கோப்பி தியாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிங்கப்பூரிலுள்ள திறந்தவெளிக் கோப்பி த்யாம்

கோப்பி த்யாம் (Kopi tiam) என்பது தென்கிழக்காசியாவில் பாரம்பரியக் காப்பிக் கடைகளைக் குறிப்பதாகும். கோப்பி எனும் மலாய்/மின்னான் மொழி மொழிச் சொல்லுக்கு காப்பி என்று பொருள். த்யாம் எனும் மின்னான் மொழி/கேசிய மொழிச் சொல்லிற்கு கடை என்று பொருள். இக்கடைகளில் காப்பி, தேநீர், முட்டை சார்ந்த உணவுப் பொருட்கள் மற்றும் குளிர் பானங்கள் விற்பனை செய்யப்படும். இக்கடைகள் தென்கிழக்காசியாவில் பெரும்பாலும் சிங்கப்பூர், மலேசியா,இந்தோனேசியாவின் ராயூ தீவுகள், ஜாம்பி மற்றும் மேடன் பகுதிகளில் காணப்படுகின்றன. உணவு விடுதிகளையோ அல்லது உணவுச் சாலைகளையோ கோப்பி த்யாம் என அழைப்பதில்லை. சிங்கப்பூரில் இத்தகைய கோப்பி த்யாம்கள் கிட்டத்தட்ட 2000 இடங்களில் காணப்படுகின்றன.[1] இவை மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் தொழிற்பேட்டைகளிலும் அமைந்திருக்கின்றன. மலேசியாவில் மலேசியச் சீனக் காப்பிக் கடைகளை மட்டுமே கோப்பி த்யாம் என அழைக்கின்றர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பி_தியாம்&oldid=1711227" இருந்து மீள்விக்கப்பட்டது