கோபாலர் மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபாலர் மா
Gopaler-Ma t.jpg
கோபாலர் மா,
தாய்மொழியில் பெயர்அகோரமணி தேவி
பிறப்புஅகோரமணி தேவி
1822
கமர்ஹாட்டி, கொல்கத்தா
இறப்பு(1906-07-08)8 சூலை 1906
கொல்கத்தா
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்கமர்ஹாட்டி பிராமணி
குடியுரிமைஇந்தியர்
பணிசீடர்
அறியப்படுவதுஆன்மீக ஈடுபாடு

கோபாலர் மா (Gopaler Ma) (மொழிபெயர்ப்பு: கோபாலனின் தாய், இந்துக் கடவுள் கிருட்டிணனின் பெயரடை; 1822 - 8 சூலை 1906) வங்காளத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரியும் இராமகிருஷ்ணரின் பக்தரும், சீடருமாவாவார். இவருடைய இயற்பெயர் அகோரமணி தேவி என்பதாகும். ஆனால் "கோபாலன்" அல்லது உன்னிகிருஷ்ணன் வடிவில் பகவான் இராமகிருஷ்ணர் மீது இருந்த தாயன்பு காரணமாக இராமகிருஷ்ணரின் பக்தர்களிடையே, இவர் 'கோபாலர் மா' என்று அழைக்கப்பட்டார்.[1] [2] இவர் இராமகிருஷ்ணரின் கொள்கைகளுக்காகவும், பகவான் கிருட்டிணரின் தெய்வீக தரிசனங்களுக்காகவும் அறியப்பட்டார். பிற்காலத்தில் இவர் விவேகானந்தர், சகோதரி நிவேதிதை ஆகியோருடன் மிகவும் நெருக்கமானார். சகோதரி நிவேதிதையுடன் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளைக் கழித்தார்.

சுயசரிதை[தொகு]

அகோரமணி தேவி, ஒரு பிராமணக் குடும்பத்தில் 1822 ஆம் ஆண்டு கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள கமர்ஹாட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். அப்போது நடைமுறையிலிருந்த பழக்கவழக்கங்களின்படி, இவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோது திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான சில நாட்களிலேயே தனது பதினான்கு வயதில் விதவையானார்.[3] ஒரு விதவையாக இவர் கமர்ஹாட்டியில் உள்ள கிருட்டிணர் கோவிலில் அர்ச்சகராக இருந்த தனது சகோதரன் நீலமாதவ பந்தோபாத்யாயாவின் வீட்டில் வசித்து வந்தார்.[4] இவரது கணவரின் குடும்ப குடும்ப ஆசிரியர் இவரை ஆன்மீக வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றார். பகவான் உன்னிகிருஷ்ணன் இவர்களின் தனிப்பட்ட கடவுளாக கருதப்பட்டார். அவ்வப்போது கோவிலுக்குச் சென்றபோது, ​​கங்கை ஆற்றங்கரையில் கோவில் தோட்டத்தில் ஒரு சிறிய அறையை கொடுத்த உரிமையாளர் கோவிந்த சந்திர தத்தாவின் மனைவியை சந்தித்தார். அவர்கள் இவரது நகைகளையும் கணவனின் சொத்துக்களையும் விற்று கிடைத்த ஐநூறு ரூபாயை முதலீடு செய்தனர்.[3] அந்த சிறிய வருமானத்தைக் கொண்டு எளிமையாக வாழ்ந்தார்.[5][6] இவருடைய முழு நாளும் தியானம், மந்திரம் ஓதுதல், புனித மந்திரத்தை பாராயணம் செய்தல், அல்லது உன்னிகிருஷ்ணனின் தேர்ந்தெடுக்கப்பட்ட இலட்சியத்திற்கு சேவை செய்தல் போன்றவற்றில் கழிந்தது. இவர் 1852 முதல் 1883 வரை இந்த வழக்கத்தை பின்பற்றினாள்.[5] மேலும் நள்ளிரவு வரை தனது ஆன்மீக நடைமுறைகளைத் தொடர்ந்தார்.[1] மேலும்,புனித இடங்களான மதுரா, பிருந்தாவனம், வாரணாசி, அலகாபாத் ஆகிய இடங்கலுக்கு பயணம் செய்தார்.[3]

இராமகிருஷ்ணரைச் சந்தித்தல்[தொகு]

