கோபேந்திரராஜா
கோபேந்திரராஜா | |
---|---|
சௌகான் ஆட்சியாளர் | |
ஆட்சிக்காலம் | ஆட்சி 771-784 பொ.ச. |
முன்னையவர் | முதலாம் சந்திரராஜா |
பின்னையவர் | முதலாம் துர்லபராஜா |
அரசமரபு | சாகம்பரியின் சௌகான்கள் |
கோபேந்திர-ராஜா (Gopendraraja) (ஆட்சி சுமார் 771-784 பொ.ச.) வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை ஆண்ட சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். இவர் கோபேந்திரகன் என்றும் அழைக்கப்படுகிறார். [1]
கோபேந்திரன் தனது சகோதரன் முதலாம் சந்திரராஜாவுக்குப் பின் சகாமன மன்னனாக ஆனார். பிருத்திவிராச் சௌகானின் வரலாற்றைக் கூறும் நாட்டுப்புறக் கதையான "பிருத்விராஜ விஜயம்" என்பதின்படி,முதலாம் விக்ரகராஜா இவர்களின் தந்தையாக அறியப்படுகிறார். [2] இருப்பினும், பிற்கால ஹம்மிர மகாகாவ்யம் இவர்களின் தந்தை விக்ரகராஜாவின் மூதாதையர் நரதேவன் என்று கூறுகிறது. [3]
கோபேந்திரன் ஒரு சுல்தான் பெக் வாரிசாவை போரில் தோற்கடித்ததாக பிரபந்த-கோசம் கூறுகிறது. [4] பெக் வாரிசா அரபுத் தளபதி முகமது பின் காசிமின் அடிமையாக இருந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர் ஆர்.பி. சிங் கருதுகிறார். [5]
கோபேந்திரனுகுப் பிறகு இவரது மருமகன் முதலாம் சந்திரராஜாவின் மகனான முதலாம் துர்லபராஜா முதலாம் துர்லபராஜா அரியணை ஏறினார்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ Dasharatha Sharma 1959, ப. 28.
- ↑ 2.0 2.1 R. B. Singh 1964, ப. 55.
- ↑ Anita Sudan 1989, ப. 23.
- ↑ R. B. Singh 1964, ப. 88.
- ↑ R. B. Singh 1964, ப. 89.
உசாத்துணை
[தொகு]- Anita Sudan (1989). A study of the Cahamana inscriptions of Rajasthan. Research.
- Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
- R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.