கோபோலி
கோபோலி (மராத்தி: खोपोली; ISO: Khōpōlī) என்பது என்பது மகாராட்டிர மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள கலப்பூர் வட்டத்தில், சஹ்யாத்ரி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தொழில்துறை நகரமாகும் . டாடா நீர்மின் நிலையத்தின் டெய்ல்ரேஸ் கால்வாயான பாதாளகங்கா ஆறு , கோபோலி வழியாகப் பாய்கிறது. கோபோலி, மும்பை பெருநகரப் பகுதியின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது.
கோபோலி
खोपोली | |
|---|---|
நகரம்; மும்பை பெருநகரப் பகுதி | |
| ஆள்கூறுகள்: 18°47′20″N 73°20′35″E / 18.789°N 73.343°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராஷ்டிரா |
| மாவட்டம் | ராய்கட் மாவட்டம் |
| ஏற்றம் | 61 m (200 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,08,648 |
| இனம் | கோபலிகர்கள் |
| மொழி | |
| • அலுவல் | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| பின்கோடு | 410203 410204 410216 |
| வாகனப் பதிவு | MH-46 |
புவியியலும் வரலாறும்
[தொகு]ஆங்கிலேய காலனி ஆட்சியின் போது, கோபோலி கேம்பூலி என அழைக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 61 மீ உயரத்தில் அமைந்துள்ள இது, 18°45′ வடக்கு அட்சரேகை, 73°20′ கிழக்கு தீர்க்க ரேகையில் உள்ளது. கோபோலி நகரம் கோபோலி (410203), கோபோலி மின் நிலையம் (410204), ஜகதீஷ் நகர் (410216) என மூன்று அஞ்சல் குறியீடுகளுக்கு உட்பட்டுள்ளது.
ஒரு காலனிய ஆவணம் கோபோலியின் போர் காட் பகுதியை, "ஒன்றன் மேல் ஒன்றாக உயர்ந்து நிற்கும் தொடர்ச்சியான சிகரங்கள், அவற்றில் கடைசியானது கடல் மட்டத்திலிருந்து 2,000 அடி (610 மீ) உயரத்தை அடைகிறது" என வர்ணித்துள்ளது. 1856ஆம் ஆண்டில் GIPR ரயில் பாதை கோபோலி வரை நீட்டிக்கப்பட்டது. 1882 வாக்கில், அதன் எச்சமாகச் சில பெரிய அரைக்கும் கற்கள் மட்டுமே இருந்தன. கோபோலி, டாடாக்களால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் நீர்மின் நிலையத்தின் தளமாகும்.[1][2]
அக்காலத்தில் இங்கிருந்த சிறிய கிராமமான காம்போலியில், பேஷ்வாவின் பிரதம மந்திரியான நானா ஃபட்னவீஸ் தனது சொந்தச் செலவில் ஒரு உன்னத நீர்த்தேக்கத்தையும் ஒரு இந்துக் கோயிலையும் கட்டியிருந்தார். மகாதேவர் கோயிலின் அருகே அன்னசத்திரம் (இலவச உணவு வழங்கும் இடம்) இருந்தது;[3] [4] [5]
காலநிலை
[தொகு]கோபோலியில் வெப்பமண்டல பருவமழைக் காலநிலை (கொப்பன் வகைப்பாட்டில் Am) நிலவுகிறது. நவம்பர் முதல் மே வரை மழைப்பொழிவு குறைவாக அல்லது இல்லாமல் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை மிக அதிக மழைப்பொழிவும், அக்டோபரில் மிதமான கனமழையும் பெய்கின்றன.
| தட்பவெப்ப நிலைத் தகவல், கோபோலி | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| உயர் சராசரி °C (°F) | 29.7 (85.5) |
30.8 (87.4) |
33.0 (91.4) |
34.6 (94.3) |
35.0 (95) |
32.6 (90.7) |
29.8 (85.6) |
29.6 (85.3) |
30.2 (86.4) |
32.4 (90.3) |
32.0 (89.6) |
30.7 (87.3) |
31.7 (89.06) |
| தினசரி சராசரி °C (°F) | 23.2 (73.8) |
24.2 (75.6) |
26.9 (80.4) |
29.2 (84.6) |
30.5 (86.9) |
29.2 (84.6) |
27.2 (81) |
26.9 (80.4) |
27.0 (80.6) |
27.7 (81.9) |
25.9 (78.6) |
24.0 (75.2) |
26.83 (80.29) |
| தாழ் சராசரி °C (°F) | 16.8 (62.2) |
17.6 (63.7) |
20.8 (69.4) |
23.8 (74.8) |
26.0 (78.8) |
25.8 (78.4) |
24.7 (76.5) |
24.2 (75.6) |
23.8 (74.8) |
23.0 (73.4) |
19.9 (67.8) |
17.4 (63.3) |
21.98 (71.57) |
| பொழிவு mm (inches) | 0 (0) |
0 (0) |
0 (0) |
4 (0.16) |
25 (0.98) |
618 (24.33) |
1695 (66.73) |
1182 (46.54) |
522 (20.55) |
125 (4.92) |
13 (0.51) |
3 (0.12) |
4,187 (164.84) |
| ஆதாரம்: [6] | |||||||||||||
மக்கள் தொகை
[தொகு]2011 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோபோலியின் மொத்த மக்கள் தொகை 1,08,648 ஆகும். இதில் ஆண்கள் 53%, பெண்கள் 47%. சராசரி எழுத்தறிவு விகிதம் 74% (தேசிய சராசரியான 59.5%-ஐ விட அதிகம்); ஆண்கள் எழுத்தறிவு 80%, பெண்கள் எழுத்தறிவு 68% ஆகும். மக்கள் தொகையில் 13% 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். மதம் வாரியான பகிர்வு (2011): இந்து மதம் 71.66%, இசுலாம் 14.55%, பௌத்தம் 10.47%, சமண மதம் 1.40%, கிறித்தவம் 1.00%, பிற 0.91%.
