கோமல் ஒலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோமல் ஒலி
Member of the நேபாள தேசிய சபை உறுப்பினர் சட்டமன்றம்
for பகுதி எண். 5
பதவியில் உள்ளார்
பதவியில்
4 மார்ச் 2018
முன்னையவர்அலுவலகம் உருவாக்கப்பட்டது
பின்னவர்பதவில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 ஏப்ரல்
டாங், பகுதி எண். 5, நேபாளம்
தேசியம்நேபாளம்நேபாளி
அரசியல் கட்சிநேபாள பொதுவுடமைக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ராஷ்ட்ரிய பிரஜாட்டிரா நேபாள் கட்சி
நேபாள பொதுவுடமைக் கட்சி (ஒருங்கிணைந்த மார்சிஸ்ட்-லெனிஸ்ட்)
வேலைநாட்டுப்புற பாடகர், செய்தியாளர், வனொலி தொடர்பாளர், அரசியல், கேளிக்கை கலைஞர்

கோமல் ஒலி (Komal Oli)(நேபாளி: कोमल)(பிறப்பு 16 ஏப்ரல்) என்பவர் நேபாள செய்தி ஒளிபரப்பாளர், வானொலி[1] மற்றும் தொலைக்காட்சி ஆளுமை,[2] நாட்டுப்புற பாடகர்,[1][3], கேளிக்கை கலைஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[1] இவர் சமீபத்தில் நேபாள அரசியலில் நுழைந்தார். நேபாள தேசிய சபையில் நேபாள பொதுவுடைமைக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[4] இவர் பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவரது திருமண நிலை பலரது கவனத்தையும் ஈர்த்தது.[5] கோமலுடன் இணைந்து பொய்லா ஜான பாம் என்ற பிரபலமான பாடலை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலின் பொருளானது நான் தப்பி ஓடட்டுமா என்பதாகும். இந்தப் பாடலைத் தொடர்ந்து கோமல் ஒலி அண்மையில் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். பாடகி மற்றும் பத்திரிகையாளரான ஓலி, தன் மீது "அவதூறான கருத்துக்களை" தெரிவித்ததற்காக நேபாள பொதுவுடமை கட்சியின் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தலைவர் ரகுஜி பந்த் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்தார்.[6]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கோமல் ஏப்ரல் 16ஆம் தேதி திகாரி, டாங்கில் தீபா மற்றும் லலித் ஒலி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[2] இவரது குடும்பத்தில் இவருடன் பிறந்த நான்கு குழந்தைகளில் மூத்தவர்.[5] இவரது குழந்தைப் பருவம் இவரது சொந்த ஊரான திகாரியில் கழிந்தது. உள்ளூர் பள்ளியில் கல்வி பயின்றார். பள்ளியில் படிக்கும்போதே இசையில் சுயமாகப் பயிற்சி பெற்றார்.[2]

வானொலி நேபாளம் மற்றும் நாட்டுப்புற பாடகர்[தொகு]

பிஎஸ் 2046இல் வனொலி நேபாளாத்தினால் நடத்தப்பட்ட தேசிய நாட்டுப்புறப் பாடல் போட்டியில் கோமல் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தைப் பெற்றார்.[2] அதே ஆண்டில் இசைத் தொகுப்பு ஒன்றினை வழங்க நேபாள வானொலியினால் இவருக்கு இசை ஒப்பந்தம் வழங்கப்பட்டது. 2049 பி.எசில் காத்மாண்டு பிரிவிற்குச் சென்றார். பின்னர் வானொளி நேபாளத்தில் செய்தி தொகுப்பாளராக பணியமர்த்தப்பட்டார்.[2][5]

வெற்றியும் புகழும்[தொகு]

வானொலி நேபாளத்தின் செய்தி வாசிப்பாளராகவும், நாட்டுப்புறப் பாடகியாகவும், நாட்டின் மிகத் தொலைதூரப் பகுதிகளுக்கு வானொலியின் அணுகல் காரணமாக, இவர் நேபாள குடும்பத்தில் விரைவாக ஒரு பழக்கமான குரலாக மாறினார். இவர் தனது வாழ்க்கை முழுவதும் ஒரு பத்துக்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.[5] கூடுதலாக, பொது நிகழ்வுகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றிப் பொழுதுபோக்கு ஆர்வலராகவும் செயல்படுகிறார். இவர் ஆர்வமுள்ள வானொலி மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்களுக்கும் பயிற்சி அளித்து வருகின்றார்.[5]

அரசியல்[தொகு]

கோமல், வானொலி நேபாளத்திலிருந்து தனது வேலையை விட்டுவிட்டு, ராஷ்டிரிய பிரஜதந்திர கட்சி நேபாளத்தில் சேர்ந்தார். இது முடியாட்சி மற்றும் இந்து அரசை மீண்டும் நிலைநிறுத்துகிறது. எனினும், 2017ஆம் ஆண்டு தேர்தல்களுக்கு முன், இவர் நேபாள பொதுவுடைமைக் கட்சியில் (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சேர்ந்தார்.[1] தேர்தலில் கட்சி வேட்பாளர்களின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெறாதபோது, இவர் தனது சொந்த ஊரில் சுயேச்சையாக அதிருப்தி வேட்புமனுவைப் பதிவு செய்தார். பின்னர், இவர் தனது வேட்புமனுவை விளக்கிக்கொண்டு, கட்சி வேட்பாளருக்கு ஆதரவை அறிவித்தார்.[3] இவர் தற்போது தேசிய சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.[4] இவர் தனது சொந்த மாகாணத்திலிருந்து பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை நிரப்ப இவரது கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Folk singer Komal Oli joins CPN-UML". The Kathmandu Post. http://kathmandupost.ekantipur.com/news/2017-09-25/folk-singer-komal-oli-joins-cpn-uml.html/. பார்த்த நாள்: 21 April 2019. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Komal Oli". Archived from the original on 27 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 "Komal Oli withdraws nomination". The Kathmandu Post. http://kathmandupost.ekantipur.com/news/2017-11-05/komal-oli-withdraws-nomination.html/. பார்த்த நாள்: 21 April 2019. 
  4. 4.0 4.1 "Komal Oli worried about Dashain ticket fares". My Republica. https://myrepublica.nagariknetwork.com/news/komal-oli-worried-about-dashain-ticket-fares/. பார்த்த நாள்: 21 April 2019. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "Komal Oli Biography". பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
  6. Republica. "National Assembly member Komal Oli files defamation case against CPN (UML) leader Raghuji Pant". My Republica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமல்_ஒலி&oldid=3929356" இலிருந்து மீள்விக்கப்பட்டது