கோமதி சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோமதி சீனிவாசன் (Gomathi Srinivasan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழக சமூக நல அமைச்சராகவும் இருந்துள்ளார்.

கோமதி சீனிவாசன் முதல்முறையாக 1980 ல் வலங்கைமான் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1980 மற்றும் 1987க்கு இடையில் ம. கோ. இராமச்சந்திரன் அமைச்சரவையில் சமூக நல அமைச்சராக பணியாற்றினார்.[2] 1984 தேர்தலில் பட்டியல் சாதியினரின் வேட்பாளர்களுக்காக வலங்கைமான் தொகுதி ஒதுக்கப்பட்ட அதே தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

எம். ஜி. ஆரின் மறைவுக்குப் பின்னர் சீனிவாசன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக)<[2] இணைந்து 1996ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் வலங்கைமான் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[4] 2001ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை திமுக மறுத்து. இதனைத் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்.[5] பின்னர் செப்டம்பர் 2013இல் அதிமுகவிற்கு திரும்பினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-07-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2021-06-05 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "AIADMK welcomes newcomers". The Hindu. 3 September 2013. http://www.thehindu.com/news/national/tamil-nadu/aiadmk-welcomes-newcomers/article5086526.ece. பார்த்த நாள்: 2017-05-17. 
  3. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-11-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2021-06-05 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 9. 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-05-06 அன்று பார்க்கப்பட்டது.
  5. "A fierce fight". http://www.frontline.in/static/html/fl1810/18100160.htm. பார்த்த நாள்: 2017-05-18. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமதி_சீனிவாசன்&oldid=3552174" இருந்து மீள்விக்கப்பட்டது