கோபால்ட்(II) சல்பேட்டு
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(II) சல்பேட்டு
| |
வேறு பெயர்கள்
கோபால்ட்டசு சல்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
10124-43-3 ![]() 13455-34-0 (ஒற்றைநீரேற்று) ![]() 10026-24-1 (ஏழுநீரேற்று) ![]() | |
ChEBI | CHEBI:53470 ![]() |
ChemSpider | 23338 ![]() |
EC number | 233-334-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C17383 C19215 (ஏழுநீரேற்று) |
பப்கெம் | 24965 |
வே.ந.வி.ப எண் | GG3100000 (நீரிலி) GG3200000 (ஏழுநீரேற்று) |
| |
UNII | H7965X29HX ![]() Y8N698ZE0T (ஏழுநீரேற்று) ![]() |
பண்புகள் | |
CoSO4·(H2O)n (n=0,1,6,7) | |
வாய்ப்பாட்டு எடை | 154.996 கி/மோல் (நீரிலி) 173.01 கி/மோல் (ஒற்றைநீரேற்று) 263.08 கி/மோல் (அறுநீரேற்று) 281.103 கி/மோல் (ஏழுநீரேற்று) |
தோற்றம் | செம்படிக (நீரிலி, ஒற்றைநீரேற்று) இளஞ்சிவப்பு உப்பு (அறுநீரேற்று) |
மணம் | நெடியற்றது (ஏழுநீரேற்று) |
அடர்த்தி | 3.71 கி/செ.மீ3 (நீரிலி) 3.075 கி/செ.மீ3 (ஒற்றைநீரேற்று) 2.019 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |

கோபால்ட்(II) சல்பேட்டு (Cobalt(II) sulfate) என்பது CoSO4(H2O)x என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டு கட்டமைப்பைக் கொண்டிருக்கும் எந்தவொரு கோபால்ட்டு சேர்மத்தையும் குறிக்கும். பொதுவாக கோபால்ட் சல்பேட்டு என்பது முறையே ஆறு அல்லது ஏழுநீரேற்று CoSO4.6H2O அல்லது CoSO4.7H2O சேர்மத்தைக் குறிக்கிறது.[1] ஏழுநீரேற்று சேர்மம் நீரிலும் மெத்தனாலிலும் கரையக்கூடிய ஒரு சிவப்பு நிற திடப்பொருளாகும். கோபால்ட்(II) ஒற்றைப்படை எண்ணிக்கையிலான எலக்ட்ரான்களைக் கொண்டிருப்பதால், இதன் உப்புகள் பாரா காந்தத்தன்மை கொண்டவையாக உள்ளன.
தயாரிப்பு
[தொகு]உலோக கோபால்ட், இதன் ஆக்சைடு, ஐதராக்சைடு அல்லது கார்பனேட்டு ஆகியவற்றை நீரிய கந்தக அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கலாம்:[1]
- Co + H2SO4 + 7 H2O -> CoSO4(H2O)7 + H2
- CoO + H2SO4 + 6 H2O -> CoSO4(H2O)7
அறை வெப்பநிலையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான ஈரப்பதத்தில் மட்டுமே ஏழுநீறேற்று நிலையாக இருக்கும். இல்லையெனில் அது அறுநீரேற்றாக மாறுகிறது.[2] அறுநீரேற்று ஒற்றைநீரேற்றாகவும் நீரற்றதாகவும் முறையே 100 மற்றும் 250 °செல்சியசு வெப்பநிலையில் உருவாகிறது.[1]
- CoSO4(H2O)7 -> CoSO4(H2O)6 + H2O
- CoSO4(H2O)6 -> CoSO4(H2O) + 5 H2O
- CoSO4(H2O) -> CoSO4 + H2O
அறுநீரேற்று என்பது சல்பேட்டு எதிர்மின் அயனிகளுடன் தொடர்புடைய எண்முகி [Co(H2O)6]2+ அயனிகளைக் கொண்ட ஒரு உலோக நீரிய அணைவுச்சேர்மமாகும். (அட்டவணையில் உள்ள படத்தைப் பார்க்கவும்).[3] ஒற்றைநூரேற்று ஏழுநீரேற்று எக்சு-கதிர் படிகவியலால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது [Co(H2O)6]2+ எண்முகி மற்றும் படிகமயமாக்கல் நீர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[2]
நீரேற்றப்பட்ட கோபால்ட்(II) சல்பேட்டு நிறமிகளைத் தயாரிப்பதிலும், பிற கோபால்ட் உப்புகள் தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. கோபால்ட் நிறமி பீங்கான்கள் மற்றும் கண்ணாடிகளில் பயன்படுத்தப்படுகிறது. கோபால்ட்(II) சல்பேட்டு சேமிப்பு மின்கலன்கள் மற்றும் மின்முலாம் பூசுதல் குளியல், புலப்படாத மைகள் மற்றும் மண் மற்றும் விலங்கு தீவனங்களில் ஒரு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நோக்கங்களுக்காக, கோபால்ட் ஆக்சைடை கந்தக அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் கோபால்ட் சல்பேட்டு தயாரிக்கப்படுகிறது.[1]
வணிக ரீதியாக பொதுவாகக் கிடைப்பதால், ஏழுநீரேற்று ஒருங்கிணைப்பு வேதியியலில் கோபால்ட்டின் வழக்கமான மூலமாகப் பயனாகிறது.[4]
பயன்கள்
