கோபிகா வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபிகா வர்மா
Gopika Varma
Gopika Varma.jpg
பிறப்புகோபிகா கோபால்[1]
திருவனந்தபுரம், கேரளம்
தேசியம்இந்தியர்
பணிநடனக் கலைஞர், நடன ஆசிரியர்
அறியப்படுவதுஇந்திய பாரம்பரிய நடனம்/ மோகினியாட்டம்
வாழ்க்கைத்
துணை
மார்த்தாண்ட வர்மா
விருதுகள்சங்கீத நாடக அகாதமி விருது
கலைமாமணி விருது

கோபிகா வர்மா (Gopika Varma) இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிறந்த மோகினியாட்ட நடனக் கலைஞர் மற்றும் நடன ஆசிரியர் ஆவார். இவர் இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையில் குடியேறினார். சங்கீத நாடக அகாடமி விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கோபிகா வர்மா திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தார். 1995 ஆம் ஆண்டு கேரளாவிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்து குடியேறினார். தனது மூன்று வயதில் தனது தாயிடமிருந்து நடனம் கற்கத் தொடங்கினார். 10 ஆவது வயதில், கிரிசா மற்றும் சந்திரிகா குருப் ஆகியோரிடம் மோகினியாட்டம் கற்கத் தொடங்கிய கோபிகா, பின்னர் கல்யாணிக்குட்டி அம்மா மற்றும் அவரது மகள் சிறீதேவி ராசனிடம் சிறப்புப் பயிற்சி பெற்றார். [2] மோகினியாட்டத்தின் அபிநயம் (நடிப்பு) பகுதியை கதகளி நிபுணரான காலமண்டலம் கிருட்டிணன் நாயரிடம் கற்றார். வாழியூர் ராமய்யர் பிள்ளையிடம் கோபிகா 18 ஆண்டுகள் பரதநாட்டியமும் பயின்றார்.

கல்யாணிக்குட்டி அம்மாதான் இவருக்கு குரு என்றாலும், மோகினியாட்டத்தில் கோபிகா வர்மா தனக்கே உரிய பாணியைப் பின்பற்றுகிறார். காவலம் நாராயண பணிக்கரின் கீழ் சொப்பனா பாணியில் மோகினியாட்டமும் இவர் ஆடியுள்ளார். [1] சென்னை நகரின் அடையாறில் "தாசுயம்" என்ற பெயரில் மோகினியாட்ட நடனப் பள்ளியை கோபிகா நடத்தி வருகிறார். [2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கோபிகா வர்மா திருவிதாங்கூர் மன்னர் சுவாதி திருநாள் ராம வர்மாவின் வழித்தோன்றல் பூரூர்ட்டாதி திருநாள் மார்த்தாண்ட வர்மாவை திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். [2] நடனப் பள்ளியை நடத்துவதைத் தவிர, உடல் ஊனமுற்றோருக்கான தங்குமிடத்தையும் அவர்களின் வேலைக்காக ஒரு நெசவுப் பிரிவையும் நடத்தி வருகிறார். சென்னை அடையாறில் உள்ள ராமாலயத்தில் கோபிகா வசித்து வருகிறார்.

குறிப்பிடத்தக்க நடன நிகழ்ச்சிகள்[தொகு]

கோபிகா இந்திய புராணங்களில் ஐந்து பிறக்காத கன்னிகளைப் பற்றி அயோனியா பஞ்சகன்யாகா என்ற பெயரில் நடனம் அமைத்து நடனமாடினார். [1] சுகதகுமாரி எழுதி எம். செயயச்சந்திரன் இயற்றிய ராதையெவிடே என்ற கவிதைக்கு மோகினியாட்ட வடிவில் கோபிகா நடனமாடியுள்ளார்.[1] யாமினி ரெட்டி, கிருத்திகா சுப்ரமணியம், கோபிகா வர்மா மற்றும் சுகாசினி ஆகியோர் இணைந்து அந்தரம் என்ற ஒரு நடனத்தை ஆடினர் .[3] சாயாமுகி இவர் செய்த மற்றொரு நடன நிகழ்ச்சியாகும். [4] இரவீந்திரநாத் தாகூரின் 150 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்திய புராணக் கதாபாத்திரங்களான குந்தி மற்றும் அகல்யாவின் நடன நிகழ்ச்சியும் குறிப்பிடத்தக்கது. [5] இப்போது சங்கராச்சாரியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நடன அமைப்பை உருவாக்கி வருகிறார். [6]

