கோபால்ட் போரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோபால்ட் போரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்டு போரைடு
இனங்காட்டிகள்
12006-77-8
EC number 235-722-7
பப்கெம் 13628825
பண்புகள்
CoB
வாய்ப்பாட்டு எடை 69.744
தோற்றம் அனல் தாங்கும் திண்மம்
அடர்த்தி 7.25 கி/செ.மீ3
உருகுநிலை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கோபால்ட் போரைடுகள் (Cobalt borides) என்பவை CoxBy [1] என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மங்களாகும் CoB மற்றும் Co2B.என்பவை இரண்டும் முக்கியமான கோபால்ட் போரைடுகளாகும். இவை மீவெப்பம் தாங்கும் பொருட்களாகும்.

பயன்பாடுகள்[தொகு]

பொருளறிவியல் பயன்பாடுகள்[தொகு]

கோபல்ட் போரைடு ஓர் ஆக்சிசனேற்ற எதிர்ப்பியாகும். கோபல்ட் போரைடின் இவ்வேதியியல் பண்பு இச்சேர்மத்தை மிகுந்த பயனுள்ள வேதிப் பொருளாக்குகிறது. உதாரணமாக, கோபால்ட் போரைடை மேற்பூச்சுகளாகப் பயன்படுத்தப்படும் போது உலோகப் பகுதிகளின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. அதிக அரிப்புக்கு ஆட்படும் மேற்பரப்புகளுக்குத் தேவையான எதிர்ப்பைக் கொடுக்கிறது. இத்தகைய பண்புகள் உயிர்மருத்துவ அறிவியலில் சிறப்புத்தன்மை கொண்ட மருந்து செலுத்து கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது[2].

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை[தொகு]

ஐதரசன் சேமிப்பு மற்றும் எரிபொருள் செல் நுட்பங்களில் கோபால்ட்டு போரைடைப் பயன்படுத்த ஆய்வுகள் நடக்கின்றன[3].

கரிமத் தொகுப்பு வினைகளில்[தொகு]

கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு பயனுள்ள ஐதரசனேற்ற வினையூக்கியாக கோபால்ட்டு போரைடு பயன்படுகிறது[4]. நைட்ரைல் ஒடுக்கத்தின் வழியாக முதல்நிலை அமீன்களைத் தயாரிக்கும் செயல்முறையில் கோபால்ட்டைக் கொண்டுள்ள மற்ற வினையூக்கிகளைக் காட்டிலும் கோபால்ட்டு போரைடு ஒரு தெரிவு செய்யப்பட்ட இடைநிலைத் தனிம வினையூக்கியாகப் பயன்படுகிறது[5].

தயாரிப்புகள்[தொகு]

பொருள்களின் மேற்பூச்சு[தொகு]

1500° செல்சியசு வெப்பநிலை போன்ற உயர் வெப்பநிலைகளில் கோபால்ட் போரைடு உற்பத்தி செய்யப்படுகிறது. இரும்பை போரைடாக்குதல் வினையின் மூலம் இரும்பின் மீது கோபால்ட்டு போரைடு பூச்சு பூசப்படுகிறது. இதனால் இரும்பின் மீது முதலில் FeB பூச்சும் பின்னர் Fe2B பூச்சும் பூசப்படுகின்றன. இங்கு கட்டு ஒட்டும் செயல்முறையைப் பயன்படுத்தி கோபால்ட்டு இரும்பு போரைடின் மீது படியவைக்கப்படுகிறது. 18 முதல் 22 நானோ மீட்டர் அளவுள்ள நுண் துகள்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன[6].

வினையூக்கி[தொகு]

கோபால்ட்(II) நைட்ரேட்டுடன் சோடியம் போரோ ஐதரடை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் வினைஊக்கியாகப் பயன்படும் கோபால்ட்டு போரைத் தயாரிக்கலாம்[4][7]. ஒடுக்கும் வினைக்கு முன்பாக பூசப்படும் வினையூக்கியின் மேற்பரப்பு பரவலாக்கப்படுகிறது. இதற்காக மற்றொரு பொருளின் மீது பெரும்பாலும் செயலூக்க கார்பன் மீது உப்பு பரப்பப்படுகிறது

மேற்கோள்கள்[தொகு]

  1. Haynes, William M. (2010). CRC Handbook of Chemistry and Physics (91 ). Boca Raton, Florida: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1439820773. 
  2. Yoon, Jin Kook; Man, Jung; Park, Sang Whan (2013). Methods for manufacturing of cobalt boride coating layer on surface of steels by using a pack cementation process. Patent Publication No. US 20130260160 A1. https://www.google.com/patents/US20130260160. 
  3. Schlesinger, H. I.; Brown, Herbert C.; Finholt, A. E.; Gilbreath, James R.; Hoekstra, Henry R.; Hyde, Earl K. (January 1953). "Sodium Borohydride, Its Hydrolysis and its Use as a Reducing Agent and in the Generation of Hydrogen". Journal of the American Chemical Society 75 (1): 215–219. doi:10.1021/ja01097a057. 
  4. 4.0 4.1 Nishimura, Shigeo (2001). Handbook of Heterogeneous Catalytic Hydrogenation for Organic Synthesis (1st ). Newyork: Wiley-Interscience. பக். 25–26 & 263. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780471396987. https://books.google.com/books?id=RjZRAAAAMAAJ&q=0471396982&dq=0471396982&hl=en&sa=X&ei=BCacVMTgN5LmoASd34KQCQ&ved=0CB8Q6AEwAA. 
  5. Barnett, Clive (1969). "Hydrogenation of Aliphatic Nitriles over Transition Metal Borides". Industrial & Engineering Chemistry Product Research and Development 8 (2): 145–149. doi:10.1021/i360030a009. 
  6. Kapfenberger, C.; Albert, B.; Pottgen, R.; Huppertz, H. (January 2014). Synthesis of cobalt boride nanoparticles using RF thermal plasma. Advanced Powder Technology Volume 25, Issue 1. doi:10.1016/j.apt.2013.06.002. 
  7. "Cobalt boride catalysts for hydrogen generation from alkaline NaBH4 solution". Materials Letters 59: 1748–1751. doi:10.1016/j.matlet.2005.01.058. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்_போரைடு&oldid=2648968" இருந்து மீள்விக்கப்பட்டது