உள்ளடக்கத்துக்குச் செல்

கோபால்தேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால்தேவ்
Gopaldev
பிறப்பு1540
நசீரா, சிவசாகர் மாவட்டம், அசாம்
இறப்பு1611
புனைபெயர்பபானிபூரியா கோபால் அட்டா

கோபால்தேவ் (Gopaldev) என்பவர் 1540–1611 ஆம் ஆண்டு காலத்தில்[1] இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வாழ்ந்த ஒரு கவிஞராவார். ஒரு நாடக ஆசிரியராகவும் கிழக்கு அசாமில் வைணவப் பிரிவின் தலைமைப் பிரசங்கியாகவும் அறியப்படுகிறார்.[2] அசாமின் பபானிபூரைச் சேர்ந்தவர் என்பதால் மக்கள் இவரை பபானிபூரியா கோபால் அட்டா என்று அழைத்தனர். மகாபுருசு சிறீமந்த சங்கர்தேவின் சீடராகவும் இவர் இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

கோபால்தேவ் 1540 ஆம் ஆண்டு அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள நசிராவில் தந்தை காமேசுவர் மற்றும் தாய் பச்ரங்கிக்கு மகனாகப் பிறந்தார். பின்னர் இவர்களது குடும்பம் காம்ரூப்பில் உள்ள பபானிபூருக்கு குடிபெயர்ந்தது. கோபால்தேவ் அங்கு ஒரு பிராமண அறிஞரின் கீழ் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். கோபால்தேவிற்கு ஒரு மகன் கமலேசுவர்தேவ் மற்றும் மகள் பத்மப்ரியா ஆகியோர் பிறந்தனர். பத்மப்ரியா 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதல் பெண் அசாமிய கவிஞர் என்று கூறப்படுகிறது.[3]

பணிகள்

[தொகு]

ஏகாசரண தர்மத்தின் வைணவ குருவாக, கோபால்தேவ், பச்சாலி மாவட்டத்தில் உள்ள பாத்சாலாவிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் கல்சர் சத்திரத்தை நிறுவி, அதை தனது பணி இடமாகப் பயன்படுத்தினார்.[3][4]

இலக்கியப் பணிகள்

[தொகு]

கோபால்தேவ் சன்மசாத்ரா, நந்துத்சவ் மற்றும் உத்தப்சன் போன்ற சில நாடகங்களை இயற்றினார். கோபி-உத்தப் சம்பத் மற்றும் ஆரம்பகால அசாமிய மொழியில் எழுதப்பட்ட சித்தர் பாடல்களையும் படைத்தார்.[3]

திதி

[தொகு]

அசாமின் நம்கார் மற்றும் சத்திரங்களில் கோபால்தேவின் பிறந்தநாள் கோபால்தேவின் திதியாகக் கொண்டாடப்படுகிறது இந்த நிகழ்வை முன்னிட்டு அசாம் அரசு இந்த நாளை விடுமுறை நாளாகவும் அறிவிக்கிறது.[5]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mitra, Ashok (1985). The Truth unites: essays in tribute to Samar Sen - Samar Ranjan Sen - Google Books. Retrieved 2013-05-25.
  2. "Garmur Sattra". Srimanta.net. Archived from the original on 29 September 2013. Retrieved 2013-05-25.
  3. 3.0 3.1 3.2 "The sattras of Kalsamhati". Srimanta.net. Archived from the original on 29 September 2013. Retrieved 2013-05-25.
  4. "Cherished cloisters of Assam". The Telegraph. 20 August 2004 இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304130152/http://www.telegraphindia.com/1040820/asp/northeast/story_3639284.asp. பார்த்த நாள்: 2013-05-25. 
  5. "GOPALDEV'S BIRTH ANNIVERSARY CELEBRATIONS". Hindustan Times (New Delhi, India). 4 May 2008. Archived from the original on 20 July 2018. Retrieved 2013-05-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்தேவ்&oldid=4365636" இலிருந்து மீள்விக்கப்பட்டது