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

 • சங்கீத நாடக அகாடமி விருது 2018 [7]
 • கலைமாமணி 2004 [8] மோகினியாட்டத்திற்காக கலைமாமணியைப் பெற்ற முதலாவது நடனக் கலைஞர். [4]
 • கிருட்டிணா கான சபையின் நிருத்ய சூடாமணி விருது 2010 [2]
 • அபிநய கலா ரத்னா சிறப்பு விருது [9]
 • சத்ய அபிநய சுந்தரம் 2007 [9]
 • காலதர்ப்பணம் விருது 2003 [9]
 • பாரத் கலாச்சரால் யுவ கலா பாரதி விருது 2001. இந்த விருதைப் பெறும் முதல் மோகினியாட்ட நடனக் கலைஞர் இவர்தான். [10]
 • அவுஸ் ஆஃப் காமன்சு அமைப்பு வழங்கிய சிறந்த செயல்திறன் விருது - இலண்டன் 2003 [11]
 • சத்ய அபிநய சுந்தரம் [12]
 • நாட்டிய கலா விபஞ்சி [12]
 • ராசகீய புரசுகாரம் [12]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 "ഗോപികാ വസന്തം" (in en). Janmabhumi. https://www.janmabhumi.in/read/news37570/. "ഗോപികാ വസന്തം". Janmabhumi.
 2. 2.0 2.1 2.2 2.3 "GOPIKA VARMA - www.artindia.net - Indian classical performing arts". www.artindia.net.
 3. "നാലു ഗോപികമാരുടെ അന്തരം രൂപാന്തരം". ManoramaOnline. https://www.manoramaonline.com/women/work-and-life/dance.html. 
 4. 4.0 4.1 ശശിധരന്‍, ശബ്‌ന. "മോഹിനിയാട്ടത്തെ സ്വന്തം പ്രാണനോടൊപ്പം ചേര്‍ത്ത് വയ്ക്കുന്നവര്‍" (in en). Mathrubhumi. Archived from the original on 2022-02-04. https://web.archive.org/web/20220204092352/https://www.mathrubhumi.com/women/features/mohiniyattam-dancers-speaks-covid19-corona-virus-lockdown-1.4756872. ശശിധരന്‍, ശബ്‌ന. "മോഹിനിയാട്ടത്തെ സ്വന്തം പ്രാണനോടൊപ്പം ചേര്‍ത്ത് വയ്ക്കുന്നവര്‍" பரணிடப்பட்டது 2022-02-04 at the வந்தவழி இயந்திரம். Mathrubhumi.
 5. "I want to spread joy through dance: Gopika Varma | Deccan Chronicle". Deccan Chronicle. Archived from the original on 2012-04-10. https://web.archive.org/web/20120410044226/http://www.deccanchronicle.com/tabloid/all-rounders/i-want-spread-joy-through-dance-gopika-varma-420. 
 6. "Philosophy on stage: when a Mohiniyattam exponent read Shankaracharya". OnManorama. https://www.onmanorama.com/lifestyle/women/2018/02/23/gopika-varma-mohiniyattam-dancer-philosophy-shankaracharya.html. 
 7. Kumar, Ranee (1 August 2019). "Gopika Varma bags the prestigious Sangeet Natak Akademi Award for Mohiniyattam dance" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/dance/crowning-glory/article28785046.ece. 
 8. Varma, Dr Anjana. "Gopika Varma speaks about transforming hurt to motivation" (in en). Mathrubhumi. https://english.mathrubhumi.com/features/specials/gopika-varma-speaks-about-transforming-hurt-to-motivation-1.4944050. 
 9. 9.0 9.1 9.2 "Gopika Varma | The Raza Foundation". www.therazafoundation.org (ஆங்கிலம்).
 10. "NAFO KALALAYAM – Nafoglobal Kuwait".
 11. "Dance festival opens with Mohiniyattam" (in en). Hindustan Times. 23 August 2014. https://www.hindustantimes.com/chandigarh/dance-festival-opens-with-mohiniyattam/story-gdsKkqsDHPTtriSI2tt8fM.html. 
 12. 12.0 12.1 12.2 Ganesh, Agila (24 June 2018). "The art of dance" (in en). Deccan Chronicle. https://www.deccanchronicle.com/lifestyle/books-and-art/240618/the-art-of-dance.html. Ganesh, Agila (24 June 2018). "The art of dance". Deccan Chronicle.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிகா_வர்மா&oldid=3485734" இருந்து மீள்விக்கப்பட்டது