உள்ளடக்கத்துக்குச் செல்

கோயில் கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயில் கிராமம் (Koil Or Quil Village) , இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டம், புல்வாமா ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த கிராம ஊராட்சி ஆகும். இக்கிராமம் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் கடல்மட்டத்திலிருந்து 1588 மீட்டர் உயரத்தில் உள்ளது. கோயில் கிராமத்திலிருந்து மாவட்டத் தலைமையிடமான புல்வாமா நகரம் 5 கிலோமீட்டர் தொலைவிலும், சிறிநகர் 33 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கிராமம் புல்வாமா மாவட்டம் மற்றும் பட்காம் மாவட்டத்திற்கு மத்தியில் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 192301 ஆகும். இக்கிராமத்தின் முக்கியப் பொருளாதாரம் வேளாண்மைத் தொழில் ஆகும். இக்கிராம மக்களில் பெரும்பான்மையினர் உருது மொழி பேசுகின்றனர். இதன் அருகமைந்த தொடருந்து நிலையம் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவந்திபோரா நகரத்தில் உள்ளது.[1]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 665 குடியிருப்புகள் கொண்ட கோயில் கிராமத்தின் மக்கள் தொகை 5064 ஆகும். அதில் 2519 ஆண்கள் மற்றும் 2545 பெண்கள் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.54% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1010 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 62.43% ஆக உள்ளது. பட்டியல் சமூகத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் முறையே 0 மற்றும் 41 ஆக உள்ளனர். இக்கிராம மக்களில் பெரும்பான்மையோர் இசுலாமியர் ஆவார். [2]

குறிப்பிடத்தக்கவர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயில்_கிராமம்&oldid=4408340" இலிருந்து மீள்விக்கப்பட்டது