கோமியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்து மதத்தைப் பொறுத்தவரை பசு தெய்வமாகவே வணங்கப்படுகிறது. பசுவின் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தெய்வங்கள், தேவர்கள் இருப்பதாக கருதப்படுகிறது.இப்படிப்பட்ட பசுவின் சிறுநீரை கோமியம் என்கிறோம்.

நோய் எதிர்ப்பு சக்தி[தொகு]

பசுவின் சிறுநீரும் (கோமியம்) மருத்துவ குணம் மிக்கதாகவே இருக்கிறது.பசுவின் சிறுநீரில் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதன் காரணமாகவே வீடுகளில் கிருமிகள் அண்டாமல் பாதுகாக்க அடிக்கடி பசுவின் சிறுநீர் தெளிக்கின்றனர் முன்னோர்கள். இதன் காரணமாகவே கிரஹப் பிரவேசத்தின் (புதுமனை புகு விழா) போது வீட்டிற்குள் கோமியம் தெளிப்பதையும், பசுவை வீட்டைச் சுற்றில் வலம் வர வைத்து அதனை வீட்டிலேயே சிறுநீர் கழிக்க வைப்பதையும் இந்து மதத்தினர் கடைப்பிடிக்கின்றனர். இதன் காரணமாக அந்த வீட்டிற்கு இறைவன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பஞ்சகாவ்யா[தொகு]

பஞ்சகாவ்யா ஒரு அங்ககப் பொருள். இது செடியின் வளர்ச்சியை உயர்த்தியும் நோய் பற்றாநிலையையும் கொடுக்கும்.இந்த பஞ்சகாவ்யா தயாரிப்பதற்கு கோமியம் (மாட்டின் சிறுநீர்) பயன்படுகிறது.

மருத்துவக் குணம்[தொகு]

பசுவிடமே இருந்து ஐந்து பொருள்களால் தயாராவது பஞ்சகவ்யம். பசுவின் கோமியமானது வாதம்,பித்தம்,கபம்,தோல் நோய்,நீரிழிவு நோய்,சிறுநீரகப் பிரச்சினை போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.மேலும் நினைவாற்றலை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமியம்&oldid=2428745" இருந்து மீள்விக்கப்பட்டது