கோயம்புத்தூர் ஆடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோயம்புத்தூர் ஆடு என்பது தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு செம்மறியாட்டு இனமாகும். இவை பெரும்பாலும் இறைச்சி தேவைக்காவும், கம்பளி உற்பத்திக்காகவும் வளர்க்கப்படுகின்றன.[1] இந்த இன ஆடுகள், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் காணப்படுகின்றன.

விளக்கம்[தொகு]

இவை நடுத்தர உடலமைப்பைக் கொண்டவை. பொதுவாக வெண்மை நிறத்துடனும், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தோடும் காணப்படும். 30 சதவிகித பெட்டை ஆடுகளுக்கு கொம்புகள் கிடையாது. வளர்ந்த கிடா 25 கி.கி எடையுடனும் பெட்டை 20 கி.கி எடையுடனும் இருக்கும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "செம்மறியாட்டு இனங்கள்". அறிமுகம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் இணையதளம். பார்த்த நாள் 17 பெப்ரவரி 2018.
  2. "செம்மறியாட்டினங்கள்". அறிமுகம். agritech.tnau.ac.in. பார்த்த நாள் 17 பெப்ரவரி 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயம்புத்தூர்_ஆடு&oldid=2729510" இருந்து மீள்விக்கப்பட்டது