு மாவட்டத்தில் அமைந்த தற்காலிக குடியிருப்பு பகுதி ஆகும். இது பனிபடர்ந்த இமயமலையில் உள்ள எவரஸ்ட் மலையில் அடிவாரத்தில் 5,164 மீட்டர்கள் (16,942 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. எவரஸ்டு மலை ஏறும் காலங்களில் மட்டும் இந்த ஊர் செயல் செயல்படுகிறது. கோரக் செப்பில் மலையேற்ற வீரர்களுக்கான தங்கும் விடுதிகள் உள்ளது. இவ்வூரில் செர்ப்பாக்கள் மலையேற்ற வீரர்களுக்கு வழிகாட்டிகளாகவும், சுமை தூக்குபவர்களாகவும் உள்ளனர்.
சாகர்மாதா தேசியப் பூங்காவின் ஒரு பகுதியாக கோரக்செப் குடியிருப்பு பகுதி உள்ளது. கோரக்செப் பனி ஏரி உள்ளது.



மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Images from Gorkashep and Everest
- Gorak Shep Holidays பரணிடப்பட்டது 2018-04-18 at the வந்தவழி இயந்திரம்