உள்ளடக்கத்துக்குச் செல்

கோபிநாத்து சாகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியாகி கோபிநாத்து சாகா

கோபிநாத்து சாகா (Gopinath Saha) இந்திய சுதந்திர இயக்கத்தின் ஓர் உறுப்பினராக இருந்தார். வங்காளியான இவர் 1905ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 16ஆம் தேதியன்று பிறந்தார். கோபி மோகன் சாகா என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார்.[1] புரட்சிகர இயக்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு தலைவராகவும், அப்போதைய கல்கத்தா காவல்துறையின் துப்பறியும் துறையின் தலைவராகவும் இருந்த சார்லசு டெகார்ட்டை இவர் 1924ஆம் ஆண்டு சனவரி மாதம் 12ஆம் தேதியன்று படுகொலை செய்ய முயன்றார்.[2] அதிகாரப்பூர்வ வேலைக்காக அங்கு சென்றிருந்த ஒரு வெள்ளைக்கார குடிமகனான எர்னசுட்டு டே (பிறப்பு 1888) என்பவரை தவறாகக் கொன்றதால், கோபிநாத்து சாகாவின் முயற்சி தோல்வியடைந்தது.[3] சாகா கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 1924ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 1ஆம் தேதியன்று அலிப்பூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

கோபிநாத்து சாகா சிறீராம்பூர் நகரில் பிறந்தார். இதன் முந்தைய பெயர் பிரிக்கப்படாத வங்காளத்தின் செராம்பூர் என்பதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Kalikatha, Via Bypass - Page 30
  2. ↑ Gupta, Amit Kumar (1997). "Defying Death: Nationalist Revolutionism in India, 1897-1938". Social Scientist 25 (9/10 Date=Sep. - Oct. 1997): 3–27. doi:10.2307/3517678. (subscription required)
  3. ↑ michaelnoir (2024-01-12). "[January 12th, 1924] Bengali activist Gopinath Saha shot a man he thought was Calcutta police commissioner Charles Tegart, but learned that he had killed a different Englishman, Ernest Day, instead. Saha was sentenced to death for the crime and hanged on March 1". r/100yearsago. Retrieved 2024-01-15.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிநாத்து_சாகா&oldid=4320646" இலிருந்து மீள்விக்கப்பட்டது