கோபுர மரம்
வகைப்பாடு[தொகு]
தாவரவியல் பெயர் : சோபோரா ஐப்பானிக்கா Sophora Japonice
குடும்பம் : லெகுமினோசே (Leguminosae)
இதரப் பெயர்[தொகு]
- ஜப்பானிய கோபுரமரம்
- பகோடா மரம்.
மரத்தின் அமைவு[தொகு]
இம்மரம் 65 அடி உயரம் வளரக்கூடியது. இதனுடைய மரம் முதிர்ச்சியடையும் காலத்தில் ஆச்சரியமாக முறுக்கிக்கொண்டும், முடிச்சு போல் இருக்கும். இம்மரம் பார்ப்பதற்கு கோபுரம் போல் இருக்கும். இதனுடைய கிளைகள் நாலாபுறமும் பிரிந்து பறந்து தொங்கிக் கொண்டிருக்கும். பார்ப்பதற்கு ஒரு கோபுரம் போலவோ அல்லது தேர் போலவோ இருக்கும். இதனுடைய பூக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனுடைய
சிறிய காய் கயிறால் கோர்த்த நெக்லஸ் போல் இருக்கும். இதனுடைய பூக்கள் மற்றும் காயில் இருந்து மஞ்சள் நிற சாயம் கிடைக்கிறது.
காணப்படும் பகுதிகள்[தொகு]
இம்மரம் சீனாவை சேர்ந்தது ஆகும். ஜப்பான் நாட்டில் அதிகமாக நட்டுள்ளனர் இதனுடைய சாதியில் 25 இனங்கள் உள்ளன. சோபோரா என்பது ஆரேபியாவின் பெயராகும்.
மேற்கோள்[தொகு]
| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001