கோபால் கணேஷ் அகர்க்கர்
கோபால் கணேசு அகர்க்கர் | |
---|---|
![]() கோபால் கணேசு அகர்க்கர் | |
பிறப்பு | சூலை 14, 1856 Tembhu, சத்தாரா மாவட்டம், மகாராஷ்டிரம், பிரிட்டிஷ் இந்தியா |
இறப்பு | 17 சூன் 1895 புனே, இந்தியா | (அகவை 38)
அமைப்பு(கள்) | தக்காண கல்விக் கழகம்(Deccan Education Society) |
கோபால் கணேசு அகர்க்கர் (14 சூலை 1856 - 17 சூன் 1895) என்பவர் மராட்டியத்தைச் சேர்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியும் கல்வியாளரும் ஆவார்.
இவர் மகாராஷ்டிரத்திலுள்ள சத்தாரா மாவட்டத்தில் 1856-ஆம் ஆண்டு ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தார். பால கங்காதர திலகருடன் நெருக்கமாகப் பணியாற்றி வந்த இவர் பின்னாளில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தனித்துச் சென்றார். சூத்திரக் என்னும் பத்திரிக்கையைத் தொடங்கி தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். பழைமையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை எதிர்த்தார். விதவைத் திருமணத்தை ஆதரித்தார்.
ஆஸ்த்துமா நோயினால் தனது 39-ஆம் வயதில் இறந்தார்.