போக்குவரத்து
[தொகு]கோபோலி, கர்ஜத்திலிருந்து தொடங்கும் மும்பை புறநகர் ரயில்வே ஒற்றைப் பாதை வழியாக இணைக்கப்பட்ட ஒரு ரயில் நிலையத்தைக் கொண்டுள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் இறுதி நிலையம் (CSMT) முதல் கோபோலி வரையான தூரம் 114.24 கிமீ ஆகும். மத்திய ரயில்வே புறநகர் வழித்தடத்தில் இது அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை NH 4 கடந்து செல்லும் இந்நகரம், மும்பையிலிருந்து சுமார் 80 கிமீ தெற்கேயும், புனேயிலிருந்து 80 கிமீ தொலைவிலும் உள்ளது. மும்பை–புனே விரைவுச்சாலை இதன் வழியாகச் செல்வதால், இப்பகுதியில் தொழில்கள் நன்கு வளர்ந்துள்ளன. அருகிலுள்ள விமான நிலையம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் (சுமார் 80 கிமீ தொலைவில்) ஆகும்.[7][8]
தொழில்துறை
[தொகு]கோபோலியில் ஏராளமான தொழிற்சாலைகளும் மின் உற்பத்தி நிலையங்களும் அமைந்துள்ளன. பல்வேறு எஃகு, இரசாயன, உணவு மற்றும் காகிதக்கூழ் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. கோபோலி நகராட்சி எல்லைக்குள் உள்ள குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள்:
- ஆல்டா லேபரட்டரீஸ் — மொத்த இரசாயன உற்பத்தியாளர், சாலிசிலிக் அமிலம் தயாரிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம்.
- போலர்-உட்தோல்ம் இந்தியா
- பாம்பே ஆக்சிஜன்
- இந்தியா ஸ்டீல் ஒர்க்ஸ்
- இன்னோவாசிந்த் டெக்னாலஜிஸ் (முன்னர் இந்தியன் ஆர்கானிக் கெமிக்கல்ஸ்)
- இசிபார்ஸ் — சிறப்பு எஃகு பிரிவு
- மஹிந்திரா சான்யோ
- டாடா ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் சப்ளை — இந்தியாவின் முதல் தனியார் நீர்மின் நிலையம்.
- டாடா ஸ்டீல் பிஎஸ்எல்
- வார்ட்சிலா இந்தியா (பின்லாந்தைச் சேர்ந்த தாய் நிறுவனம்)
- வீலாபிரேட்டர் அலாய் காஸ்டிங்ஸ்
- ஜெனித் ஸ்டீல் பைப்ஸ்
தொழிலதிபர் பாபுராவ்ஜி பார்க்கே-வால் 1949இல் தொடங்கப்பட்ட பேப்கோ (PAPCO [Paper & Pulp Conversions] பேப்பர் & பல்ப் கன்வெர்சன்ஸ்) ஒரு முற்காலத்திய காகிதம் மற்றும் காகித அட்டை ஆலையாகும்; இதுவே கோபோலி நகருக்கு மின்சாரத்தைக் கொண்டு வந்த முதல் தொழிற்சாலையும் ஆகும். சில சூல்நிலைக்காரணங்களால் 1990இல் இது மூடப்பட்டது.