[தொகு]கோபால்ட் சல்பேட்டுகள் அதன் தாதுக்களிலிருந்து கோபால்ட்டைப் பிரித்தெடுப்பதில் முக்கியமான இடைநிலைப் பொருட்களாகும். இதனால், நொறுக்கப்பட்ட, பகுதியளவு சுத்திகரிக்கப்பட்ட தாதுக்கள் கந்தக அமிலத்துடன் சேர்த்து சூடாக்கப்பட்டு கோபால்ட் சல்பேட் கொண்ட சிவப்பு நிறக் கரைசல்கள் கிடைக்கின்றன.[1]
இயற்கைத் தோற்றம்
[தொகு]அரிதாக, கோபால்ட்(II) சல்பேட்டு சில படிக நீரேற்றுத் தாதுக்களின் வடிவத்தில் காணப்படுகிறது. முதன்மை Co தாதுக்கள் (சுகட்டுருடைட்டு அல்லது கோபால்டைட்டு போன்றவை) கொண்ட ஆக்சிசனேற்ற மண்டலங்களில் தோன்றுகிறது. பைபியரைட்டு (ஏழுநீரேற்று), மூர்ரவுசைட்டு (Co,Ni,Mn)SO4.6H2O,[5][6] அப்லோவைட்டு (Co,Mn,Ni)SO4.4H2O மற்றும் கோபால்ட்கீசரைட்டு (ஒற்றைநீரேற்று).என்பவை இந்த கனிமங்களாகும்.[7][8][6]
உடல்நல விளைவுகள்
[தொகு]பாலூட்டிகளுக்கு கோபால்ட் ஓர் அத்தியாவசிய கனிமமாகும். ஆனால் ஒரு நாளைக்கு சில மைக்ரோகிராம்களுக்கு மேல் இருந்தால் தீங்கு விளைவிக்கும். கோபால்ட் சேர்மங்களால் அரிதாகவே நச்சுத்தன்மை ஏற்பட்டாலும், அவற்றின் நாள்பட்ட உட்கொள்ளல் ஆபத்தான அளவை விட மிகக் குறைந்த அளவுகளில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. 1965 ஆம் ஆண்டில், கனடாவில் பீர் நுரையை நிலைப்படுத்த ஒரு கோபால்ட் சேர்மம் சேர்க்கப்பட்டது. நச்சுத்தன்மையால் தூண்டப்பட்ட இதயத்தசை நோயின் ஒரு விசித்திரமான வடிவத்திற்கு வழிவகுத்தது. இது பீர் குடிப்பவர்களின் இதயத்தசை நோய் என்று அறியப்பட்டது.[9][10][11]
மேலும், கோபால்ட்(II) சல்பேட்டு புற்றுநோயை உண்டாக்குவதாக சந்தேகிக்கப்படுகிறது.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Donaldson, John Dallas; Beyersmann, Detmar (2005), "Cobalt and Cobalt Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a07_281.pub2
- ↑ 2.0 2.1 Redhammer, G. J.; Koll, L.; Bernroider, M.; Tippelt, G.; Amthauer, G.; Roth, G. (2007). "Co2+-Cu2+ Substitution in Bieberite Solid-Solution Series, (Co1−xCux)SO4 · 7H2O, 0.00 ≤ x ≤ 0.46: Synthesis, Single-Crystal Structure Analysis, and Optical Spectroscopy". American Mineralogist 92 (4): 532–545. doi:10.2138/am.2007.2229. Bibcode: 2007AmMin..92..532R.
- ↑ Elerman, Y. (1988). "Refinement of the crystal structure of CoSO4.6H2O". Acta Crystallographica Section C Crystal Structure Communications 44 (4): 599–601. doi:10.1107/S0108270187012447. Bibcode: 1988AcCrC..44..599E.
- ↑ Broomhead, J. A.; Dwyer, F. P.; Hogarth, J. W. (1950). "Resolution of the Tris(ethylenediamine)cobalt(III) Ion". Inorganic Syntheses. Vol. 6. pp. 183–186. doi:10.1002/9780470132371.ch58. ISBN 9780470132371.
- ↑ "Moorhouseite".
- ↑ 6.0 6.1 "List of Minerals". 21 March 2011.
- ↑ "Cobaltkieserite".
- ↑ "Bieberite".
- ↑ Morin Y; Tětu A; Mercier G (1969). "Quebec beer-drinkers' cardiomyopathy: Clinical and hemodynamic aspects". Annals of the New York Academy of Sciences 156 (1): 566–576. doi:10.1111/j.1749-6632.1969.tb16751.x. பப்மெட்:5291148. Bibcode: 1969NYASA.156..566M.
- ↑ Barceloux, Donald G.; Barceloux, Donald (1999). "Cobalt". Clinical Toxicology 37 (2): 201–216. doi:10.1081/CLT-100102420. பப்மெட்:10382556.
- ↑ 11.1.5 The unusual type of myocardiopathy recognized in 1965 and 1966 in Quebec (Canada), Minneapolis (Minnesota), Leuven (Belgium), and Omaha (Nebraska) was associated with episodes of acute heart failure (e/g/, 50 deaths among 112 beer drinkers).
- ↑ "Cobalt in Hard Metals and Cobalt Sulfate, Gallium Arsenide, Indium Phosphide and Vanadium Pentoxide" (PDF). IARC Monographs on the Evaluation of Carcinogenic Risks to Humans.