1884ஆம் ஆண்டில் இவர் தட்சினேசுவரர் கோவிலுக்குச் சென்றபோது இராமகிருஷ்ணரை முதன்முதலில் சந்தித்தார். இராமகிருஷ்ணர் கோவிந்த தத்தாவின் தோட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்று ஏற்பாடு செய்யப்பட்ட புனித திருவிழாவில் பங்கேற்றார்.[4]

தெய்வீக தரிசனங்கள்[தொகு]

ஓரிரவு, 1885 வசந்த காலத்தில், தனது வழக்கமான ஆன்மீக பயிற்சிகளைச் செய்யும் போது, கோபாலர் மா இராமகிருஷ்ணரின் தரிசனத்தைக் கொண்டிருந்தார். அவர் பத்து மாதக் குழந்தையாக மாறினார். தனது பரவச நிலையில், இவர் "கோபாலன்" என்று அழைத்த அந்த ஆண் குழந்தை, தன் குழந்தையைப் போல நடந்துகொள்வதையும், தன்னுடன் விளையாடுவதையும், தான் அளித்த உணவையும் ஏற்றுக்கொள்வதையும் உணர்ந்தார்.[4] மறுநாள் இராமகிருஷ்ணரைச் சந்திக்கச் சென்றார். தான் கண்ட தெய்வீகப் பார்வையின் உருவத்தை அவரிடம் கண்டார். நேரில் கண்ட சாட்சியின் கூற்றுப்படி, இவர் தெய்வீக பரவச நிலையிலும், மகிழ்ச்சியுடன் பைத்தியமாக இருந்தார்.[7] பின்னர் இவருடைய நடத்தை முறைகளில் தனித்துவமான மாற்றங்கள் இருந்தன. ஏனெனில் ஆரம்ப வெறி அடங்கியபோது தரிசனங்களுக்கு அமைதியானவராக மாறினார்.[7] இராமகிருஷ்ணர் இறுதியாக இவருடைய ஆன்மீக பயிற்சிகளின் இலக்கை அடைந்ததாக கூறினார். அதன் பிறகு, இவருடைய தெய்வீக தரிசனங்கள் நிறுத்தப்பட்டன.[5]

பிற்காலம்[தொகு]

சகோதரி நிவேதிதையின் வீட்டில் மரணப் படுக்கையில் கோபாலர் மா, சகோதரி நிவேதிதா (வலது), அவரது சீடரான குசும் உட்னகாணப்படுகின்றனர்

1886இல் ராமகிருஷ்ணர் மறைந்த பிறகு, கோபாலர் மா பரணாகர் மடத்திற்கும் ஆலம்பஜார் மடத்திற்கும் வருகை தந்தார். ஆனால் பொதுவாக தோட்டத்து வீட்டில் தனது அறையில் தங்கியிருந்து தனது ஆன்மீக பயிற்சிகளைத் தொடர்ந்தார். 1887ஆம் ஆண்டில், வழக்கமான கல்வி இல்லாதவராக இருந்தாலும், 1887ஆம் ஆண்டில் பலராம் போசின் வீட்டில் பக்தர்களை ஆச்சரியப்படுத்தினார். சுருக்கமான ஆன்மீக கருத்துக்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தார். கோபாலனிடமிருந்து பதில்கள் வந்ததாக கூறினார்.[7] 8 சூலை 1906 அன்று கொல்கத்தாவில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "story of Gopaler Ma at RKM Nagpur". 1 February 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 January 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. Great Swan, Meetings with Sri Ramakrishna, by Lex Hixon, Motilal Banarsidass, 1995, Chapter: Introduction to Indian Edition
  3. 3.0 3.1 3.2 "Life of Gopaler Ma". 2015-09-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-09-01 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 4.2 Ramakrishna, the Great Master, by Swami Saradananda, translated by Swami Jagadananda, Ramakrishna Math, Chennai, 1952, page 747
  5. 5.0 5.1 5.2 "Gopaler Ma, Belur Math site". 2018-01-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-09-01 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Women Devotees, Belur Math" defined multiple times with different content
  6. Gopaler Ma, boldsky article
  7. 7.0 7.1 7.2 They Lived with God, by Swami Chetanananda

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபாலர்_மா&oldid=3552145" இருந்து மீள்விக்கப்பட்டது