கல்வி நிறுவனங்கள்
[தொகு]கோபோலியில் மராத்தி, ஆங்கிலம், இந்தி மற்றும் சர்வதேசப் பள்ளிகள் உள்ளன. கலபூர் தாலுகா ஷிக்ஷன் பிரசாரக் மண்டல் அமைப்பின் கீழ் பின்வரும் நிறுவனங்கள் இயங்குகின்றன:
- யாக் பொதுப் பள்ளி (சி.பி.எஸ்.இ ஆங்கில வழி)
- மகாராஷ்டிரா இ.ஆ.ப/எம்.பி.எஸ்.சி அகாடமி
- ஜகதீஷ் சந்திர மஹிந்திரா நினைவுப் பள்ளி
- ஷிஷு மந்திர் கோபோலி (ஆங்கில வழி)
- வசந்த் தேஷ்முக் நினைவுப் பள்ளி மற்றும் கல்லூரி
- ஜனதா வித்யாலயா (மராத்தி வழி) மற்றும் ஜூனியர் கல்லூரி
- கோபோலி ஹிந்தி வித்யாலயா
- கே எம் சி கல்லூரி (மும்பை பல்கலைக்கழகத்துடன் இணைந்தது)
- கோபோலி பாலிடெக்னிக்
- சஹ்யாத்ரி வித்யாலயா
- ஜெனித் உயர்நிலைப் பள்ளி (ஆங்கில வழி)
- ககன்கிரி ஆங்கில சர்வதேசப் பள்ளி
- ஆனந்த் ஷாலா
கலாச்சாரமும் மதமும்
[தொகு]நானா ஃபட்னவீஸால் கட்டப்பட்ட நீள்வட்ட வடிவ நீர்த்தேக்கமும், வீரேஷ்வர மகாதேவர் கோயிலும் கோபோலியின் முக்கிய அமைப்புகள் ஆகும். இந்நீர்த்தேக்கம் வலிமையான கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது; சுற்றளவு சுமார் 1,207 மீ, பரப்பளவு சுமார் 75,000 ச.மீ ஆகும். இக்கோயில் சுமார் 22.9 மீ உயரம் கொண்டது; அஸ்திவாரம் 12.2 மீ × 6.1 மீ அளவில் உள்ளது. உள்ளே சிவபெருமானின் சிலையும், 6.1 மீ × 3.1 மீ அளவில் சபா மண்டபமும், கோயிலின் நுழைவாயிலில் ஒரு சமாதியும் உள்ளன. மகாசிவராத்திரி நாளான மாசி வாத்யா 13 அன்று இக்கோயிலில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
PAPCO மில் வளாகத்தில் பரசுராமர் கோயிலும், 1971இல் கட்டப்பட்ட அக்னி மந்திர் (நெருப்புக் கோயிலும்) உள்ளன. ககன்கிரி மகாராஜ் ஆசிரமம் கோபோலியில் அமைந்துள்ளது; ககன்கிரி மகாராஜ் 2008 பிப்ரவரி 4ஆம் தேதி இங்கேயே இறந்தார். அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் பட்டியலில் இடம்பெற்ற ஐயப்பன் கோயில் ஒன்றும் இங்கு உள்ளது.
சுற்றுலா
[தொகு]பருவமழைக் காலத்தில் ஏராளமான நீர்வீழ்ச்சிகள் காணப்படுவதால், கோபோலி "நீர்வீழ்ச்சிகளின் நகரம்" என அழைக்கப்படுகிறது. கோபோலியின் முக்கிய சுற்றுலாத் தலங்கள்:
- அட்லாப்ஸ் இமேஜிகா — இந்தியாவின் மிகப்பெரிய தீம் பூங்கா
- மஹத் கணபதி கோயில்
- ஜெனித் நீர்வீழ்ச்சி
- கேபி நீர்வீழ்ச்சி
- ககன்கிரி மகாராஜ் ஆசிரமம்
- லோனாவாலா (8 கிமீ)
- கண்டாலா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Background of Mumabi Suburban Rail system" (PDF). Indian Railway. Retrieved 2009-12-10. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Kolaba district gazzeteer - communication - railways". The gazzeteer's department, Maharashtra. Retrieved 2009-12-10.
- ↑ Chapman, John (1851). The cotton and commerce of India - Considered in relation to interests of Great Britain with remarks on railway communication in the Bombay Presidency. London: Whittaker & Co. p. 378.
- ↑ "Pin code search". India Post. Archived from the original on 20 மே 2012. Retrieved 4 திசம்பர் 2009.
- ↑ "STD Code Search". BSNL. Archived from the original on 30 நவம்பர் 2009. Retrieved 4 திசம்பர் 2009.
- ↑ "Khopoli climate: Average Temperature, weather by month, Khopoli weather averages - Climate-Data.org". en.climate-data.org. Retrieved 2021-12-25.
- ↑ "Land Development" (PDF). Retrieved 2009-12-10.
- ↑ "Regional Plan - MMRDA - Part 2/ Chapter 11. Transportation: A strategic perspective" (PDF). Archived from the original (PDF) on 1 ஏப்ரல் 2010. Retrieved 10 திசம்பர் 2009.