கோயிலகம்
கோயிலகம் ( மலையாளம்: കോവിലകം ) என்பது இந்தியாவின், கேரள சுதேச மன்னர் பரம்பரையைச் சேர்ந்த பிரபுமனை அல்லது அரண்மனை ஆகும். இந்த கோயிலகமானது அரச மரபில் அரசுரிமை பெறாத குடும்பத்தின் குறிப்பிட்ட கிளையின் மூத்த ஆண் அல்லது பெணின் நிர்வாகத்தில் இருக்கும். வடக்கு மலபார் பிராந்தியத்தில், இது கோலோம் ( மலையாளம்: കോലോം ) என்று அழைக்கபடுகிறது. [1]
கேரளத்தின் அரச மரபைச் சேர்ந்த குடும்பத்துடன் வெவ்வேறு திருமண உறவுக் கிளைகளைக் குறிக்கும் பல கோயிலகங்கள் உள்ளன. அவற்றில் உள்ள ஒரு நபர் வயது மூப்புக்கு ஏற்ப அரசரின் நிலைக்கு உயருவார். கோயிலகம் இல்லமானது பொதுவாக பெரிய அழகான பிரபுமனையாகவோ அல்லது கேரள பாரம்பரிய இடைக்கால கட்டிடக்கலை பாணியில் பெரிய அளவிலான மர வேலைப்பாடுளும், சுவரோவியங்களைக் கொண்ட அரண்மனையாக இருக்கும். ஒரு கோவிலகத்துக்கு பொதுவாக அதன் குடும்ப உறுப்பினர்கள் வாழுவதுற்கு பொதுமான அளவுக்கு தேவையான நில புலன்கள், சொத்துக்கள் இருக்கும். [2] [3]
எடுத்துக்காட்டுகள்
[தொகு]வடக்கு மலபாரின் கோட்டயம் சுதேச சமஸ்தானமானது ஆளும் பரம்பரையில் மூன்று கிளைகளைக் கொண்டிருந்தது; அதாவது:
- கிழக்கே கோயிலகம் (கிழக்கு அரண்மனை)
- தெக்கே கோயிலகம் (தெற்கு அரண்மனை)
- பதின்ஜரே கோயிலகம் (மேற்கு அரண்மனை)
குறிப்புகள்
[தொகு]- ↑ Agrarian relations in late medieval malabar by M.T Narayanan (2003) Swatantra Bharath Press
- ↑ A collection of treaties, engagements, and other papers of importance by William Logan
- ↑ The book of Duarte Barbosa: an account of the countries bordering on the Indian Ocean and their inhabitants by Duarte Barbosa