கோபிசந்த் இறகுப்பந்தாட்ட அகாதமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபிசந்த் இறகுப்பந்தாட்டப் பயிலகம்
Named afterபுல்லேலா கோபிசந்த்
உருவாக்கம்2008; 16 ஆண்டுகளுக்கு முன்னர் (2008)
நிறுவனர்புல்லேலா கோபிசந்த்
வகைஇறகுப்பந்தாட்டப் பயிலகம்
தலைமையகம்
சேவை
இந்தியா
வலைத்தளம்https://gopichandacademy.com/

புல்லேலா கோபிசந்த் இறகுப்பந்தாட்டப் பயிலகம் அல்லது கோபிசந்த் இறகுப்பந்தாட்ட அகாதமி (Pullela Gopichand Badminton Academy (PGBA)) என்பது இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத் நகரிலுள்ள ஒரு இறகுப்பந்தாட்டப் பயிற்சிக் கூடம்.[1] அனைத்து இங்கிலாந்து திறந்தவெளி இறகுப்பந்தாட்ட வாகையர் பட்டத்தை வென்ற புல்லேலா கோபிசந்த். இந்தப் பயிலகத்தை 2008 ஆம் ஆண்டு நிறுவினார். சாய்னா நேவால், பி. வி. சிந்து, சிறீகாந்த் கிடம்பி, பாருபள்ளி காஷ்யாப், பிரனாய் குமார், சாய் பிரணீத், சமீர் வெர்மா உள்ளிட்ட பலர் இங்கு பயிற்சி பெற்றுள்ளனர்.[2]

வரலாறு[தொகு]

2001 ஆம் ஆண்டு அனைத்து இங்கிலாந்து திறந்தவெளி இறகுப்பந்தாட்ட வாகையர் பட்டத்தை வென்ற போது கோபிசந்துக்கு 27 வயது, அவ்வேளையில் அவர் சில காயங்களால் அல்லலுற்றுக் கொணடிருந்தார். இறகுப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டிகளில் நீண்ட எதிர்காலம் இல்லாத காரணத்தினால் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு உலகத்தரம் வாய்ந்த இறகுபந்தாட்டப் பயிலகம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார் கோபிசந்த்.

கோபிசந்த் பெற்ற பட்டத்தின் காரணமாக ஆந்திர அரசாங்கம் அவருக்கு 2003ஆம் ஆண்டு ஐதரபாத்தில் காசிபௌலி பகுதியில் மிகக்குறைந்த விலையில் 45 ஆண்டுகால குத்தகைக்கு ஐந்து (5) ஏக்கர் நிலம் வழங்கியது.[3][4] அதே வேளையில் கோபிசந்த் யோனக்ஸ் நிறுவனத்திடம் ஏற்பாதரவையும் ஒரு வெளிநாட்டு பயிற்சியாளரையும் வேண்டினார்.[5][6]

பயிலகம்[தொகு]

2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கட்டப்பட்ட இந்தப் பயிலகத்தில் எட்டு அரங்குகளும், ஒரு நீச்சல் குளமும், எடைப் பயிற்சி அறையும், அருந்தகமும், உறங்குவதற்கு அறைகளும் உள்ளன. இந்தப் பயிலகத்தின் கட்டுமானம் பெங்களுருவில் உள்ள பிரகாஷ் பதுகோனே இறகுப்பந்தாட்ட பயிலகத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டது.[7]

போட்டிகள்[தொகு]

இந்தப் பயிலகத்தில் 2009 இந்தியத் திறந்தவெளி இறகுப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. 2009 பிஎம்எப் உலக வாகையர்களுக்கான போட்டியில் இது பயிற்சிக் களமாகப் பயன்படுத்தப்பட்டது.[7][8]

மேற்கோள்[தொகு]

  1. Amirapu, Deepika (20 August 2016). "How Indian badminton rocketed on the Gopichand shuttle". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2016-08-23.
  2. Dua, Aarti (1 August 2010). "Star maker". The Telegraph. http://www.telegraphindia.com/1100801/jsp/graphiti/story_12750158.jsp. 
  3. Anand, Geeta (6 October 2010). "Badminton Academy Trains Saina but Still Struggles". The Wall Street Journal. https://www.wsj.com/articles/SB10001424052748703726404575533462260048940. பார்த்த நாள்: 15 October 2010. 
  4. M, Chhaya (28 May 2004). "Yonex to fund Gopi's academy". ரெடிப்.காம். http://inhome.rediff.com/sports/2004/may/28gopi.htm. பார்த்த நாள்: 15 October 2010. 
  5. Mukhopadhyay, Atreyo (16 November 2003). "Gopichand to quit next year". The Telegraph. http://www.telegraphindia.com/1031116/asp/sports/story_2577346.asp. பார்த்த நாள்: 15 October 2010. 
  6. "Badminton academy at Hyderabad soon". இந்தியன் எக்சுபிரசு. 22 April 2003 இம் மூலத்தில் இருந்து 24 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110724201109/http://www.indiaexpress.com/news/sports/20030422-0.html. 
  7. 7.0 7.1 "Gopichand lives a dream through academy". The Hindu. 29 March 2009 இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108054035/http://www.hindu.com/thehindu/holnus/007200903281551.htm. 
  8. "WBC begins amid high security, all eyes on Saina". சிஎன்என்-ஐபிஎன். 10 August 2009 இம் மூலத்தில் இருந்து 12 ஆகஸ்ட் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090812080922/http://ibnlive.in.com/news/wbc-begins-amid-high-security-all-eyes-on-saina/98919-5.html. பார்த்த நாள்: 15 October 2010.