கோமறை மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோமறை மன்றம்
சுருக்கம்கோமறை மன்றம் (Privy Council, PC)
முன்னோர்இங்கிலாந்து கோமறை மன்றம்
ஸ்காட்லாந்து கோமறை மன்றம்
அயர்லாந்து கோமறை மன்றம்
உருவாக்கம்மே 1, 1708 (1708-05-01)
சட்ட நிலைஅரச ஆலோசனைக் குழு
உறுப்பினர்கள்
மக்களவை மற்றும் பிரபுக்கள் அவையின் மூத்த உறுப்பினர்கள்
மூன்றாம் சார்லசு
கோமறை மன்றக் குழுவின் தலைவர்
பென்னி மோர்டான்ட்
கோமறை மன்ற எழுத்தர்
ரிச்சர்டு தில்புரூக்
கோமறை மன்ற துணை எழுத்தர்
செரி கிங்
பணிக்குழாம்
கோமறை மன்ற அலுவலகம், ஐக்கிய இராச்சியம்
வலைத்தளம்privycouncil.independent.gov.uk
1815ல் பிரித்தானியப் பேரரசர் தாமஸ் ரோவ்லாண்ட்சன் தலைமையிலான கோமறை மன்றம்

கோமறை மன்றம் அல்லது பிரிவி கவுன்சில் (Privy Council,PC), வழக்கமாக இம்மன்றத்தை ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கௌன்சில் என்றழைப்பர். இம்மன்றம் 1708ல் நிறுவப்பட்டது.

இம்மன்றத்தின் தலைவராக ஐக்கிய இராச்சியத்தின் அரசர் இருப்பார். அவருக்கு ஆலோசனை வழங்க ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை மற்றும் பிரபுக்கள் அவையின் மூத்த உறுப்பினர்கள் உதவியாக இருப்பார்கள்.

பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்ட முன்மொழிவுகள், கோமறை மன்றத்தின் அங்கீகாரத்திற்குப் பின்னரே சட்டங்கள் நடைமுறைக்கு வரும்.

மேலும் கோமறை மன்றம், ஐக்கிய இராச்சியத்தின் இறுதியான முடிவுகள் எடுக்கும், நிர்வாகத் தலைமை மற்றும் உச்ச நீதிமன்றம் போன்று செயல்படும். [1]

கோமறை நீதிமன்றக் குழு[தொகு]

பிரித்தானியப் பேரரசிற்குள்ளும், மற்றும் அதன் முன்னாள் காலனி நாடுகளின் மேல்முறையீட்டு வழக்குகளையும், கோமறை நீதிமன்றக் குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இறுதித் தீர்ப்புகள் வழங்கும்.

பணிகள்[தொகு]

கோமறை மன்றக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகே, ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் எடுக்கும் அனைத்து சட்ட முன்மொழிவுகள் நடைமுறைக்கு வரும்[2][3][4]

விக்டோரியா மகாராணி 1837 இல் அவர் பதவியேற்ற நாளில் தனது முதல் கோமறை மன்றத்தை கூட்டினார்.
விக்டோரியா மகாராணி 1837 இல் அவர் பதவியேற்ற நாளில் தனது முதல் கோமறை மன்றத்தை கூட்டினார்.

கோமறை மன்றக் குழுக்கள்[தொகு]

கோமறை மன்றத்தின் நீதிமன்றம்

கோமறை மன்றம் ஏழு நிலைக்குழுக்களுடன் கொண்டது. : [5]

  • பாரோநெட்டேஜ் நிலைக்குழு
  • ஐக்கிய இராச்சியத்தின் அமைச்சரவை
  • ஜெர்சி அரசியல் குழு
  • உரிமைக்காப்புக் குழு
  • கோமறை மன்ற நீதிமன்றக் குழு
  • ஸ்காட்லாந்தின் பண்டைய பல்கலைக்கழகங்களுக்கான குழு
  • ஐக்கிய இராச்சியத்தின் பல்கலைக்கழகக் குழு

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Dicey, pp. 6–7.
  2. House of Commons Information Office (May 2008) (PDF). Statutory Instruments. Fact Sheet No.L7 Ed 3.9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0144-4689. Archived from the original on 22 July 2004. https://web.archive.org/web/20040722113231/http://www.parliament.uk/documents/upload/L07.pdf. பார்த்த நாள்: 3 August 2008. 
  3. Section 102 of the Government of Wales Act 2006, Office of Public Sector Information]
  4. Order in Council dated 9 July 2008, approving The NHS Redress (Wales) Measure 2008, the first Measure to be passed by the Assembly on 6 May 2008. Office of Public Sector Information.
  5. Privy Council Committee

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமறை_மன்றம்&oldid=3581861" இருந்து மீள்விக்கப்பட்டது